Friday, March 27, 2020

சி ஷார்ப் மற்றும் ஜாவா என்ன வேறுபாடு?




ஜாவா அறிமுகம்.
ஜாவா 1995-ல் சன் மைக்ரோ சிஸ்டமால் வெளீயிடப்பட்டது.இது ஜேம்ஸ் கோஸ்லிங்க் என்பவரால் உருவாக்கப்பட்டது.இது பொது பயன்பாட்டிற்கு என உருவாக்கப்பட்டது. ஒரு தடவை எழுதி விட்டு இதை எந்த பிளாட்ஃபார்மில் வேண்டுமானாலும் ரன் செய்யலாம்.முதலில் இது கம்பைல் செய்யப்பட்டு பைட் கோடாக மாற்றப்படுகின்றது. பின்னர் அதற்குறிய jvm –ல் இன்டெர்பிரட் செய்யப்பட்டு இயங்குகின்றது.
சி ஷார்ப் ஒரு அறிமுகம்.
இது ஒரு ஆப்ஜெக்ட் ஒரியண்டட் புரோக்கிராமிங்க் மொழியாகும். இது மைக்ரோசாஃப்டால் வெளியிடப்பட்டது. இது டாட்நெட் ஃப்ரேம் வொர்க்கில் இயங்குகின்றது.
ஜாவா வரலாறு.
இது முதலில் எலெக்ட்ரானிக்ஸ் டிவைசஸ் ,செட் அப் பாக்ஸ் ஆகியவற்றில் இயங்குவதற்கெனெ உருவாக்கப்பட்டது.தொடக்கத்தில் oak என பெயரிடப்பட்டது. பின்னர் எலெக்ட்ரானிக்ஸ் துறையில் ஏற்பட்ட சரிவு மற்றும் வெப் புரோக்கிராமிங்க் தேவை ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு 1995-ல் ஜாவா என பெயர் மாற்றம் செய்யப்பட்டு வெப் நிரலாக்கதிற்கென வெளியிடப்பட்டது.
14 வருடம் கழித்து 2009-ல் ஆரக்கிள் கார்ப்பரேசனால் சன் மைக்ரோ சிஸ்டம் வாங்கப்பட்டு ஜாவா ஆனது ஆரக்கிள் வசமானது.
சி ஷார்ப் வரலாறு.
Anders Hejlsberg என்பவர் சி ஷார்ப் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிப்பவர் ஆவார்.1990-ல் cool என பெயரிடப்பட்டது.பின் சி# என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இது ஜூலை 2000-ல் .நெட் டெவலப்பர் கான்பிரன்ஸில் அறிவிக்கப்பட்டது.
ஜாவா அம்சங்கள்.
மல்டி பிளாட்ஃபார்ம், ஆப்ஜெக்ட் ஒரியண்டட், நெட்வொர்க் சென்ட்ரிக் நிரலாக்க மொழியாகும்.
இது எல்லா பிளாட்ஃபார்மிலும் இயங்கும்.
ஆப்ஜெக்ட் ஒரியண்டட் ஆன்லைன் அப்ளிகேசன் உருவாக்குவதற்கென பயன்படுகின்றது.
ஆப்ஜெக்ட் ஒரியண்டட் புரோகிராமிங்க் மாடலை ஒருங்கினைப்பதற்கு பயன்படுகின்றது.
சி ஷார்ப் அம்சங்கள்.
1.      ஆட்டோமேட்டிக் கார்பேஜ் கலக்சனை ஆதரிக்கின்றது.
2.      நிலையான லைப்ரரியைக் கொண்டிருக்கின்றது.
3.      அசெம்ப்ளி வெர்சனிங்க் கொண்டுள்ளது.
4.      கண்டிசனல் கம்பைலேசனை ஆதரிக்கின்றது.
5.      சிம்பிள் மல்டிதிரட்டிங்க்
6.      லாம்ப்டா மற்றும் linq எக்ஸ்பிரசன்ஸ்.
7.      விண்டோஸ் உடன் ஒருங்கினைந்து செயற்பாடு.
சி ஷார்ப் மற்றும் ஜாவா வேறுபாடுகள்.
ஆபரேட்டர் ஓவர்லோடிங்க்.
சி ஷார்ப் ஆபரேட்டர் ஓவர் லோடிங்கை ஆதரிக்கின்றது.ஜாவா இதை கொண்டிருக்கவில்லை.
ரன் டைம் என்விரான்மெண்ட்.
சிஷார்ப் commaon language run time (clr)-ல் இயங்குகின்றது. ஜாவா java virtual machine (jvm)-ல் இயங்குகின்றது.
API control.
சி ஷார்ப் API ஆனது மைக்ரோ சாஃப்டால் கண்ட் ரோல் செய்யப்படுகின்றது. ஜாவாவில் ஓபன் சோர்ஸ் கம்யூனிட்டி இதை கண்ட் ரோல் செய்கின்றது.
Public classes.
ஒரு சி ஷார்ப் ஃபைலில் எத்தனை பப்ளிக் கிளாஸ்கள் வேண்டுமானாலும் இருக்கலாம். ஜாவாவில் ஒரு ஃபைலிற்கு ஒரு பப்ளிக் கிளாஸ் மட்டுமே இருக்க வேண்டும்.
செக்டு எக்ஸ்செப்சன்ஸ்.
சி ஷார்ப் செக்டு எக்ஸ்செப்சன்களை ஆதரிப்பதில்லை. ஜாவா செக்டு மற்றும் அன்செக்டு எக்ச்செப்சன்கள் இரண்டையுமே ஆதரிக்கின்றது.
ப்ளாட்ஃபார்ம் டிபெண்ட்ஸன்சி.
சி# பெரும்பாலும் விண்டோசில் தான் இயங்குகின்றது. ஜாவா எல்லா பிளாட்ஃபார்மிலும் இயங்குகின்றது.
பாயிண்டர்கள்.
சி # ஆனது அன்சேஃப் மோடில் பாயிண்டர்களை சப்போர்ட் செய்கின்றது. ஜாவா சப்போர்ட் செய்வதில்லை.
கண்டிசனல் கம்பைலேசன்.
சி# கண்டிசனல் கம்பைலேசனை ஆதரிக்கின்றது ஜாவா சப்போர்ட் செய்வதில்லை.
Goto ஸ்டேட்மெண்ட்.
Goto ஸ்டேட்மெண்டை சி ஷார்ப் சப்போர்ட் செய்கின்றது. ஜாவா சப்போர்ட் செய்வதில்லை.
ஸ்ட்ரக்சர் மற்றுக் யூனியன்.
ஸ்ட்ரக்சர் ஆனது சி ஷார்ப்பால் சப்போர்ட் செய்யப்படுகின்றது. ஜாவா இதை ஆதரிப்பதில்லை.
IDE.
சி ஷார்ப் ஆனது விசுவல் ஸ்டுடியோ-ல் இயங்குகின்றது. ஜாவாஆனது Eclipse, netbeans, intellij IDEA போன்ற வற்றில் இயங்குகின்றது.
ஜாவாவை உபயோகிப்பதின் நண்மைகள்.
1.      விரிவான டாக்குமெண்டேசன்.
2.      நிறைய டெவலப்பர்கள்
3.      ஸ்டாண்டர்டு பிளாட்ஃபார்ம் மற்றும் ரியூசபிள் கோட்
4.      மல்டி திரட்டட் என்விரான்மெண்ட்
5.      சிறந்த பெர்ஃபாமன்ஸ்
6.      நிறைய 3RD பார்ட்டி லைப்ரரி.
7.      எளிதாக நேவிகேட் செய்யக்கூடிய லைப்ரரிகள்.

சி ஷார்ப் உபயோகிப்பதின் நண்மைகள்.
1.      லாம்ப்டா மற்றும் ஜெனெரிக் சப்போர்ட்
2.      மைக்ரோசாஃப்ட் கார்ப்பரேசனால் சப்போர்ட் செய்யப்படுதல்.
3.      லாங்குவேஜ் இன்டெக்ரெடட் கொரி(LINQ)
4.      எளிதான எக்ஸ்டென்சன் மெத்தட்கள்.
5.      ஆட்டோமேட்டிக் கார்பேஜ் கலக்சன்
6.      பிராப்பர்ட்டிகள்(get/set methods)
7.      சிறந்த கிளாஸ் கிராஸ் பிளாட்ஃபார்ம் சப்போர்ட்
8.      பேக்வேர்ட் கம்பேசிபிளிட்டி.

ஜாவா உபயோகிப்பதின் தீமைகள்.
1.      Jit கம்பைலர் சற்று மெதுவாக இயங்குதல்.
2.      ஹார்டுவேர் பணச் செலவு அதிகம்.
3.      பாயிண்டர் போன்ற லோ லெவெல் புரோக்கிமிங்க் கான்செப்டுகளை ஆதரிக்காமை.
4.      கார்பேஜ் கலக்சன் மேல் உங்களுக்கு எந்த கண்ட் ரோலும் இல்லை.

சி ஷார்ப் உபயோகிப்பதன் தீமைகள்.
1.      C# என்பது .நெட் ஃப்ரேம் வொர்கின் இண்டர்னல் பார்ட் ஆகும் எனவே c# அப்ளிகேசன் செர்வர் விண்டோஸ் ஆக இருக்க வேண்டும்.
2.      சாஃப்ட்வேர் பணம் கொடுத்து வாங்க வேண்டும்.
3.      ஃப்லெக்ஸ்பிலிட்டி குறைவு ஏனெனில் இது பெரும்பாலும் .நெட் ஃப்ரேம் வொர்க்கை சார்ந்திருப்பது.
4.      நிரலில் மாற்றம் செய்தால் ஒவ்வொரு தடவையும் கம்பைல் செய்தல் வேண்டும் எனவே இயக்கம் சற்று மெதுவானது தான்.
ஜாவா மற்றும் சி # எதை நீங்கள் தேர்ந்த்டுக்க வேண்டும்?
உங்கள் தேவைக் கேற்றார் போல் நீங்கள் இரண்டில் எதை வேண்டுமானாலும் தேர்ந்த்டுக்கலாம்.எனினும் ஜாவாவானது பாதுகாப்பு மற்றும் பிளாட்ஃபார்ம் இண்டிபெண்டண்ட் ஆகிய நண்மைகளைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் c# ஆனது .நெட் நிரலாளர்களால் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றது.
-நன்றி.
முத்து கார்த்திகேயன்,மதுரை.



ads Udanz

No comments:

Post a Comment