கிளவுட் கம்ப்யூட்டிங்கில் நிறைய மாடல்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும்
 ஒவ்வொரு 
வகையான சர்வீஸ்களை தருகின்றன.
அவற்றின் வகைகள்.
·       IaaS
·       PaaS
·       SaaS
Infrastructure as a Service.
இது தான் இருப்பதிலேயே ஃப்லெக்சிபிள் மாடல் ஆகும். ஹார்டுவேரடு
இன்ஃப்ரா ஸ்ட்ரக்சரை சர்வீசாக பெறுகின்றோம்.
ஹார்டுவேரை நாம் பணம் கொடுத்து வாங்க வேண்டாம்,பதிலாக  அவற்றை வாடகைக்கு பெறுகின்றோம்.
இதில் சரியாக ஃபங்க்சன் ஆவதற்கு கிளவுட் ப்ரவைடெர், கிளவுட்
பயனர் இருவருமே பொறுப்பேற்க வேண்டும்.
எப்பொழுது நீங்கள் பணம் கொடுத்து ஹார்டு வேரை வாங்க முடியாதோ
அப்பொழுது நீங்கள் இந்த சர்வீசை பயன்படுத்தலாம். ஹார்டுவேர்  வாங்குவதை விட இது குறைந்த விலையாகும். எவ்வளவு
ஸ்டோரேஜ் தேவைப் படும் என்பதை நீங்கள் முன் கூட்டியே கணிக்க இயலாத போது நீங்கள் இந்த
சர்வீசை பயன்படுத்தலாம்.
நீங்கள் விரைவாக வளர்ந்து வரும் கம்பனி என்றால் இதை பயன்படுத்தலாம்,
நீங்கள் எவ்வளவு பயன்படுத்துகின்றீர்களோ அதற்கு மட்டுமே பணம் செலுத்துகின்றீர்கள்.
Plarform as a service.
Paas ஆனது உங்கள் ப்ராஜெக்டை பில்ட் செய்து, டெஸ்ட் செய்து,
டிப்லாய் செய்ய பயன்படுகின்றது.உதாரணத்திற்கு நீங்கள் ஒரு வெப் அப்ளிகேசனை டிபிலாய்
செய்வதற்கு ஆபரேட்டிங்க் சிஸ்டம், சர்வர், os அப்டேட் முதலியவற்றை சொந்தமாக கொண்டிருக்க
தேவையில்லை.
இதை பொறுத்தவரை பயனர் சர்வரையோ , இன்ஃப்ராஸ்ட்ரக்சரையோ மேனேஜ்
செய்ய தேவையில்லை.
IAAS போலவே இதுவும் சர்வர், ஸ்டோரேஜ் மற்றும் நெட்வொர்கிங்கை
தருகின்றது ஆனால் மேலும் மிடில் வேர் டெவெலப்மென்ட் டூல், பிஸினஸ் இன்டெலிஜென்ட் டூல்கள்
, டேட்டா பேஸ் மேனேஜ்மென்ட் ஆகியவற்றையும் தருகின்றது.
இது பயன்படுத்த எளிதாகும்.
Software as a service.
சாஃப்ட்வேர் ஆனது மையமாக ஹோஸ்ட் செய்ய்ப்பட்டு பயனர்களுக்கு
வாடகைக்கு வழங்கப்படுகின்றது. எல்லா கஸ்டமர்களும் பொதுவான ஒரே வெர்சனை பயன்படுத்துவார்கள்.
இதற்கு மாதந்திரமோ அல்லது ஒரு வருடத்திற்கு உண்டான தொகையை செலுத்த வேண்டியிருக்கும்.
.
உதாரணமாக Dropbox, Slack, GoToMeeting, Google Drive 
ஆகியவற்றை கூறலாம். 
நன்றி 
முத்து கார்த்திகேயன், மதுரை.
TO LEARN COURSES LIKE C,C++, JAVA, DOTNET, PYTHON, PHP, WEB DESIGNING, MS-OFFICE, TALLY CONTACT:96293 29142
 
 
 

 
 
No comments:
Post a Comment