ஜாவாவானது
JVM-ஆல் இயக்கப்படுகின்றது என்று நாம் அறிவோம்.JVM டெக்னாலஜி பற்றி நாம் அறிவோமா?
இந்த
கட்டுரையில் ஜாவா நிரலை ஒரு தடவை எழுதி விட்டு எங்கு வேண்டுமானாலும் இயக்குங்கள் என்பதன்
நண்மை தீமைகள்,கார்பேஜ் கலக்சன் அடிப்ப்டைகள்,காமன் GC அல்கரிதம் சான்றுகள் மற்றும்
கம்பைலர் ஆப்டிமைசேசன் போன்றவற்றைப் பற்றி காண இருக்கின்றோம்.
JVM
அடிப்படை என்ன?உண்மையில் JVM என்ன செய்கின்றது என்று காண இருக்கின்றோம்.கார்பேஜ் கலக்சன்
மற்றும் இயங்குகின்ற நிரலை பாதிக்காமல் எப்படி
மெமரி கிளியர் செய்யப்படுகின்றது ஆகியவை பற்றி இங்கு காண்போம்.
JVM
காம்பனண்ட்ஸ்: கேர்பேஜ் கலக்சன் , GC அல்கரிதம்கள் மற்றும் பொதுவான ஆப்டிமைசேசன் குறித்துக் காண்போம்.
JVM
மற்றும் GC ஆகியவற்றில் இப்போது எற்பட்டிருக்கும் முன்னேற்றங்கள் பற்றி காண்போம்.
ஜாவா
பிளாட்ஃபார்ம் ஆனது மிகவும் மெதுவாக செயற்படுகின்றது என்ற குற்றச்சாட்டை வைத்திருப்பவர்களுக்கு
ஒரு அறிவிப்பு இந்த குற்றச்சாட்டு பத்தாண்டு பழமை ஆனது ஜாவா எண்டர் பிரைஸ் அப்ளிகேசன்
அறிமுகம் ஆன பொழுது வைக்கபட்ட குற்றச்சாட்டு இது.மற்ற நிரலாக மொழிகளுடன் ஒப்பிடுகையில்
JVM சற்று வேகம் தான்.
மெசின்
ஆப்டிமைஸ்டு கோட் ஆனது ஜாவாவைக் காட்டிலும் பெர்ஃபார்மண்ஸ் கூடுதல் தான் எனினும் ஜாவாவானது
பின் வரும் காரணங்களுக்காக தேர்ந்தெடுக்கப்படுகின்றது.
· எளிய நிரலாக்க முறைகள்
· ஜாவா அறிவுடைய நிரலாளர்கள் அதிகமாக உள்ள நிலை.
· ஜாவா API மற்றும் லைப்ப்ரேரி மூலம் விரைவான
டெவலெப்மெண்ட்
· போர்ட்டபிளிட்டி. அதாவது ஒரு தடவை எழுதி விட்டு
எந்த பிளாட்ஃபார்மிலும் இயக்குங்கள் போன்றவை.
இப்போது
MyApp,java என்றொரு நிரல் இருப்பதாக எடுத்துக் கொள்வோம்.அதை முதலில் javac மூலம் கம்பைல்
செய்து MyApp.class என்ற பைட் கோடாக மாற்றுவோம்.இது எல்லா பிளாட்ஃபார்மிற்கும் பொதுவான
ஃபைல் ஆகும். பிறகு java கட்டளை மூலம் JVM ஆனது இண்டர்பிரட் செய்து இயக்குகின்றது.
JVM
என்பது ஒரு சாஃப்ட்வேர் மாடூல் ஆகும். இது பைட்கோடை இண்டர்பிரட் செய்து மெசின் கோடாக
மாற்றி இயக்குகின்றது.எனவே இந்த நாம் எழுதும் ஜாவா நிரலானது எல்லா JVM களுக்கும் பொதுவானதாக
இருக்க வழிசெய்கின்றது.
JVM
மெசின் டிபண்டண்ட் ஆகும்.எனவே நாம் நிரல் எழுதும் பொழுது எந்த பிளாட்ஃபார்மில் இயக்கப்போகின்றோம்
என்று குறித்து கவலைப்பட தேவையில்லை. அதை
JVM பார்த்துக் கொள்ளும்.
JVM
ஆனது ஒரு பிராஜெக்ட் இயங்கும் பொழுது டைனமிக் ரிசோர்ஸ் மேனேஜ்மெண்ட்டை வழங்குகின்றது.
நிரலுக்கு தேவைப்படும் மெமரி ஒதுக்கீடு, அந்த பிளாட்ஃபாமிற்கான திரட் மாடல் , CPU ஆர்க்கிடெக்சருக்கான
முறையில் எக்சிகியூட்டபிள் அறிவுரைகள் ஆகியவற்றை JVM வழங்குகின்றது.
ஆப்ஜெக்டுகள்
எப்பொழுது நமக்கு தேவைப்படாது அவை உபயோகப்படுத்தியிருந்த மெமரியை எப்படி கிளியர் செய்வது
என்பது பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை. எப்பொழுதெல்லாம் ஒரு ஆப்ஜெக்ட் ஆனது உபயோகித்தில்
இல்லையோ அப்பொழுதெல்லாம் JVM கார்பேஜ் கலக்டர் இயங்கி அவற்றை கிளியர் செய்யும்.
JVM
என்பதை ஜாவாவுக்கான சிறப்பு ஆபரேட்டிங்க் சிஸ்டம்
என்று கூட நீங்கள் சொல்லலாம். JVM ஆற்றும் முக்கியப் பணி ஆனது ஜாவா அப்ளிகேசன்களுக்கு
ரன் டைம் என்விரான்மெண்டை வழங்குகின்றது.
JVM
என்பது அடிப்படைட்யில் ஒரு விர்ச்சுவல் எக்சியூசன் என்விரான்மெண்ட் ஆகும்.இது பைட்
கோட் அறிவுரைகளை இயக்குகின்றது.மேலும் இது மெமரியை கையாளுகின்றது.
ஒரு
கம்பைலர் ஆனது பொதுவாக ஒரு மொழியில் நிரலை ஏற்று மற்றொரு மொழியில்(பெரும்பாலும் மெசின்
மொழியாக)வெளியீடு செய்யும்.
ஒரு
ஜாவா கம்பைலருக்கான இரு முக்கிய செயல்கள்.
· போர்ட்டபிள் கோடாக மாற்றுதல்.
· திறன் மிக்க நிரலாக மாற்றுதல்.
கம்பைலர்
ஆனது ஸ்டேடிக் ஆகவோ அல்லது டைனமிக் ஆகவோ இருக்கும். Javac ஸ்டேட்டிக் கம்பைலர் ஆகும்
. இது ஒரு நிரலை இன்புட்டாக பெற்று பைட் கோடாக அவுட்புட் செய்யும்.இதன் வெளியீடு எப்பொழுதும்
ஒரே மாதிரி இருக்கும்.
டைனமிக்
கம்பைலர் ஆனது(JIT –JUST INTIME COMPILER) கோட் இயங்கும் பொழுது மொழி மாற்றம் செய்கின்றது.இது பொதுவாக நிரலை அப்டேட்
செய்யும் பொழுது நண்மையை தருகின்றது.
-தொடரும்
நன்றி
முத்து
கார்த்திகேயன் ,மதுரை.
TO LEARN COURSES
LIKE C,C++, JAVA, DOT NET, PYTHON, PHP,
WEB DESIGNING, MS-OFFICE, TALLY
LIKE C,C++, JAVA, DOT NET, PYTHON, PHP,
WEB DESIGNING, MS-OFFICE, TALLY
CONTACT:96293 29142
No comments:
Post a Comment