சார்ட் கண்ட் ரோல் ஆனது டேட்டாவை கிராபிக்கல் வடிவில் காட்சிபடுத்துகின்றது.
இதில் காலம்ன் சார்ட் பார் சார்ட், பாயிண்ட் சாட்ட், பை சார்ட்
என வெவ்வேறு வகையான சார்ட்கள் உள்ளன.
இதில் விபி டாட்நெட்டில் காலம்ன் சார்ட் எவ்வாறு உருவாக்குவது
என்று பார்ப்போம்.
முதலில் விபி டாட்நெட்டில் ஒரு புதிய விண்டோஸ் பயன்பாட்டை உருவாக்கவும்.
பிறகு ஃபார்மில் புதிய சார்ட் கண்ட் ரோல் ஒன்றை வரைந்து கொள்ளவும்.
ஒரு பட்டன் ஒன்றும் சேர்த்துக் கொள்ளவும். அதன் டெக்ஸ்ட் பண்பில்
Load chart என்று மாற்றவும்.
F4 கீயை பிரஸ் செய்து சார்ட்டின் பிராப்பர்ட்டிசில் series என்பதில்
கிளிக் செய்து பின் வரும் விண்டோவில் ஆட் பட்டனை கிளிக் செய்யவும்.
அதன் நேம் பிராப்பர்ட்டியில் சான்றாக “Age” என்று வைக்கவும்.
மீண்டும் ஆட் பட்டனை கிளிக் செய்து மற்றொரு பெயரிடவும்.(சான்றாக
Marks).
இப்பொழுது பட்டனின் கிளிக் ஈவண்டில் பின் வருன் வரிகளை சேர்த்துக்
கொள்ளவும்.
Private Sub Button1_Click(sender As Object, e As EventArgs) Handles Button1.Click
Me.Chart1.Series("Age").Points.AddXY("muthu", 45)
Me.Chart1.Series("Marks").Points.AddXY("muthu", 85)
Me.Chart1.Series("Age").Points.AddXY("ram", 38)
Me.Chart1.Series("Marks").Points.AddXY("ram", 75)
Me.Chart1.Series("Age").Points.AddXY("kumar", 40)
Me.Chart1.Series("Marks").Points.AddXY("kumar", 60)
Me.Chart1.Series("Age").Points.AddXY("bala", 25)
Me.Chart1.Series("Marks").Points.AddXY("bala", 90)
Chart1.Series(0).IsValueShownAsLabel = True
Chart1.ChartAreas(0).AxisX.LabelStyle.Angle = -90
Chart1.Series(1).IsValueShownAsLabel = True
End Sub
ஃபார்மை சேவ் செய்து ரன் செய்யவும்.
இயக்க நேரத்தில் பட்டனை கிளிக் செய்தால் சார்ட் காட்டப்படும்.
இப்பொழுது டேட்டா பேஸில் இருந்து டேட்டா பெற்று அதை எப்படி சார்ட்டாக
காட்சிபடுத்துவது என்பது குறித்து பார்ப்போம்.
முதலில் sql server சென்று ஒரு புதிய டேட்டா பேஸ் உருவாக்கவும்.
பின் ஒரு டேபிளை டிசைன் செய்யவும் சான்றாக tblmark.
அதன் டேபிள் டிசைன் கீழ் வருமாறு இருக்கட்டும்.
அதற்கு பின் டேட்டாவாக கீழ் உள்ள படத்தில் உள்ளவாறு கொடுத்துக்
கொள்ளவும்.
இப்பொழுது முதல் மாதிரியே ஒரு சார்ட் டிரா செய்து அதில் series
பண்பில் கிளிக் செய்து ஆட் பட்டனை கிளிக் செய்து அதன் நேம் பிராப்பட்டியில் Mark என்று
கொடுக்கவும்.
இப்பொழுது பட்டன் கிளிக் ஈவண்டில் பின் வரும் நிரல் வரிகளை சேர்த்துக்
கொள்ளவும்.
கீழே மொத்த நிரலும் உள்ளது.
Imports System.Data
Imports System.Data.SqlClient
Public Class Form2
Dim con As New SqlConnection
Dim cmd As New SqlCommand
Dim dr As SqlDataReader
Dim str As String
Private Sub Button1_Click(sender As Object, e As EventArgs) Handles Button1.Click
con.ConnectionString = "Data Source=VISHNU-PC\SQLEXPRESS;Initial
Catalog=chart;Integrated Security=True"
str = "select
id,Name,mark from tblmark"
cmd.Connection = con
cmd.CommandText = str
If con.State = ConnectionState.Closed Then
con.Open()
End If
dr = cmd.ExecuteReader()
While dr.Read
Chart1.Series("Mark").Points.AddXY(dr(1),
dr(2))
End While
Chart1.Series(0).IsValueShownAsLabel = True
Chart1.ChartAreas(0).AxisX.LabelStyle.Angle = -90
con.Close()
dr.Close()
End Sub
End Class
பின் நிரலை இயக்கி பட்டனை கிளிக் செய்தால் பின் வரும் வெளியீடு
இருக்கும்.
நன்றி.
முத்து கார்த்திகேயன்,மதுரை.
No comments:
Post a Comment