ஒரு கிளாஸ்
ஆனது ஒரு ஆப்ஜெக்ட் அல்லது ஒரு குரூப் ஆஃப்
ஆப்ஜெக்டின் அமைப்பு, பிஹேவியர் ஆகியவற்றை டிஃபைன் செய்கின்றது.
ஆப்ஜெக்ட்கள்
ஆனது ஆப்ஜெக்ட் ஒரியண்டட் புரோகிராமிங்கின் அடிப்படையாக விளங்குகின்றது.
ஒரு ஆப்ஜெக்ட்
ஆனது பின் வரும் பண்புகளைக் கொண்டுள்ளது.
1.ஸ்டேட்(state)
ஒரு ஆப்ஜெக்டின்
ஸ்டேட் ஆனது ஒரு ஆப்ஜெட்டின் பண்பு மற்றும் அந்த பண்பின் மதிப்பு ஆகியவற்றைக் குறிக்கின்றது.ஒரு
ஆன் லைன் வாணிகத்தில் ஒரு புத்தகம் ஆர்டர் செய்தால் அதன் பக்கம், விலை போன்றவை பண்புகளாக
அமையலாம்.
2.பிஹேவியர்
ஒரு ஆப்ஜெக்ட்
ஆனது அதன் தன்மையை ஒரு கால அடிப்படையில் மாற்றிக் கொள்கின்றது.சான்றாக ஒரு புத்தகம்
ஆன்லைனில் விற்பனைக்கு உள்ளது என்பதில் இருந்து விற்று விட்டதாக மாறலாம்.ஒரு மாற்றப்பட
ஸ்டேட்டே பிஹேவியர் ஆகும்.
3.ஐடென்டிட்டி(identity)
ஒவ்வொரு
ஆப்ஜெக்டும் யுனிக் ஆக விளங்கும் வகையில் ஒரு ஐடென்டிட்டியை கொண்டுள்ளது. சான்றாக ஒரு
புத்தகத்தின் பக்கங்கள் , பெயர் போன்றவை ஒன்றாக இருந்தாலும் அதன் எண் யுனிக் ஆக இருக்கும்.
ஒரு ஆப்ஜெக்ட்
ஆனது ஒரு கிளாஸின் மெம்பர் ஆகும். ஆப்ஜெக்ட் ஒரியண்டட் மெதடாலஜி என்பது டேட்டா மற்றும்
மெத்தடுகளைக் கொண்டுள்ளது. டேட்டா ஆனது மெத்தடின் மூலம் ஆக்சஸ் செய்யப்படுகின்றது.
-தொடரும்.
No comments:
Post a Comment