Wednesday, December 11, 2019

ஜாவா பாடம் -2 பகுதி-1



ஆப்ஜெக்ட் ஒரியண்டட் ப்ரோக்கிராமிங்க் நண்மைகள்.
ஆப்ஜெக்ட் ஒரியண்டட் ப்ரோக்கிராமிங்க் :
பெரிய பயன்பாடுகள் என்பது ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்ளக் கூடிய ஆப்ஜெக்டுகளை காம்பனண்ட்களாக கொண்டுள்ளன. இதுவே ஒரு பயன்பாட்டை உருவாக்கும் ஆப்ஜெக்ட் ஒரியண்டட் அப்ரோச் ஆகும்.
உதாரணத்திற்கு ஒரு வங்கியானது அதன் ஊழியர்களுக்கு சம்பளப்பட்டியல் தயாரிக்க வேண்டியிருக்கின்றது.ஒரு ஊழியரின் சம்பளம் என்பது அவரின் அடிப்படை ஊதியம், அலோவன்ஸ், டடிடக்சன்ஸ் என எல்லாம் கொண்டு தான் கணக்கிட வேண்டும்.ஒரு நிறுவனத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட விதத்தில் ஊழியர்கள் இருப்பார்கள். சான்றாக ரெகுலர், கான் ட்ராக்டட், கூழி என இருப்பார்கள்.
ஒரு ப்ரோக்ராமர் சாஃப்ட்வேரை உருவாக்கும் பொழுது ஆப்ஜெக்ட் ஒரியண்டட் மெதட் பயன்படுத்தி எல்லா விதமான ஊழியர்களுக்கும் ரியூஸ் செய்யக்கூடிய  கோடிங்கை பொதுவான சம்பளக்கணக்கீடாக உருவாக்கலாம்.
ஊப்ஸ் நண்மைகள்.
1.      ரியல் வேர்ல்டு ப்ரோகிராம்மிங்க்
2.      கோடிங்கை ரியூஸ் செய்தல்.
3.      கோடின் மாடூலாரிட்டி.
4.      மாற்றத்திற்கான ரெசிலிஎன்ஸ் (விரிதிறன்)
5.      இன்ஃபர்மேசன் ஹைடிங்க்.
ரியல் வேர்ல்ட் ப்ரோக்கிராமிங்க்.
ஒரு அடிப்படை கட்டுமானத்தைக் கொண்டு ஒரு நிரலின் செயல்பாட்டை நமக்கு வேண்டியவாறு நீட்டுவித்துக் கொள்ளலாம். ஆப்ஜெக்ட் ஒரியண்டட் என்பது இந்த கோடிங்கை துல்லிதமாக்கின்றது.
நிரல் வரிகளின் ரியூசபிளிட்டி
நீங்கள் எழுதும் ஒரு கிளாஸை வெவ்வேறு பயன்பாடுகள் திரும்ப பயன்படுத்திக் கொள்ளலாம்.
கான்பணண்ட்டுகளை ரியூஸ் செய்வது என்பது திரும்ப எழுதுவதை குறைப்பது மட்டுமல்லாது பிழை ஏற்படுவதையும் குறைக்கின்றது.
மாடூலாரிட்டி
ஒரு ஆப்ஜெக்டை மற்றொரு ஆப்ஜெக்டின் சார்ந்து அல்லாது இண்டிபெண்டண்ட் ஆக அமைக்கலாம். இவை தனித்தனியாக நிர்வாகிக்கப்படுகின்றன.
ஒரு ஆப்ஜெக்டை பாதிக்காவாதவாறு மற்றொரு ஆப்ஜெக்டை மாற்றியமைக்கலாம்.
மாற்றதிற்கான விரிதிறன்.
பழைய சாஃப்ட்வேரை மாற்றி புதிய சாஃப்ட்வேர் உருவாக்கும் பொழுது பழையதை அழிக்காமல் அதை அடிப்படையாகக் கொண்டு மற்றொரு சாஃப்ட்வேரை எழுதலாம்.
இன்ஃபர்மேசன் ஹைடிங்க்.
ஆப்ஜெக்ட் ஒரியண்டட் ஆனது இன்ஃபர்மேசன் ஹைடிங்க் எனும் தகவல் மறைப்பதை நண்மையாக வழங்குகின்றது.தகவலை பொறுத்தவரை பயனருக்கு லிமிட் செய்யப்பட்ட ஆக்சஸை மற்றுமே வழங்குகின்றது.
கடை நிலை பயன்படுத்துனருக்கு நிரலை இயக்கக் கூடிய தகவல் மட்டுமே வழங்கபடுவது மட்டுமே அல்லாமல் அது எவ்வாறு இயங்குகின்றது என்பது மறைக்கப்படுகின்றது.
உதாரணதிற்க்கு இமெயில் பயன்பாடு:
ஓரு இமெயில் கணக்கைஆக்சஸ் செய்வதற்கு அதன் ஐடி மற்றும் பாஸ்வேர்டு போதுமானது. அது எப்படி உங்கள் ஐடியை ஆதண்டிகேட் செய்கின்றது மேலும் அதன் செயல்பாடுகள் உங்களை விட்டு மறைக்கப்பட்டுள்ளன.

-தொடரும்.



ads Udanz

No comments:

Post a Comment