Sunday, April 5, 2015

பாடம்- 7
வாங்க பழகலாம் c மொழியை.
operators:
டேட்டாவின் மீது செயற்பாடுகளை ஏற்படுத்துவை operators ஆகும்.
வகைகள்:
1     .    arithmetic operators
2     .   Relational operators
3     .   logical operators
4     .   short hand assignment operators
5    .   increment and decrement operators
6    .   conditional operators
7     .   bitwise operators
8       special operators.

Arithmetic operators:
Arithmetic calculations(கூட்டல்,கழித்தல் போன்ற)செய்ய உதவுபவை arithmetic operators எனப்படும்.
வகைகள்
:1. unary operators
2. binary operators
Unary operators
unary operators செயற்பட ஒரே ஒரு operand போதும்.
example:
-     (unary minus
   ++(increment)
--(decrement)
-a
++x
--y.
Binary operators:
இரண்டு operands தேவை படுபவை binary operator எனப்படுகின்றது.
உதாரணங்கள்
+,-,*,/,%
a + b
x * y
a % b
இவற்றில் +,-,* போன்றவை வழக்கமான கனிதத்தில் பயன்படுபவை போன்று தான். ஆனால் / (division)operator ஆனது நிரலாக்க மொழிகளில் வேறுபடுகின்றது.
உதாரணமாக
12/5=2.4 என்பது வழக்கமான கணிதம்.
ஆனால் c மொழியில்
12  ஒரு integer
5 ஒரு integer
ஒரு integer –யை இன்னொரு integer –ல் வகுக்கும் போது quotient(ஈவு) மற்றுமே விடையாக கிடைக்கும்.
13/5=2
12/5=2
ஆனால் இரண்டில் ஒரு நம்பர் float ஆனாலும் விடை float தான்.
12.0/5=2.4
13/5.0=2.6
அப்படியானால் ஒரு integer-யை இன்னொரு integer-ல் வகுக்கும் போது வரும் மீதியை கணக்கிட உதவுவது % operator ஆகும்.
13%5=2
14%4=2
நான் மதுரையில் சொந்தமாக ப்ரோக்ராமிங் மொழிகளான c, c++, java, c#, vb.net, asp.net, php, servlet, jsp, ejb,html,css, javascript மற்றும் வேலை வாய்ப்பிற்கான ms-office, tally, photoshop, coreldraw முதலியவற்றை கற்பித்து வருகின்றேன்.
தொடர்புக்கு:
96293 29142
Email:muthu.vaelai@gmail.com
எனது பிற வலைத் தளங்கள்.
---தொடரும்.







ads Udanz

No comments:

Post a Comment