Thursday, October 31, 2019

C# லோக்கல் டேட்டா பேஸ் அப்ளிகேசன்.



 விசுவல் ஸ்டுடியோவில் டேட்டா பேஸ் சர்வர் ஏதும் பயன்படுத்தாமலேயே லோக்கல் டேட்டா பேஸ் பயன்படுத்தலாம்.
முதலில் விசுவல் ஸ்டுடியோவை ஓபன் செய்து. நீயூ பிராஜெக்ட் c# விண்டோஸ் பயன்பாடு ஒன்றினை உருவாக்கவும்.
இப்பொழுது சொலுய்சன் எக்ஸ்ப்ளோரரில் பிராஜெக்ட் பெயரை வலது கிளிக் செய்து ஆட் நீயூ ஐட்டம் சென்று local database என்பதை கிளிக் செய்யவும்.
அதன் பெயராக EmployeeDatabase என்று கொடுக்கவும் . அதற்கு அடுத்து வரும் விண்டோவில் dataset என்பதை செலெக்ட்  செய்து next கொடுத்து finish கொடுக்கவும்.
இப்பொழுது சொலூய்சன் எக்ஸ்ப்ளோரரில் reference என்பதில் புதிய கோப்புகள் சேர்ந்திருக்கும். அத்துடன் டேட்டாபேஸ் ஒன்றும் சேர்ந்திருக்கும்.
இப்பொழுது இடது பக்கம் சர்வர் எக்ஸ்புளோரில் employeeDatabase என்பதை வ்லது கிளிக் செய்து நீயூ டேபிள் என்பதை கிளிக் செய்து
பின் வருமாறு டேபிள் உருவாக்கவும்.
Id, name,surname,age,isMarried என ஐந்து ஃபீல்டுகள் உருவாக்கவும்.
Id என்பதை பிரைமரி கீ ஆகவும், ஆட்டோ இங்கிரிமெண்ட் ஆகவும் அமைக்கவும்.
டேபிள் பெயரை வலது கிளிக் செய்து show table data என்பதை கிளிக் செய்து கீழ் வரும் படி இரண்டு ரோ  ஆட் செய்யவும்
இப்பொழுது இடது பக்கம் டேட்டா சோர்ஸ் என்பதில் வலது கிளிக் செய்து add new data source என்பதை கிளிக் செய்யவும். பிறகு வரும் .
அடுத்து வரும் விண்டோவில்dataset என்பதை தேர்வு செய்து அடுத்து  EmployeeConnectionString என்பதை தேர்வு செய்து அடுத்து வரும் விண்டோவில் tables என்பதை விரிவு செய்து EmploeeInfo என்ற டேபிளில் எல்லா ஃபீல்டுகளையும் செலெக்ட் செய்து finish என்பதை சொடுக்கிடவும்.
இடது புறம் datasource விண்டோவில் EmployeeInfo என்பதில் வலது கிளிக் செய்து details என்பதை விரிவு செய்யவும்.
பிறகு EmployeeInfo என்பதை கிளிக் செய்து ஃபார்மில் டிராப் செய்யவும்.
பிறகு EmployeeIn fo என்பதில் கிளிக் செய்து datagridview என்பதை தேர்வு செய்யவும். பிறகு இப்பொழுது EmployeeInfo என்பதை கிளிக் செய்து ஃபார்மில் டிராக் அண்ட் டிராப்  செய்யவும்.
இப்பொழுது விண்டோ கீழ் வருமாறு இருக்கும்.
இப்பொழுது f5 பிரஸ் செய்து அப்ளிகேசனை இயக்கவும்.
இதில் நீங்கள் ப்ளஸ் ஐக்கானை கிளிக் செய்து புதிதாக டேட்டா ஆட் செய்யலாம். சேவ் (floppy icon) ஐக்கானை தேர்வு செய்து டேட்டாவை அப்டேட் செய்யலாம். கிராஸ் ஐக்கானை கிளிக் செய்து டேட்டாவை டெலீட் செய்யலாம்.
இப்பொழுது புதிதாக Addnew, save, delete என மூன்று பட்டன்களை ஃபார்மில் சேர்க்கவும். டிஃபால்ட் ஆக உள்ள ஐக்கான்களை பயன்படுத்தாமல் இந்த மூன்று பட்டன்களை பயன்படுத்தி எவ்வாறு Addnew, save, delete செய்யலாம் என பார்க்கலாம்.
ஒவ்வொன்றையும் டபிள் கிளிக் செய்து பின் வருமாறு  நிரல் எழுதவும்.
private void btnAddNew_Click(object sender, EventArgs e)
        {
            this.employeeInfoBindingSource.AddNew();
           
        }

        private void btnSave_Click(object sender, EventArgs e)
        {
            this.Validate();
            this.employeeInfoBindingSource.EndEdit();
            this.tableAdapterManager.UpdateAll(this.employeeDatabaseDataSet1);
        }

        private void btnDelete_Click(object sender, EventArgs e)
        {
            this.employeeInfoBindingSource.RemoveCurrent();

        }

இப்பொழுது ஃபார்மை ரன் செய்யவும்.
இப்பொழுது ஆட், அப்டேட், டெலீட் என்ற மூன்று செயல்களையும் பட்டன் உபயோகித்து செய்யலாம்.
மொத்த ரோக்களின் எண்ணிக்கை காட்டுதல்:
இப்பொழுடு புதிதாக ஒரு லேபிள் சேர்த்துக் கொள்ளவும் . அதன் பெயராக lblStatus என்பதை வைக்கவும்.
புதிதாக ஒரு டைமர் கன்ட்ரோல் ஒன்றை ஃபார்மில் சேர்க்கவும். பிறகு ஃபார்ம் லோட் ஈவண்டில் பின் வரும் வரியைச் சேர்க்கவும்.
timer1.Start();
இப்பொழுது டைமரை டபிள் கிளிக் செய்து பின் வருமாறு நிரல் எழுதவும்.
int counter = 0;

        private void timer1_Tick(object sender, EventArgs e)
        {
            counter = employeeInfoBindingSource.Count;
            lblStatus.Text = "totally" + counter.ToString() + " rows";

        }
F5 பிரஸ் செய்து இயக்கவும்.


புதிதாக ரோ சேர்த்தாலோ அல்லது டெலீட் செய்தாலோ உடனடியாக லேபிள் டெக்ஸ்ட் மாறும்.
நேவிகேசன் பட்டன்கள்.
இப்பொழுது இரண்டு (next, previous) பட்டன்களை சேர்க்கவும்.
இரண்டின் ஈவன்டிலும் பின் வருமாறு நிரல் எழுதவும்.
private void bttnNext_Click(object sender, EventArgs e)
        {
            employeeInfoBindingSource.MoveNext();

        }

        private void btnPrevious_Click(object sender, EventArgs e)
        {
            employeeInfoBindingSource.MovePrevious();
        }
பிறகு ஒரே ரோ இருந்தால் இரண்டு பட்டன்களும் visible என்பதை ஃபால்ஸ் ஆக மாற்ற டைமர் டிக் ஈவண்டில் பின் வரும் வரிகளை  சேர்க்கவும்.
if (counter < 2)
            {
                bttnNext.Visible = false;
                btnPrevious.Visible = false;
            }
            else
            {
                bttnNext.Visible = true;
                btnPrevious.Visible = true;

            }


இவ்வாறாக சி ஷார்ப்பில் லோக்கல் டேட்டாபேஸை பயன்படுத்தலாம்.
-நன்றி.
முத்து கார்த்திகேயன்,மதுரை.

ads Udanz

Friday, October 18, 2019

RestAPI என்றால் என்ன?



நீங்கள் வெப் டெவலப்மென்ட் உலகில் இருந்தால் நிச்சயமாக ரெஸ்ட்ஏபிஐ பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஜாவா, ஏஎஸ்பி அல்லது பிஹெஜ்பி எதுவாக இருந்தாலும் இதை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.
இப்பொழுது நீங்கள் ஒரு ஆன்ட்ராய்ட் மொபைல் ஆப் உருவாக்க விரும்புகின்றீர்கள் எடுத்துக் கொள்வோம். உதாரணத்திற்கு வெதர் ரிப்போர்ட் ஆப் உருவாக்க விரும்புகின்றீர்கள்.
ஒன்றை மனதில் வைத்துக் கொள்ளுங்கள் வெதர் என்பது ஸ்டேட்டிக் டேட்டா கிடையாது. அது டைனமிக் டேட்டா. காலை 6 மணிக்கு ஒரு டெம்பரேச்சர்  இருக்கும். மதியம் 12 மணிக்கு ஒரு டெம்பரேச்சர் இருக்கும்.
இதை எப்படி கணக்கிடுவது?
உங்கள் அறையில் சென்சார் பொருத்தப்பட்டிருந்தால் இது உங்கள் ரூம் டெம்பரேச்சர் காட்டும். வெளியே உள்ள டெம்பரேச்சர் காட்டாது. அப்படி தேவைப்பட்டால் சென்னை முழுவதும் சென்சார் பொருத்தப்ப்ட வேண்டும்.
இதற்கு ஆகும் செலவு மிகவும் அதிகபட்சயமாக இருக்கும்.
அதற்கு பதில் வெப் சர்வரை அனுகினால் அது எல்லா டெம்பரேச்சர்களயும் ரிடர்ன் செய்யும்.இது வெப் சர்வீஸ் எனப்படும்.
நீங்கள் ஒரு மொபைல் அல்லது கிளையண்டிலிருந்து சர்வருக்கு கோரிக்கை செய்கின்றீர்கள். அது ஒரு ஜாவா சர்வராக இருக்கும் பட்சத்தில் அது செர்வ்லெட்டை அனுப்பும்.
ஆனால் நமக்கு தேவைப்படுவது டேட்டா அன்றி வெப் பேஜ் கிடையாது.
எனவே டேட்டாவனது கேட்டாக் அது டேட்டாவை XML அல்ல்து JSON ஃபார்மட்டில் இருக்கும்.
Xml எனில்
<country>
<city>
<temp>33</temp>
<humidity>40</humidity>
</city>
</country>
Json எனில்
{“country”:{
“city”:{
“Temp”:33,
“humidity”:40
}
}
}
என இருக்கும்.
இது டேட்டாவை மட்டும் அனுப்பினாலும் இது ஓவர்ஹெட்டை உருவாக்கின்றது.இதற்கு மாற்றாக ஒரு சிம்பிள் சொலுசன் தேவைப்படுகின்றது அது தான் RestAPI ஆகும்.
டேட்டாவை அனுப்புவதற்கு பதில் சர்வர் பக்கம் ஒரு ஆப்ஜெக்டை உருவாக்கி அதன் மதிப்பை ரிடர்ன் செய்ய வேண்டும்.
டேட்டாவை xml அல்லது json ஃபார்மட்டில் இருக்கும். உங்களிடம் ஆப்ஜெக்ட் இருக்கின்றது. அதன் ஸ்டேட்டை ரிடர்ன் செய்ய வேண்டும்.இது தான் ரிபெப்ரன்சேட்ட்பிள் ஸ்டேட் ஆப்ஜெக்ட் ஆகும்.
ரிசோர்ஸை பயன்படுத்தி நாம் பொதுவாக நாம் நான்கு வேலைகள் செய்வோம் அது க்ரியேட், ரீட், அப்டேட், டெலீட் ஆகும்.
இந்த வெப் டெக்னாலஜி உலகில் நாம் செர்வரிடம் இருந்து சில விசயங்களை எதிர்பார்க்கின்றோம். உதாரணத்திற்கு நாம் சர்வரிடம் இரண்டு எண்களை கூட்டச் சொல்கின்றோம். இது நார்மல் http request ஆக இருந்தால் பொதுவாக இப்படி இருக்கும்.
இன்னும் ஒரு சான்று
இவற்றுக்கு பதில்
என்றால் நன்றாக இருக்கும்.
ஏனெனில் உங்களுக்கு தேவைப்படுவது ஒரு ரிசோர்ஸ்.
நீங்கள் தேவைப்படுவது உள்ளது உள்ளபடி இருக்கும் டேட்டா ஆகும்.உங்களுக்கு கிடைப்பது ரிசோர்ஸ் ஆகும்.
ரிசோர்ஸை பயன்படுத்தி நாம் செய்யும் ஆபரேசன்கள் crud ஆகும்.
c-  Create-post
R-read—get
u-update—put
d-Delete-delete
அதாவது post, get, put, delete என்ற http மெத்தட்களை பயன்படுத்தி இந்த வேலைகளை ரெஸ்டஏபிஐ செய்கின்றது. இதற்கு சோப் வெப் சர்வீசஸ் இருந்தது. இப்பொழுடு அதற்கு மாற்றாக ரெஸ்ட் ஏபிஐ இப்பொழுது பயன்படுகின்றது.
நன்றி.
முத்து கார்த்திகேயன்,மதுரை.


ads Udanz