Monday, February 8, 2021

Php include() மற்றும் require() என்ன வேறு பாடு?

 



Php யில் பல்வேறு எலிமெண்டுகள் மற்றும் ஃபங்சன்கள் உருவாக்கி நமக்கு தேவைப்பட்ட இடத்தில் இணைத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு பக்கத்திலும் ஒரே கோடிங்க் எழுதுவது நிறைய நேரம் எடுத்துக் கொள்ளும்.அதற்கு பதில் ஒரே தடவை எழுதி பல்வேறு பக்கங்களில் அவற்றை இன்குலுட் செய்யலாம்.

அதற்கு இரு ஃபங்க்சன்கள் பயன்படுகின்றது . அவையாவன

1.      include()

2.      require()

கிட்டத்தட்ட ஒரே பயன்பாடு தான் இரண்டு ஃபங்க்சன்களுமே. ஆனால் இணைக்க வேண்டிய ஃபைல் இல்லாத சமயத்தில் இவை வேறுபடும்.

அந்த நேரத்தில் Include() ஆனது வார்னிங்க் செய்தி காட்டி நிரல் இயக்கத்தை தொடரும்.

ஆனால் require() ஆனது எர்ரர் செய்தி காட்டி நிரல் இயக்கத்தை நிறுத்தி விடும்.

நண்மைகள்.

கோட் ரியூசபிலிடி

எளிதாக எடிட் செய்து கொள்ளலாம்.

Php include()

இந்த ஃபங்க்சன் ஆனது ஒரு குறிப்பிட்ட ஃபைலை ஒரு குறிப்பிட்ட பக்கத்தில் இன்செர்ட் செய்ய பயன்படுகின்றது.

இரண்டு சிண்டாஸ்கள் உள்ளன.

அவையாவன.

1.    include 'filename ';  

2.    Or   

3.    include ('filename');  

சான்று நிரல்.

Menu.html

·  <a href="http://www.programmingintamil.com">Home</a> |     

·  <a href="http://www.programmingintamil/php-tutorial">PHP</a> |     

·  <a href="http://www.programmingintamil.com/java-tutorial">Java</a> |      

·  <a href="http://www.programmingintamil/html-tutorial">HTML</a>  

 

Include1.php.

1.    <?php include("menu.html"); ?>  

2.    <h1>This is Main Page</h1>  

Output:

Home |

PHP |

Java | 

HTML

This is Main Page

Php require.

இதுவும் ஒரு குறிப்பிட்ட பாத்தில் உள்ள ஃபைலை ஒரு குறிப்பிட்ட  இடத்தில் இணைத்துக் கொள்ள பயன்படுகின்றது.

சிண்டாக்ஸ்.

1.    require 'filename';  

2.    Or   

3.    require ('filename');  

சான்று நிரல்.

Require1.php

1.    <?php require("menu.html"); ?>  

2.    <h1>This is Main Page</h1>  

வெளியீடு.

Home | 
PHP | 
Java |  
HTML

This is Main Page

இரண்டுக்கும் உள்ள வேறுபாடு.

Include () ஃபங்க்சன் ஆனது ஒரு குறிப்பிட்ட ஃபைல் பயன்பாட்டில் இல்லா விடில் வார்னிங்க் செய்தியை காட்டி இயக்கத்தை தொடரும்.

Require() ஃபங்க்சன் ஆனது பிழைச் செய்தியை காட்டி இயக்கத்தை நிறுத்தி விடும்.

-நன்றி.

முத்து கார்த்திகேயன், மதுரை.

 

ads Udanz

No comments:

Post a Comment