Friday, October 18, 2019

RestAPI என்றால் என்ன?



நீங்கள் வெப் டெவலப்மென்ட் உலகில் இருந்தால் நிச்சயமாக ரெஸ்ட்ஏபிஐ பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஜாவா, ஏஎஸ்பி அல்லது பிஹெஜ்பி எதுவாக இருந்தாலும் இதை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.
இப்பொழுது நீங்கள் ஒரு ஆன்ட்ராய்ட் மொபைல் ஆப் உருவாக்க விரும்புகின்றீர்கள் எடுத்துக் கொள்வோம். உதாரணத்திற்கு வெதர் ரிப்போர்ட் ஆப் உருவாக்க விரும்புகின்றீர்கள்.
ஒன்றை மனதில் வைத்துக் கொள்ளுங்கள் வெதர் என்பது ஸ்டேட்டிக் டேட்டா கிடையாது. அது டைனமிக் டேட்டா. காலை 6 மணிக்கு ஒரு டெம்பரேச்சர்  இருக்கும். மதியம் 12 மணிக்கு ஒரு டெம்பரேச்சர் இருக்கும்.
இதை எப்படி கணக்கிடுவது?
உங்கள் அறையில் சென்சார் பொருத்தப்பட்டிருந்தால் இது உங்கள் ரூம் டெம்பரேச்சர் காட்டும். வெளியே உள்ள டெம்பரேச்சர் காட்டாது. அப்படி தேவைப்பட்டால் சென்னை முழுவதும் சென்சார் பொருத்தப்ப்ட வேண்டும்.
இதற்கு ஆகும் செலவு மிகவும் அதிகபட்சயமாக இருக்கும்.
அதற்கு பதில் வெப் சர்வரை அனுகினால் அது எல்லா டெம்பரேச்சர்களயும் ரிடர்ன் செய்யும்.இது வெப் சர்வீஸ் எனப்படும்.
நீங்கள் ஒரு மொபைல் அல்லது கிளையண்டிலிருந்து சர்வருக்கு கோரிக்கை செய்கின்றீர்கள். அது ஒரு ஜாவா சர்வராக இருக்கும் பட்சத்தில் அது செர்வ்லெட்டை அனுப்பும்.
ஆனால் நமக்கு தேவைப்படுவது டேட்டா அன்றி வெப் பேஜ் கிடையாது.
எனவே டேட்டாவனது கேட்டாக் அது டேட்டாவை XML அல்ல்து JSON ஃபார்மட்டில் இருக்கும்.
Xml எனில்
<country>
<city>
<temp>33</temp>
<humidity>40</humidity>
</city>
</country>
Json எனில்
{“country”:{
“city”:{
“Temp”:33,
“humidity”:40
}
}
}
என இருக்கும்.
இது டேட்டாவை மட்டும் அனுப்பினாலும் இது ஓவர்ஹெட்டை உருவாக்கின்றது.இதற்கு மாற்றாக ஒரு சிம்பிள் சொலுசன் தேவைப்படுகின்றது அது தான் RestAPI ஆகும்.
டேட்டாவை அனுப்புவதற்கு பதில் சர்வர் பக்கம் ஒரு ஆப்ஜெக்டை உருவாக்கி அதன் மதிப்பை ரிடர்ன் செய்ய வேண்டும்.
டேட்டாவை xml அல்லது json ஃபார்மட்டில் இருக்கும். உங்களிடம் ஆப்ஜெக்ட் இருக்கின்றது. அதன் ஸ்டேட்டை ரிடர்ன் செய்ய வேண்டும்.இது தான் ரிபெப்ரன்சேட்ட்பிள் ஸ்டேட் ஆப்ஜெக்ட் ஆகும்.
ரிசோர்ஸை பயன்படுத்தி நாம் பொதுவாக நாம் நான்கு வேலைகள் செய்வோம் அது க்ரியேட், ரீட், அப்டேட், டெலீட் ஆகும்.
இந்த வெப் டெக்னாலஜி உலகில் நாம் செர்வரிடம் இருந்து சில விசயங்களை எதிர்பார்க்கின்றோம். உதாரணத்திற்கு நாம் சர்வரிடம் இரண்டு எண்களை கூட்டச் சொல்கின்றோம். இது நார்மல் http request ஆக இருந்தால் பொதுவாக இப்படி இருக்கும்.
இன்னும் ஒரு சான்று
இவற்றுக்கு பதில்
என்றால் நன்றாக இருக்கும்.
ஏனெனில் உங்களுக்கு தேவைப்படுவது ஒரு ரிசோர்ஸ்.
நீங்கள் தேவைப்படுவது உள்ளது உள்ளபடி இருக்கும் டேட்டா ஆகும்.உங்களுக்கு கிடைப்பது ரிசோர்ஸ் ஆகும்.
ரிசோர்ஸை பயன்படுத்தி நாம் செய்யும் ஆபரேசன்கள் crud ஆகும்.
c-  Create-post
R-read—get
u-update—put
d-Delete-delete
அதாவது post, get, put, delete என்ற http மெத்தட்களை பயன்படுத்தி இந்த வேலைகளை ரெஸ்டஏபிஐ செய்கின்றது. இதற்கு சோப் வெப் சர்வீசஸ் இருந்தது. இப்பொழுடு அதற்கு மாற்றாக ரெஸ்ட் ஏபிஐ இப்பொழுது பயன்படுகின்றது.
நன்றி.
முத்து கார்த்திகேயன்,மதுரை.


ads Udanz

No comments:

Post a Comment