Thursday, October 17, 2019

ஜெசன்(json) என்பது என்ன?



ஜெசன் என்பது ஜாவா ஸ்கிரிப்ட் ஆப்ஜெக்ட் நொடேசன் ஆகும்.
 இது டேட்டாவை சர்வரிலிருந்து கிளையண்டுக்கு அனுப்பும்  டேட்டா ஃபார்மட் ஆகும்.
நாம் முதலில் ஸ்டாட்டிக் வெப் பக்கங்களை பயன்படுத்தினோம். ஆனால் இப்பொழுது டைனமிக் வெப் பக்கங்களை பயன்படுத்தி வருகின்றோம்.
நாம் கிளையண்டிலிருந்து சர்வருக்கு கோரிக்கை அனுப்புகின்றோம்.சர்வர் பதிலுக்கு ஒரு வெப் பக்கத்தை அனுப்புகின்றது. ஆனால் கிளையண்டில் ஏற்கனவே டிசைன் இருக்கின்றது. நமக்கு தேவை டேட்டா மட்டும் தான்.
அதை டெக்ஸ்ட்/பிளைன் ஃபார்மட்டில் அனுப்பினால் கிளையண்ட் தனித்தனியாக பிரித்தெடுக்க முடியாது.
எனவே நாம் ஜெசன் ஃபார்மட்டில் அனுப்பினால் அதை கிளையண்ட் புரிந்து கொள்ளும்.
உதாரணத்திற்க்கு ஒரு employee பற்றிய டேட்டாவை அனுப்ப வேண்டும்.
அதாவது
Emp id=101,
Ename=”karthikeyan”,
Salary=”27000”,
Department=”admin”
மேலே உள்ள டேட்டாவை கீழ் வரும் படி ஜெசன் ஃபார்மட்டில் இருக்கும்.
Var emp{
Eid:”101”,
Ename:”karthikeyan”,
Salary:”27000”,
Department:”admin”
}
இதை பயன்படுத்தும் பொழுது கிளையண்ட் சர்வர் இரண்டும் ஜாவா ஸ்கிரிப்டை புரிந்து கொள்ளும் என்றால் பிரச்சனை இல்லை.
இப்பொழுது ஒரு ஆண்ட் ராய்டு போனிலிருந்து ஒரு ஜாவா சர்வரை தொடர்பு கொள்கின்றது என்று எடுத்துக் கொள்வோல்.
இரண்டு பக்கங்களுமே ஜாவா பற்றி மட்டுமே தெரியும். எனவே  சர்வர் சைடில் ஜாவா ஆப்ஜெக்டிலிருந்து ஜெசன் பார்மட்டுக்கும் கிளையண்ட் சைடில் ஜெசன் ஃபார்மட்டிலிருது ஜாவா ஆப்ஜெக்க்டுக்கும் மொழி மாற்றம் செய்கின்றோம்.இதற்கு GSON போன்ற லைப்ரரரிகள் பயன்படுகின்றோம்.
இந்த டேட்டாவில் கலக்சன் இருக்கின்றது என்று எடுத்துக் கொள்வோம்.உதாரணத்திற்கு ஒரு எம்ப்லாயி ஒன்றுக்கும் மேற்பட்ட கைபேசியை உபயோகப்படுத்துகின்றார் என்று எடுத்துக் கொள்வோம்.அப்பொழுது டேட்டா ஆனது அர்ரே யை கீழ் கண்ட படி அமைக்கலாம்.
Mobile:[{9629329142},{9994419271}]
என்று அமைக்கலாம்.
இதற்கு முன்னால் டேட்டா ஆனது xml ஃபார்மட்டில் அனுப்பப்பட்டு வந்தது . இப்பொழுது ஜெசன் ஆனது அதை ரிபிலேஸ் செய்து வருகின்றது.
நன்றி.
முத்து கார்த்திகேயன்,மதுரை.




ads Udanz

No comments:

Post a Comment