இந்த பகுதியில்
நாம் ஜாவாஸ்கிரிப்டை அதன் தொடக்கத்திலிருந்து கற்றுக் கொள்ள இருக்கின்றோம்.
அடிப்படை
சிண்டாக்ஸ்
நிகழ் நேர ஜாவாஸ்கிரிப்ட்
பயன்கள்.
கிளையண்ட் சைட்
வேலிடேசன்
GUI விசுவல் எஃப்ஃபெக்ட்ஸ்
3 வது நபர் ஜாவாஸ்கிரிப்ட்
லைப்ரரி.
இவையெல்லாம் குறித்து கற்றுக்
கொள்ள இருக்கின்றோம்.
இவற்றை கற்றுக்
கொள்வதற்கு அடிப்படை html அறிவும் அடிப்படை css அறிவும் சிறிது தேவைப்படும்.
முதலில் ஜாவாவுக்கும்
ஜாவாஸ்கிரிப்டுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
நாம் ஏன் ஜாவாஸ்கிரிப்டை
கற்றுக் கொள்ள வேண்டும்.
1995-ல் கிளையண்ட்
ஸ்கிரிப்ட் வேலிடேசன் மொழியாக அறிமுகப்படுத்தப் பட்ட ஜாவாஸ்கிரிப்ட் இன்று வெவ்வேறு
வழிகளில் பயணித்துக் கொண்டிருக்கின்றது.
சர்வர் சைட் புரோகிராமிங்,விண்டோஸ்
அப்ளிகேசன்,,ஆண்ட்ராய்ட் அப்ளிகேசன் என அதன் பயன்பாடு அதிகம்.
Node.js
சி#, ஜாவா போன்று
சர்வர் சைட் மொழியாக நோட்.ஜெஸ்(node.js) ஒரு சர்வர் சைட் மொழியாக பயன்படுகின்றது.
React.js
இது வெப் அப்ளிகேசன்
மற்றும் மொபைல் அப்ளிகேசன் உருவாக்குவதற்கு பயன்படுகின்றது.
React native.
இது மொபைல் அப்ளிகேசன்
உருவாக்க பயன்படுகின்றது.
Angular js.
இது mvc ஒரியண்டட்
ஃப்ரேம் ஒர்க் ஆக பயன்படுத்தப் படுகின்றது.
Electron js.
இது டெஸ்க்டாப்
அப்ளிகேசன் உருவாக்கப் பயன்படுகின்றது.
React 360.
இது விர்ச்சுவல்
ரியாலிட்டி அப்ளிகேசன் உருவாக்கப் பயன்படுகின்றது.
Tensorflow.js
இது மெசின் லீயர்னிங்க்,
ஆர்டிஃபிசியல் இன்டெலிஜெண்ட், டேட்டா சைன்ஸ் போன்றவற்றில் பயன்படுகின்றது.
தொடரும்
நன்றி
முத்து கார்த்திகேயன், மதுரை.
No comments:
Post a Comment