குரூப்
பை ஸ்டேட்மென்ட்ஸ் ஆனது தேர்ந்தெடுக்கப்பட்ட ரோக்களின் சம்மரியை வழங்குகின்ற்து.
சான்றாக
sql server-ல் ஒரு டேட்டா பேஸ் உருவாக்கி அதில் salarydetails என்றொரு டேபிள் உருவாக்கவும்.
அதில்
பின் வருமாறு உள்ளீடு செய்யவும்.
மேலே உள்ள
டேபிளில் மொத்த வருமானத்தை கணக்கிட பின் வருமாறு கட்டளை எழுத வேண்டும்.
select sum(salary) from salaryDetails
வெளியீடு:
50400
இதில்
அதிக பட்ச வ்ருமானத்தை கணக்கிட பின் வருமாறு கட்டளை எழுத வேண்டும்.
select max(salary) from salaryDetails
வெளியீடு:
8800
குறைந்த
பட்ச வருமானத்தைக் கணக்கிட பின் வருமாறு கட்டளை எழுத வேண்டும்.
select min(salary) from salaryDetails
வெளியீடூ:
2800
சராசரி
வருமானத்தைக் கணக்கிட பின் வருமாரு நிரல் எழுத வேண்டும்.
select avg(salary) from salaryDetails
வெளியீடு:
5040
மொத்த
ரோக்களை கணக்கிட பின் வருமாறு கட்டளை எழுத வேண்டும்.
select count(id) from salaryDetails
வெளியீடு:
10
இதில்
சம்பளத்தை கணக்கிடும் பொழுது ஒவ்வொரு நகர வாரியாக மொத்த சம்பளம் வேண்டும் என்றால் குரூப்
பை கட்டளை எழுத வேண்டும்.
select city, sum(salary) from salaryDetails group
by city
வெளியீடு:
ஒவ்வொரு
நகரத்திலும் பாலின வாரியாக சம்பளத்தைக் கணக்கிட பின் வருமாறு கட்டளை எழுத வேண்டும்
select city,gender, sum(salary)as totalsalary from salaryDetails group
by city,gender
மேலும்
ஒவ்வொரு நகரத்திலும் உள்ள வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கையை சேர்தே கணக்கிட கீழ் வருமாறு
எழுத வேண்டும்.
select city,gender, sum(salary)as totalsalary , count(id) as [total employees] from
salaryDetails group by
city,gender
வெளியீடு:
இதில்
குறிப்பிட்ட நகரத்தை மட்டும் கணக்கிட பின் வருமாறு கட்டளை எழுத வேண்டும்.
select city,gender, sum(salary)as totalsalary , count(id) as [total employees] from
salaryDetails where city='newyork' group
by city,gender
குறிப்பிட்ட
நகரத்தில் உள்ளவர்களை கணக்கிட பின் வருமாறும் கட்டளை எழுத வேண்டும்.
select city,gender,
sum(salary)as totalsalary , count(id) as [total employees] from
salaryDetails group
by city,gender
having city='newyork'
இதில் வரும் வெளியீடும் மேற் கண்டவாறே இருக்கும்.
Where மற்றும் having வித்தியாசங்கள்.
Where ஆனது select, insert, update, delete என எல்லா
வகையான கட்டளகளிலும் உபயோயிக்கலாம்.ஆனால் having ஆனது செலெக்ட் கமாண்டில் மட்டும் உபயோக்கிக்கலாம்.
Where ஆனது முதலில் ஃபில்டர் பண்ணி விட்டு அக்ரிகேட்
செய்கின்றது. Having ஆனது அக்ரிகேட் செய்து விட்டு ஃபில்டெர் செய்கின்றது.
Where உடன் அக்ரிகேட் ஃபங்க்சன்கள் உபயோகிக்க முடியாது.
Having உடன் அதை சேர்த்து பயன்படுத்தலாம்.
-நன்றி.
முத்து கார்த்திகேயன்,மதுரை.
No comments:
Post a Comment