Saturday, March 28, 2020

பைத்தானில் 2 டைமென்சன் அர்ரே.





பொதுவாக அர்ரே என்பது ஒரே வேரியபிளில் ஒன்றுக்கு மேற்பட்ட டேட்டாக்களை சேவ் செய்வதற்கு பயன்படுகின்றது. எல்லா டேட்டாவும் ஒரே டேட்டா டைப்பாக இருக்க வேண்டும்.
2 டைமென்சன் அர்ரே என்பது ரோ மற்றும் காலம்ன் ஆக டேட்டாவை ஸ்டோர் செய்தல் ஆகும்
பைத்தானில் அர்ரேயை பயன்படுத்துவதற்கு முதலில் array என்பதிலில் இருந்து எல்லா ஐட்டம்களையும் இம்போர்ட் செய்து கொள்ளவும்.
கீழே உள்ளவாறு T என்ற அர்ரேயை உருவாக்கி அதன் 0 ரோ இண்டெக்ஸ்(முதல் ரோ) உள்ள் டேட்டாவை காட்சிபடுத்தவும்.
பிறகு ரோ இண்டெக்ஸ் 1 மற்றும் காலம்ன் இண்டெக்ஸ் 2-ல் உள்ள டேட்டாவை காட்சிபடுத்துங்கள்.


from array import *

T = [[11, 12, 5, 2], [15, 6,10], [10, 8, 12, 5], [12,15,8,6]]

print(T[0])

print(T[1][2])
வெளியீடு:
11, 12, 5,2
10
இப்பொழுது எல்லா அர்ரே எலெமெண்டுகளையும் மொத்தமாக காட்ட நெஸ்டட் ஃபார் லூப்பை பயன்படுத்தவும்

from array import *
 
T = [[11, 12, 5, 2], [15, 6,10], [10, 8, 12, 5], [12,15,8,6]]
for r in T:
    for c in r:
        print(c,end = " ")
    print()

வெளியீடு:
11 12 5 2
15 6 10
10 8 12 5
12 15 8 6
இன்செர்ட் மெத்தட்.
இது பொதுவாக குறிப்பிட்ட ரோ அல்லது காலம்ன் இண்டெக்ஸில் டேட்டாவை இன்செர்ட் செய்யபயன்படுகின்றது. கீழே உள்ள நிரலில் ரோ 2 இண்டெக்ஸில்(3வது ரோ) டேட்டா இன்செர்ட் செய்யப்படுகின்றது.
from array import *
T = [[11, 12, 5, 2], [15, 6,10], [10, 8, 12, 5], [12,15,8,6]]
 
T.insert(2, [0,5,11,13,6])
 
for r in T:
    for c in r:
        print(c,end = " ")
    print()
வெளியீடு:
 11 12 5 2
15 6 10
0 5 11 13 6
10 8 12 5
12 15 8 6
டேடா அப்டேட் .
கீழே உள்ள நிரலில் Tஎன்ற அர்ரேயில் ரோ இண்டெக்ஸ் 2(3வதுரோ) உள்ள டேட்டா முற்றிலும் மாற்றியமைக்கப்படுகின்றது மற்றும் 0 ரோ 3 காலம்ன் இண்டெக்ஸில் டேட்டா மாற்றியமைக்கப்படுகின்றது.

from array import *
 
T = [[11, 12, 5, 2], [15, 6,10], [10, 8, 12, 5], [12,15,8,6]]
 
T[2] = [11,9]
T[0][3] = 7
for r in T:
    for c in r:
        print(c,end = " ")
    print()
வெளியீடு:
11 12 5 7
15 6 10
11 9
12 15 8 6
டேட்டா டெலீட்.
Del என்ற் கீவேர்டு மூலம் குறிப்பிட்ட ரோ அல்லது காலம்னில் உள்ள டேட்டாவை டெலீட் செய்யலாம்.

கீழே உள்ள நிரலில் ரோ இண்டெக்ஸ் 3 (4 வது ரோ)  முற்றிலும் டெலீட் செய்யப்படுகின்றது
from array import *
T = [[11, 12, 5, 2], [15, 6,10], [10, 8, 12, 5], [12,15,8,6]]
 
del T[3]
 
for r in T:
    for c in r:
        print(c,end = " ")
    print()
வெளியீடு:
11 12 5 2
15 6 10
10 8 12 5
இவ்வாறு 2 டைமென்சன் அர்ரே பைத்தானில் பயன்படுகின்றது.
நன்றி.
முத்து கார்த்திகேயன்,மதுரை.

ads Udanz

No comments:

Post a Comment