Monday, January 28, 2019

Html மற்றும் css பகுதி-1





 

Html என்பது இணைய பக்கங்களை விவரிக்க உதவும் மார்க் அப் மொழியாகும்.
Html என்பது ஒரு பக்கத்தின் எலிமெண்டுகளை கொண்டுள்ளது.
உதாரணத்திற்கு p என்பது பாராகிராப் டேக், img என்பது இமேஜ் டேக்.
ஒவ்வொரு எலிமெண்டும் இரண்டு டேக்குகளைக் கொண்டிருக்கும்.
ஒன்று ஸ்டார்ட் டேகு, மற்றொன்று எண்ட் டேகு. எண்ட் டேகு ஆனது ஒரு பார்வேர்டு ஸ்லாசை கொண்டிருக்கும்.
உதாரணம்
<p>
</p>
சில எலிமென்டுகள் ஒரே ஒரு டேகை கொண்டிருக்கும்.
உதாரணம்:
<br/>
Html-ன் லேடெஸ்ட் வெர்சன் 5 ஆகும்.
<!DOCTYPE html>
மேற்கண்ட அறிவிப்பு நம் html டாக்குமென்ட் வெர்சன் 5-யை சார்ந்தது என குறிப்பிட உதவுகின்றது.
ஒவ்வொரு டாக்குமெண்டும் <html> என்கின்ற ரூட் டேக்கைக் கொண்டிருக்கும்.
அதற்குள்  head, body என்று முக்கிய எலிமெண்டுகள் இருக்கும்.
<!DOCTYPE html>
<html>
    <head>
    </head>
    <body>
     
     </body>
    </html>

Head  பகுதியில் title, script, style போன்றவை இருக்கும். Body பகுதியில் html டாக்குமென்டின் கண்டண்ட் இருக்கும்.உதாரணத்திற்கு ஒரு பாரா கீழே சேர்க்கப்பட்டுள்ளது.
<!DOCTYPE html>
<html>
    <head>
    </head>
    <body>
      <p>this is paragraph</p>
     </body>
    </html>

மேற்கண்ட நிரலை இயக்கினால் பின் வரும் அவுட்புட் பிரவுசரில் இருக்கும்.
நன்றி
முத்து கார்த்திகேயன், மதுரை.

மதுரையில் சி, சி++, ஜாவா, டாட்நெட், பிஹெச்பி, பைத்தான், வெப் டிசைனிங்,டேலி( வித் GST), எம்.எஸ்.ஆபிஸ் படிக்க கீழ்கண்ட எண்ணில் அழைக்கவும்.
919629329142 

 
ads Udanz

No comments:

Post a Comment