CONSTRUCTOR என்பது ஒரு க்ளாஸ் உள்ளே உள்ள SPECIAL METHOD ஆகும்.இது அந்த க்ளாஸிற்கு ஆப்ஜெக்ட் உருவாக்கும் போது தானாகவே இயங்குகிறது.
ஒரு CONSTRUCTOR ஆனது பின் வரும் வழிமுறைகளில் CALL ஆகுகின்றது.
1.ஆப்ஜெக்ட் உருவாக்கும் போது(new KEYWORD மூலமாக)
2.அதே க்ளாஸின் மற்றொரு CONSTRUCTOR –ல் இருந்து.(this KEYWORD மூலமாக)
3.DERIVED CLASS-ன் CONSTRUCTOR-ல் இருந்து(base KEYWORD மூலமாக)
CONSTRUCTOR வகைகள்:
1. Default constructor
2. Parameterized constructor
3. Instance constructor
4. Static constructor
5. Private constructor
DEFAULT CONSTRUCTOR
PARAMETER இல்லாத CONSTRUCTOR-கள் DEFAULT CONSTRUCTOR
எனப்படுகின்றது.ஒரு க்ளாஸின் உள்ளே(NON STATIC CLASS) நாம் எந்த CONSTRUCTOR-ம் இல்லாத போது கம்பைலரால் தானாகவே PROVIDE செய்யப்படுகின்றது. இது எந்த பராமீட்ட்டரும் இன்றி ஆப்ஜெக்ட் உருவாக்கும் போது அழைக்கப்படுகின்றது.
PARAMETERIZED CONSTRUCTOR
PARAMETER உள்ள CONSTRUCTOR –கள் PARAMETERIZED CONSTRUCTOR எனப்படுகின்றது. ஒரு க்ளாஸின் உள்ளே ஒன்றுக்கு மேற்பட்ட PARAMETERIZED CONSTRUCTOR இருக்கலாம். DEFAULT CONSTRUCTOR ஆனது ஒரு க்ளாஸின் உள்ளே எந்த PARAMETERIZED CONSTRUCTOR-ம் இல்லாத போதே கம்பைலரால் PROVIDE செய்யப்படுகின்றது. ஒரு க்ளாஸின் உள்ளே PARAMETERIZED CONSTRUCTOR இருந்தால் DEFAULT CONSTRUCTOR நாம் தான் எழுத வேண்டும்.
STATIC CONSTRUCTOR
ஒரு STATIC CLASS அல்லது NON STATIC CLASSந் உள்ளே உள்ள STATIC VARIABLE S இவற்றை INITIALIZE செய்ய பயன்படுகின்றது. இதனில் எந்த ACCESS MODIFIER-ம் குறிப்பிடப்படுவதில்லை.எந்த PARAMETER-ம் PASS பண்ண முடியாது.ஒரு க்ளாஸிற்கு ஒரு STATIC CONSTRUCTOR தான் இருக்கும். this,base KEYWORDS மூலம் CALL செய்ய இயலாது. STATIC CONSTRUCTOR ஆனது அந்த க்ளாஸிற்கு எந்த ஆப்ஜெக்டும் CREATE செய்வற்கு முன்பே CALL செய்யப்படுகின்றது.ஒரு க்ளாஸின் மொத்த LIFE TIME-ல் ஒரு தடவை தான் இது CALL ஆகுகின்றது
PRIVATE CONSTRUCTOR
PRIVATE என்ற ACCESS SPECIFIER உள்ள CONSTRUCTOR ஆனது PRIVATE CONSTRUCTOR எனப்படுகின்றது. PRIVATE CONSTRUCTOR –களுக்கு ஆப்ஜெக்ட் உருவாக்கவோ அல்லது INHERIT செய்யப்படவோ இயலாது.அந்த க்ளாஸின் உள்ளேயே தான் ஆப்ஜெக்ட் உருவாக்க வேண்டும்.
நான் மதுரையில் FULL DOTNET பாடங்கள் வ்குப்புகள் நடத்தி வருகின்றேன்
CONTENTS:
C#, VISUAL C#,VB.NET,ASP.NET,ADO.NET,WPF WCF ,AJAX ,MVC,RAZOR, JQUERY,LINQ, GRID VIEW,CHART SQL SERVER ஆகியவை ஆகும்
தொடர்புக்கு:
91 96293 29142