Tuesday, March 31, 2020

React js ரியாக்ட் ஜெ எஸ்அறிமுகம்.



ரியாக்ட் ஓபன் சோர்ஸ் ஜாவாஸ்கிரிப்ட் லைப்ரரி ஆகும்.இது டைனமிக் மற்றும் இன்டர் ஆக்டிவ் யூசர் இன்டெர்ஃபேஸை உருவாக்கப் பயன்படுகின்றது.
ரியாக்ட் ஆனது வெப் மற்றும் மொபைல் அப்ளிகேசன்களின் view(UI) லேயரை திறம்பட கையாளுகின்றது.
ரியாக்ட் ஆனது டேட்டாவை டாக்குமெண்ட் ஆப்ஜெக்ட் மாடலில் ரெண்டெர் செய்ய மட்டுமே பயன்படுகின்றது.எனவே ஸ்டேட் மேனேஜ்மென்ட் மற்றும் ரவுட்டிங்க் போன்றவற்றை கையாளுவதற்கு கூடுதல் லைப்ரரிகள் தேவைப்படுகின்றது.
இதை கற்றுக் கொள்ள் பின் வரும் அறிவுகள் தேவைப்படும்.
1.      Html மற்றும் css.
2.      Javascript ­மற்றும் es6 போன்றவை
3.      Node மற்றும் npm அடிப்படை.
இது ஃபேஸ்புக் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.
ரியாக்ட் ஆனது மெமெரியில் வெர்ச்சுவல் டாம் உருவாக்குகின்றது.
பிரவுசரின் DOM என்பதை நேரடியாக கையாளமால் ரியாக்ட் ஆனது மெமரியில் வெர்ச்சுவல் DOM உருவாக்குகின்றது.அதில் என்னல்லாம் கையாள வேண்டுமோ அனைத்தையும் கையாளுகின்றது. பிறகு பிரவுசர் டாமில் முழுவதுமாக மாற்றாமல் தேவைப்படுவன மட்டையும் அப்டேட் செய்கின்றது.
ரியாக்ட் நிறுவதல்.
முதலில் NODE.JS நிறுவ வேண்டும்.NODE JS ஆனது ரியாக்ட் ஜெ எஸ் இயங்க வேண்டிய ரண் டைம் என்விரான்மெண்டை வழங்குகின்றது.
சென்று டவுன் லோட் செய்து நிறுவிக் கொள்ளவும்.
பிறகு
Node.js கமாண்ட் பிராம்ப்ட் செல்லவும்
பிறகு ரியாக்டை global அல்லது லோக்கல் ஃபோல்டெர் லெவெலில் நிறுவலாம்.
நாம் இப்பொழுது ரியாக்டை குலாபள் லெவெலில் உருவாக்குவோம்.
Node –v
என்று டைப் செய்து என்டெர் தட்டினால்
அதன் வெர்சன் காட்டப்படும்.
npm install  -g create-react-app
என்று கொடுத்தால் ரியாக்ட் இன்ஸ்டால் ஆகிவிடும்.
இப்பொழுது E டிரைவில் reactpr என்று ஒரு ஃபோல்டர் உருவாக்குவோம்.
Cd E:/reactpr
கொடுக்கவும்.
அடுத்து E:
என்று கொடுத்தால் அந்த ஃபோல்டருக்குள் சென்று விடும்.
Create-react-app demo-project.
இதில் demo-project என்பது பிராஜெக்ட் பெயர்.
Cd demo-project
அடுத்து
npm start
என்று கொடுத்து எண்டர் தட்டவும்.
இப்பொழுது பின் வரும் பிரவுசர் விண்டோ வெளிப்படும்.
நன்றி.
முத்து கார்த்திகேயன்,மதுரை.






ads Udanz

No comments:

Post a Comment