நிரலாக்கம் என்பது என்ன?
நிரலாக்கம் என்பது மனிதர்களும் மற்றும் கணினிகளும் இடையே நடை பெறும் communication செய்ய உதவும் ஒரு வழிமுறை ஆகும்.இது கட்டளைகளின் தொகுப்பாகும்.
நிரலாக்க மொழிகளின் இருவகை:
1. Low level language
2. High level language
Low level language:இது இயந்திர மொழி என்றும் அறியப்படுகின்றது. இவை 0 அல்லது 1 ஆல் உருவாக்கப்படும்.இயந்திரங்களினால் மட்டும் எளிதாய் அறிய முடியும்.
உதாரணம்:
0011 1101
இதன் இயங்குவதற்கு ஏற்படும் நேரம் குறைவு எனினும் நிரலாளர்களால் கற்றுக் கொள்வது கடினம்.
High level language
நிரலாளர்களுக்கு தெரிந்த மொழி high level language ஆகும். இவை உதாரணம்:ஜாவா, சி#,விபி முதலியவை ஆகும். இவை ஆங்கில வார்த்தைகளால் ஆனது. இயந்திர வகையை சார்ந்தது அல்ல.
பிழை அறிதலும் எளிதாகும்.
குறிப்பு: சி மொழியானது low level மொழிகளின் பண்புகளையும் அதே நேரத்தில் high level மொழிகளின் பண்புகளையும் ஒருங்கே பெற்றது. ஆதலால் இது middle level
language எனப்படுகின்றது.
சி மொழியானது 1972 Bell laboratories USA ல் உருவாக்கப்பட்டது.
உருவாக்கப்பட்டதன் முக்கிய நோக்கம்.
Bell laboratory-ல் அப்போது unix os உருவாக்கிக் கொண்டிருந்தார்கள்.அதை உருவாக்குவதற்கு ஒரு மொழி தேவைப் பட்டது.அப்போதிருந்த கோபால்,ஃபோர்ட்டான் போன்றவற்றால் system oriented நிரலாக்கம் என்பது இயலாத ஒன்று.எனவே அதே நிறுவனத்தைச் சேர்ந்த Dennis Ritchie என்பவரால் சி மொழி உருவாக்கப்பட்டது.
சி மொழியானது பெரும்பாலும் OS(Operating system),compilers, Graphics, Games முதலியவை உருவாக்குவதற்கு பயன்படுகின்றது.
பெரும் பாலும் இன்று சி மொழியை கற்றுக் கொள்பவர்கள் சி++, ஜாவா, சி# போன்ற மேம்படுத்தப்பட்ட நிரலாக்க மொழிகளை கற்றுக் கொள்வதற்கு அடிப்ப்டையாகவே கற்றுக் கொள்கின்றனர்.
குறிப்பு:விண்டோஸ் இயக்க முறைமையின் (ஆபரேட்டிங் சிஸ்டம்)90% நிரல் வரிகளானது சி மொழியில் எழுதப்பட்டது.
மேலும் நாம் சி மொழியை கற்றுக் கொள்பதற்கு முன் சில அடிப்படை கருத்துக்களை தெரிந்து கொள்வோம்.
பொதுவாக மென்பொருளை இரண்டாக பிரிப்பார்கள்
அவையாவன
1. Language
2. Package
Package என்றால் எல்லாமே predefined ஆக இருக்கும். நமக்கு தேவையானவற்றை செய்ய மிகவும் மெனக்கிட வேண்டுமென்று அவசியமில்லை.பெரும்பாலான வற்றை just கிளிக் செய்வதன் மூலமே சாதித்துக் கொள்ளலாம்.உதாரணம் ms-word,ms-excel.
Language என்றால் வரிசையாக statements இருக்கும். அதன் மூலம் ஒரு packageயையே உருவாக்கலாம்.உதாரணம் c,c++,java,c#,vb
சரி இப்போது operating system எனப்படும் இயக்க முறைமை என்றால் என்ன என்று பார்ப்போம். Ms-word என்றால் டாகுமென்ட் தயாரிப்பது.ms-excel என்றால் விரிதாள் தயாரிப்பது என்று ஒவ்வொரு மென்பொருளுக்கும் ஒவ்வொரு வேலை.ஆனால் இவ்ற்றையெல்லாம் நிர்வாகிக்க ஒரு மென்பொருள் தேவைப் படுகின்றதே அது தான் operating system(os). இவை மேலும் பயனாளருக்கும் கணினிக்கும் இடையே இடைமுகப்பாக செயல் படுகின்றது.
உதாரணம்.
1. விண்டோஸ்
2. லினக்ஸ்
3. யுனிக்ஸ்
-மீண்டும் தொடர்போம்
No comments:
Post a Comment