டேட்டா அப்ஸ்ட்ராக்சன் என்பது ஆப்ஜெக்ட் ஒரியண்டட் மொழியாக்கதின் முக்கியமான கருத்து ஆகும்.
இது கடை நிலை பயனருக்கு தேவையான தகவல்களை மட்டும் தரும்.அதன் இம்ப்லிமெண்டேசன் தகவல்களை மறைத்து விடும்.
அப்ஸ்ட்ராக்ட் கிளாஸ் என்பது கிளாஸ் மற்றும் இன்டெர்ஃபேசின் கலவை ஆகும். ஒரு அப்ஸ்ட்ராக்ட் கிளாஸிற்க்கு ஆப்ஜெக்ட் உருவாக்க முடியாது. ஆனால் அதை இன்ஹெரிட் செய்ய இயலும். அந்த கிளாஸிற்க்கு ஆப்ஜெக்ட் உருவாக்கி கொள்ளலாம்.
ஒரு அப்ஸ்ட்ராக்ட் கிளாஸில் மெத்தட் அறிவிப்பு வரலாம் .அதே நேரத்தில் இம்ப்லிமென்டேசனுடன் கூடிய மெத்தட்களும் வரலாம்.
அப்ஸ்ட்ராக்ட் கிளாசை இன்ஹெரிட் செய்யும் கிளாசில் அதில் அறிவிக்கப்பட்டுள்ள எல்லா மெத்தட்களின் இம்ப்லிமென்டேசனும் வரலாம்.
அப்ஸ்ட்ராக்ட் கிளாசானது ‘abstract’ என்ற கீவேர்டுடன் அறிவிக்கப்படுகின்றது.
சான்று நிரல்-1.
<?php
abstract class a
{
abstract public function dis1();
abstract public function dis2();
}
class b extends a
{
public function dis1()
{
echo "javatpoint";
}
public function dis2()
{
echo "SSSIT";
}
}
$obj = new b();
$obj->dis1();
$obj->dis2();
?>
1.
சான்று நிரல்-2
<?php
abstract class Animal
{
public $name;
public $age;
public function Describe()
{
return $this->name . ", " . $this->age . " years old";
}
abstract public function Greet();
}
class Dog extends Animal
{
public function Greet()
{
return "Woof!";
}
public function Describe()
{
return parent::Describe() . ", and I'm a dog!";
}
}
$animal = new Dog();
$animal->name = "Bob";
$animal->age = 7;
echo $animal->Describe();
echo $animal->Greet();
?>
நன்றி
முத்து கார்த்திகேயன்,மதுரை
No comments:
Post a Comment