ஒரு கிளாஸிற்குள்
ஒன்றுக்கும் மேற்பட்ட மெத்தட்கள் ஒரே பெயரில் ஆனால் வேறுபட்ட பராமீட்டர்களுடன்
இருக்குமாயின் அது மெத்தட் ஒவர் லோடிங் எனப்படுகின்றது .
உதாரணத்திற்கு
இரு மெத்தட்கள் அதற்கு அனுப்ப படும் பராமீட்டர்களின்
கூட்டுத்தொகையை திருப்பி அனுப்புகின்றது.ஒரு மெத்தட்டிற்கு இரு இன்ட்
மதிப்புகளும் ,
மற்றொரு மெத்தட்டிற்கு மூன்று இன்ட் மதிப்புகளும் அனுப்படுகின்றன. இரண்டு
மெத்தடுகளின் வேலையும் ஒன்று தான். அதனால் ஒரே பெயர்.ஆனால் வேறுபட்ட
பராமீட்டர்கள்.
மெத்தட் ஓவர்
லோடிங் ஆனது நிரலின் ரீடபிலிட்டியை அதிகரிக்கின்றது.
உதாரணம்:
1. class Calculation
2. {
3. void sum(int a,int b)
4. {
5. System.out.println(a+b);
6. }
7. void sum(int a,int b,int c)
8. {
9. System.out.println(a+b+c);
10. }
11.
12. public static void main(String args[])
13. {
14. Calculation obj=new Calculation();
15. obj.sum(10,10,10);
16. obj.sum(20,20);
17.
18. }
19. }
2. மேலே உள்ள நிரலில் இரு மெத்தட்கள் SUM என்ற ஒரே பெயரில் இருக்கின்றன. ஆனால் முதல் மெத்தட் இரு இன்ட் பராமீட்டர்களையும் இரண்டாவது மெத்தட் மூன்று இண்ட் பராமீட்டர்களையும் பெறுகின்றது .
மெயின் மெத்தடில் CALCULATION கிளாஸிற்கு OBJ என்கின்ற OBJECT உருவாக்கப்படுகின்றது.
obj.sum(10,10,10) ஆனது மூன்று இன்ட் பராமீட்டர் உள்ள மெத்தடை அழைக்கின்றது.
obj.sum(20,20) ஆனது இரண்டு இன்ட் பராமீட்டர் உள்ள மெத்தடை அழைக்கின்றது.
OUTPUT:
30
40
அடுத்த நிரலானது டேட்டா டைப்பின் இனத்தை வைத்து மெத்தடை ஒவர் லோட் செய்கின்றது.
1. class Calculation2
{
{
3. void sum(int a,int b)
4. {
5. System.out.println(a+b);
6. }
7. void sum(double a,double b)
8. {
9. System.out.println(a+b);
10. }
11.
12. public static void main(String args[])
13. {
14. Calculation2 obj=new Calculation2();
15. obj.sum(10.5,10.5);
16. obj.sum(20,20);
17.
18. }
19. }
மேலே உள்ள நிரல்
முதல் sum மெத்தடிற்குஇரண்டு இண்ட் பராமீட்டர்களையும்
இரண்டாவது sum மெத்தட் இரணடு double பராமீட்டர்களையும் பெறுகின்றது.
output:
20.10
40
எச்சரிக்கை:
மெத்தடின் ரிடன்
டைப்பை மட்டும் வைத்து மெத்தட் ஓவெர் லோடிங் செய்ய முடியாது.
நான் மதுரையில் C,C++,JAVA
CLASSES நடத்தி வருகின்றேன்.
மேலும் DOTNET, PHP, TALLY, MS-OFFICE வகுப்புகளும்
நடத்தி வருகின்றேன்.
தொடர்புக்கு:
91 96293 29142