இந்த கட்டுரையில் சி ஷார்ப் ஏஎஸ்பி டாட்னெட்டில் இருந்து எவ்வாறு இமெயில் அனுப்புவது என்று பார்ப்போம். இதற்கு நிறைய வழி முறைகள் இருக்கின்றன. இதில் SMTP சர்வரை பயன்படுத்தி Gmail மூலம் இமெயில் அனுப்புவது என்று பார்ப்போம்.
இதற்கு தேவைபடுவன
1. ஆக்டிவ் இன்டெர்நெட் கனக்சன்.
2. ஏதாவது ஒரு இமெயில் ஐடி.
விசுவல் ஸ்டுடியோவை ஒபன் செய்து file-> new project->c#->empty web site.
Project பெயராக sending Emails என்று கொடுக்கலாம்.
சொலூசன் எக்ஸ்ப்ளோரரில் வலது add new items-> default.aspx மற்றும் ஒரு கிளாஸ் ஃபைலை உருவாக்கி கொள்ளவும்.
ஃபார்மில் மூன்று டெக்ஸ்ட்பாக்சையும் இரண்டு பட்டனையும் சேர்த்துக் கொள்ளவும்.
இமெயில் அனுப்புவதற்கு கீழ் கண்ட இரு நேம்பேசையும் நிரலில் இம்போர்ட் செய்து கொள்ளவும்.
- using System.Net.Mail;
- using System.Net;
இரு நேம்பேசையும் பற்றி அறிந்து கொள்ள MSDN –ல் ரெஃபெர் செய்து கொள்ளவும்.
Web.config சென்று ஆப் செட்டிங்கில் இமெயில் பற்றிய தகவல்களை தரவும். இவ்வாறு செய்யும் பொழுது ஏதாவது மாற்றும் எனில் web.config-ல் மட்டும் எடிட் செய்து கொள்ளலாம்.
இதன் மூலம் இமெயில் அனுப்பும் பொழுது நம் இமெயில் பற்றிய தகவல்களை நிரல் அறிந்து கொள்கின்றது.
இப்பொழுது நாம் புதிதாக இணைத்துள்ள கிளாசில் பின் வரும் ஸ்டேட்டிக் மெத்தடை இணைத்துக் கொள்ளவும்.
மேலே உள்ள கிளாஸ் ஃபைலில் ஒரு ஸ்டேட்டிக் மெத்தட் உருவாக்கப்பட்டுள்ளது. இது மூன்று பாராமீட்டர்களை ஏற்கின்றது.
ToEmail-> அனுப்ப வேண்டிய இமெயில் முகவரி.
Sub-> இமெயிலின் சப்ஜெக்ட்
Message-> இமெயிலின் பாடி.
இப்பொழுது பட்டன் கிளிக் ஈவண்டில் இமெயில் அனுப்பும் நிரலை கீழ்கண்டவாறு எழுதவும்
இப்பொழுது நிரலை இயக்கி இமெயில் பற்றிய தகவல்களை டெக்ஸ்ட்பாக்சில் தந்து பட்டனை கிளிக் செய்தால் இமெயில் அனுப்பப்படும்.
நன்றி.
முத்து கார்த்திகேயன், மதுரை.
தொடர்புக்கு:
9629329142
No comments:
Post a Comment