Wednesday, January 30, 2019

ஜாவாஸ்கிரிப்ட் –பகுதி-3.


நாம் ஒரு Html நிரலில் இரண்டு வகையாக எழுதலாம்.
1.   இன்டெர்னல் ஜாவாஸ்கிரிப்ட்
2.   எக்ஸ்டர்னல் ஜாவாஸ்கிரிப்ட்
1.இண்டெர்னல் ஜாவாஸ்கிரிப்ட்.
இதில் html நிரலுடன் சேர்ந்தே எழுதப் படுகின்றது.
<!DOCTYPE html>
<html>
<head>
<title>web page</title>
<script type="text/javascript" >
document.write("<h1> heading 1</h1>");
</script>
</head>
<body>
<div>
    big paragraph
</div>

</body>
</html>

மேலே உள்ள நிரலில் ஜாவாஸ்கிரிப்ட் ஆனது இண்டெர்னல் ஆக எழுதப்படுள்ளது.
இதன் வெளியீடு:




இதே ஜாவாஸ்கிரிப்டை body டேக்குள்ளும் எழுதலாம்.
<!DOCTYPE html>
<html>
<head>
<title>web page</title>

</head>
<body>
        <script type="text/javascript" >
            document.write("<h1> heading 1</h1>");
            </script>
<div>
    big paragraph
</div>

</body>
</html>
அதே போல் html டேக்குக்கு வெளியேவும் எழுதலாம்.
உதாரணமாக.
<!DOCTYPE html>
<html>
<head>
<title>web page</title>

</head>
<body>
      
<div>
    big paragraph
</div>

</body>
</html>
<script type="text/javascript" >
    document.write("<h1> heading 1</h1>");
    </script>

2.எக்ஸ்டர்னல் ஜாவா ஸ்கிரிப்ட்
தனி ஃபைளில் உங்கள் ஜாவா ஸ்கிரிப்ட் கோடை எழுதி அதை ஏதேனும் ஒரு பெயரில் .js என்கின்ற  எக்ஸ்டன்சனுடன் சேமித்துக் கொள்ளலாம்.
  document.write("<h1> heading 1</h1>");
மேலே உள்ள நிரலை தனியாக main.js என்கின்ற பெயரில் சேமித்துக் கொண்டு
Html –ல் பின் வரும் வரியை டைப் செய்து கொள்ளலாம்.
<!DOCTYPE html>
<html>
<head>
<title>web page</title>
<script type="text/javascript" src="main.js"></script>
</head>
<body>
      
<div>
    big paragraph
</div>

</body>
</html>


இவ்வாறெல்லாம் நாம் ஜாவாஸ்கிரிப்ட் ஃபைலை இயக்கலாம்.
நன்றி
முத்து கார்த்திகேயன்,மதுரை.



ads Udanz

Tuesday, January 29, 2019

ஜாவாஸ்கிரிப்ட்-பகுதி-2




வெப் பக்கங்களை வடிவமைப்பதில் முக்கியமாக மூன்று மென்பொருட்கள் பயன்படுகின்றன.
1.HTML                                                                       
இது டாக்குமென்டின் ஸ்ட்ரக்சரை கூறுவதற்கு பயன்படுகின்றது. உதாரணமாக <P>, <a>, <img> <table> முதலியவை.
2.css
இது வெப் பக்கங்களுக்கு style கொடுப்பதற்கு பயன்படுகின்றது. உதாரணமாக நிறம்,பார்டர், மார்ஜின், இமேஜ் முதலியுயவை.
3.ஜாவா ஸ்கிரிப்ட்
இது வெப் பக்கங்களுக்கு நிரல்களை(programs) சேர்ப்பதற்கு பயன்படுகின்றது.
மேலும் ஒரு பக்கத்தில் நாம் கொடுக்கும் உள்ளீடுகளை வேலிடேட் செய்வதற்கு பயன்படுகின்றது.

ஒரு பக்கத்தில் நாம் டிசைன் செய்யும் html எலிமெண்ட்ஸ் DOM –ஆக  மாற்றப் படுகின்றது.
DOM-DOCUMENT OBJECT MODEL.
மேலே உள்ள HTML பக்கத்தில் ஒரு ரூட் HTML டேக்கு உள்ளது.. அதற்குள் head, body என்று இரண்டு எலிமெண்டுகள் உள்ளன. Head பகுதிக்குள் title என்றொரு எலிமெண்ட் உள்ளது. Body டேக்குக்குள் h1, இரண்டு div டேக்குகள் உள்ளன.ஒவ்வொரு div டேகுக்குள்ளும் ஒரு p டேக்கு உள்ளது.

மூன்று நோடுகள்:
1.எலிமெண்ட் நோட் உதாரனமாக head, h1, div போன்றவை.
2.ஆட்ரிபியூட் டோட்-உதாரணமாக id, class முதலியவை.இவை எலிமெண்டு பற்றிய கூடுதல் தகவல்களை தருகின்றன.
3.டெக்ஸ்ட் நோட்-உதாரணமாக my title போன்றவை.
இவற்றை ஜாவாஸ்கிரிப்ட்டில் எளிதாக கையாளலாம்.
இவற்றை மாற்றியமைக்கலாம், ஸ்டைட் டவுன் போன்ற சிறிய அனிமேசன்களை செய்யலாம்.
சான்று நிரல்.
<script type="text/javascript">  
function printvalue(){  
var name=document.form1.name.value;  
alert("Welcome: "+name);  
}  
</script>  
  
<form name="form1">  
Enter Name:<input type="text" name="name"/>  
<input type="button" onclick="printvalue()" value="print name"/>  
</form>  

-நன்றி முத்து கார்த்திகேயன், மதுரை.

மதுரையில் சி, சி++, ஜாவா, டாட்நெட், பிஹெச்பி, பைத்தான், வெப் டிசைனிங்,டேலி( வித் GST), எம்.எஸ்.ஆபிஸ் படிக்க கீழ்கண்ட எண்ணில் அழைக்கவும்.
919629329142 


,
ads Udanz