Friday, April 26, 2019

கிளவுட் கம்ப்யூட்டிங்க் அடிப்படைகள் பகுதி-1



            இந்த கட்டுரையில் கிளவுட் கம்ப்யூட்டிங்க் அடிப்படை குறித்து காண இருக்கின்றோம்.
செர்வர், சேமிப்பகம்,டேட்டாபேஸ், நெட்வொர்கிங்க், சாஃப்ட்வேர் முதலான கணினி சர்வீஸ்களை வழங்குவதே  கிளவுட் கம்ப்யூட்டிங்க் எனப்படுகின்றது.
அதாவது மற்றொரு நிறுவனத்தின் சேமிப்பகம்,சிபியு சைக்கிள்  போன்றவற்றை நமக்கு வாடகைக்கு வழங்குவதே கிளவுட் கம்ப்யூட்டிங் எனப்படும்.
அவ்வாறு நாம்  நம்முடைய சொந்த ரிசோர்ஸ்களை பயன்படுத்தி விட்டு அதற்கான வாடகையை வழங்குவோம்.
வெவ்வேறு  நிறுவனங்கள் நிறைய இந்த சர்வீஸ்களை வழங்குகின்றது. உதாரணம்:மைக்ரோசாஃப்ட், அமேசான்,கூகிள்,ஐபிஎம் கிளவுட் போன்ற நிறுவனங்கள் ஆகும்.

கிளவுட் கம்ப்யூட்டிங்க்  வகைகள்.

இது சம்பந்தப்பட்ட தேவைகள் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் மாறுபடுகின்றது. எனவே 3 வகையான கிளவுட் டிபிளாய்மெண்ட் மாடல்கள் உள்ளது.

பப்ளிக் கிளவுட்:

இதில் ஹார்ட்வேர், சாஃப்ட்வேர் எதுவுமே நாம் வைத்திருக்க தேவையில்லை.  அதை நாம் நேரடியாக  நாம்  மேனேஜ் செய்வதில்லை.
சிபியு, ஸ்டோரேஜ் எல்லாமே  கிளவுட் வழங்குகின்றது. மைக்ரோசாஃப்ட் அஷூர் பப்ளிக் கிளவுடிற்க்கு உதாரணம் ஆகும்
இந்த சர்வீஸ்களை நாம் வெப் அடிப்படையிலான அடிப்ப்டையில் மேனேஜ்  செய்கின்றோம்.

நண்மைகள்:

·         தனியாக சர்வர் வாங்க தேவையில்லை
·         எவ்வளவு பயன்படுத்துகின்றோமோ அதற்கு மட்டும் பணம் கட்டுகின்றோம்.
·         பெரிதாக தொழில்நுட்ப அறிவு தேவையில்லை.

தீமைகள்:

·         இதன் பெர்பார்மென்ஸ் இன்டெர்நெட் கனக்டிவிட்டியை சார்ந்தது,.
·         இதன் பிஸிக்கல் லெவல் கண்ட்ரோல் கிளவுட்  சர்வீஸ் வழங்குனர் கையில் உள்ளது.

பிரைவேட் கிளவுட்

டேட்டா பாதுகாப்பு, டேட்டா ப்ரைவசி தேவைப்படும் பொழுது நாம் பிரைவேட் கம்ப்யூட்டிங்கை பயன்படுத்துகின்றோம். எனினும் இதை பிரைவேட் ஆக வழங்குவதற்கு  நிறைய பணம் செலுத்த வேண்டும்.

ஒரு கம்பனியின் டேட்டாவை  பப்ளிக் ஆக வைக்க இயலாத பட்சத்தில் பிரைவேட் கிளவுட் பயன்படுகின்றது. எனவே இது  குறிப்பிட்ட நிறுவனம் மட்டுமே ஒரு சர்வீஸை பயன்படுத்திகின்றது.

நண்மைகள்:

·         டேட்டா பாதுகாப்பு ஏனெனில் குறிப்பிட்ட் நிறுவனம் மட்டுமே பயன்படுத்த முடியும்.
·         தகவல் மேல் நம் கட்டுபாடு உள்ளது.
·         சேமிப்பகம், நெட்வொர்க் காம்பண்ட்கள் ஆகியவை கஸ்டமைசபிள் ஆகும்.

தீமைகள்
·         முதலீட்டு செலவு
·         கூடுதல் தொழில் நுட்ப அறிவு தேவைப்படுகின்றது.

ஹைபிரிட் கிளவுட்

இது பப்ளிக் மற்றும் பிரைவேட் இரண்டையும் சேர்ந்தது ஆகும்.
நாம் வெப்சைட்டை பப்ளிக் கிளவுட்டில் வைத்துவிட்டு டேட்டாபேசை ப்ரைவேட் கிளவுட்டில் வைத்து விடலாம்.
நாம் நம்முடைய பழைய ஹார்டுவேரில் சில பயன்பாடுகளை இயக்க முடியாத பொழுது அவற்றை மட்டும் பப்ளிக் கம்ப்யூட்டிங்கில் பயன்படுத்தலாம்.
 நண்மைகள்:
·         பழைய ஹார்டுவேரோ அல்லது பழைய ஆபரேட்டிங்க் சிஸ்டமோ பயன்படுத்துவர்களுக்கு பயன்படுகின்றது.
·         எது பிரைவே ஆக இருக்க வேண்டும் ,எது பப்ளிக் ஆக இருக்க வேண்டுமென்பது நம்முடைய கட்டுப்பாட்டில் உள்ளது.
தீமைகள்.
·         அதிக பணச்செலவு
·         மேனேஜ்மெண்ட் சிக்கல்.
நன்றி.
முத்து  கார்த்திகேயன்,மதுரை.
 TO LEARN COURSES LIKE C,C++, JAVA, DOTNET, PYTHON, PHP, WEB DESIGNING, MS-OFFICE, TALLY CONTACT:96293 29142

ads Udanz

No comments:

Post a Comment