Thursday, February 4, 2021

நோட் ஜெ எஸ் மற்றும் பைத்தான் ஒரு ஓப்பீடு:

 


NodeJS

நோட் js என்பது நிரலாக்க மொழியல்ல இது ஒரு ஜாவாஸ்கிரிப்டிற்கான ஓபன் சோர்ஸ் ரண்டைம் என்விரான்மெண்ட் ஆகும்.இது 2009-ல் Ryan Dhal என்பவரால் முதலில் ரிலீஸ்  செய்யப்பட்டது.

இது கூகிளின் v8 எஞ்சினை அடிப்படையாக கொண்டது. இது பில்ட் இன் கம்பைலர், இன்டெர்பிரட்டர் ஆகியவை கொண்ட விர்ச்சுவல் மெசின் ஆகும். இது c++ கொண்டு எழுதப்பட்டது.இது கூகிளால் குரோம் பிரவுசரில் ஜாவாஸ்கிரிப்டை மெசின் கோடாக மாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட்து. V8 எஞ்சின் ஆனது அதிக வேகம், செயல்பாடு ஆகியவற்றிற்காக பெயர் எடுத்தது.

Python

இது ஒரு ஓபன் சோர்ஸ் ஹை லெவல் நிரலாக்க மொழியாகும். இது 1991 –ல் வெளியிடப்பட்டது.

பைத்தான் ஆனது கூகிளின் ஆப் எஞ்சினில் முக்கியமாக இயங்குகின்றது. ஆப் எஞ்சின் ஆனது உங்களை பைத்தான் கொண்டு வெப் சைட் உருவாக்க அனுமதிக்கின்றது. இது நிறைய லைப்ரரிகள் மற்றும்  டூல்களை வழங்குகின்றது.

கட்டமைப்பு

Node js.

இது ஈவண்ட் டிரைவண்ட் என்விரான்மென்டில் இயங்குகின்றது. இது அசிங்க்ரன்ஸ் இன்புட் அவுட்புட் களை அனுமதிக்கின்றது.ஒரு ஈவண்ட் நடந்தவுடன் ஒரு செயல்பாடு நடக்கின்றது. அதாவது எந்த செயல்பாடும் திரட்டை தடை செய்வது இல்லை. ஈவண்ட் டிரைவண்ட் செயல்பாடானது உரையாடல் செயல்பாடுகள் மற்றும் இணைய தள விளையாட்டுகளை உருவாக்க எளிதாக இருக்கின்றது.

 Python

பைத்தான் அவ்வாறு உருவாக்கப்பட்டது அல்ல. எனினும் asyncio போன்ற மாடூல்களை கொன்டு பைத்தானில் நோட் ஜெ எஸ் போன்றுஅசிங்க்ரன்ஸ் நிரல்களை உருவாக்க  முடியும்.

.

Speed

NodeJS

இது v8 எஞ்சினால் இன்டெர்பிரட் செய்யப்படுகின்றது.இதன் செயல்பாடு குறிப்பிடத்தகுந்தது.

இரண்டாவது நிரல் இயக்கம் வெப் பிரவுசருக்கு வெளியே நடப்பதால் பயன்பாடானது ரிசோர்ஸ் எஃப்ஃபிசியண்ட் ஆக இருக்கின்றது.மேலும் பிரவுசரால் பயன்படுத்த முடியானதான TCP  சாக்கெட்களை பயன்படுத்துகின்றது.

இதன் ஈவண்ட் ட்ரைவண்ட் தடையில்லாத கட்டமைப்பானது ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கோரிக்கைகளை செயல்படுத்த வழிவகுக்கின்றது.

Python

பைத்தான் மற்றும் ஜாவாஸ்கிரிப்ட் இரண்டுமே இண்டர்பிரட்டட் மொழியாகும். இது ஜாவா போன்ற கம்பைல்டு மொழிகளைக் காட்டிலும் தாமதமாகவே இயங்குகின்றது.

நோட் ஜெ எஸ்  உடன் ஒப்பிடுகையில் பைத்தான் ஆனது single flow மேலும் கோரிக்கைகள் தாமதமாகவே இயங்குகின்றது.

எனவே பைத்தான் ஆனது வேகம் ,செயல்பாடு மற்றும் சிக்கலான கணக்கீடுகளுக்கு ஏற்றது அல்ல.

எனவே வேகத்தை பொருத்தவரை நோட் ஜெ எஸ் சிறந்த தாகும்.

Syntax

NodeJS

சிண்டாக்சை பொருத்தவரை ஒன்று சிறந்தது மற்றொன்று அல்ல என்று கூற முடியாது. உங்களுக்கு ஜாவாஸ்கிரிப்ட் தெரியும் எனில் நோட் ஜெ எஸ் எழுதுவது எளிதானது ஆகும்.

 

Python

பைத்தானின் சிண்டாக்ஸ் ஆனது அதன் முக்கியமான பயன் ஆகும். நோட் ஜெ எஸ்ஸை காட்டிலும் குறைவான வரிகளில் நிரல் எழுத முடியும். இதில் கர்லி அடைப்பு குறுகள் பயன்பாடு கிடையாது.

எனவே நிரல் ஆனது வாசிக்கவும் டிபக் செய்யவும் எளிதாகுகின்றது.

என்வே சிண்டாக்சை பொருத்தவரை பைத்தான் சிறந்ததாகும்.

 

Scalability

NodeJS

நோட் ஜெ எஸ் கொண்டு மைக்ரோ சர்வீஸ்கள்  மற்றும் மாடூல்கள் கொண்டு ஒன்றுக்கொன்று லைட் வெயிட் மெக்கானிசன் உடன்  உரையாட வைக்கலாம்.

நோட் ஜெ எஸ் பயன்பாடுகளை வெர்டிகல் மற்றும்ஹரிசாண்டல் இரண்டு திசையிலும் ஸ்கேல் செய்யலாம்.

டைப்பிங்கை பொருத்தவரை இதில் நிறைய வசதிகள் இருக்கின்றது.

உங்களால் வீக்லி டைப்டு ஜாவாஸ்கிரிப்ட் அல்லது ஸ்ட்ராங்க்லி டைப்டு டைப் ஸ்கிரிப்ட் இரண்டையும் பயன்படுத்தலாம்.

 

.Python

ஒரு பயன்பாட்டை ஸ்கேல் செய்ய மல்டி திரட்டிங்க் தேவை. பைத்தானை பொறுத்தவரை மல்டி திரட்டிங்க் வசதி கிடையாது.

பைத்தானில் மல்டி திரட்டிங்கிற்கு லைப்ரரிகள் இருந்தாலும் அது உண்மையான மல்டிதிரட்டிங்க் கிடையாது.

மேலும் பைத்தான் டைனமிக் டைப்டு மொழியாகும். டைனமிக் டைப்டு நிரலாக்க மொழிகள் பெரிய திட்டங்களுக்கு ஏற்றது அல்ல.

என்வே ஸ்கேலபிளிட்டியை பொருத்தவரை நோட் ஜெ எஸ் சிறந்தது.

 

Extensibility

NodeJS

நோட் ஜெ எஸ் பயன்பாடுகளை எளிதாக நீட்டுவிக்கலாம் மற்றும் பல்வேறான டூல்களை கொண்டு ஒன்றினைக்கலாம்.

இது Express, Hapi, Meteor, Koa, Fastify போன்ற பல்வேறான ஃப்ரேம் வொர்க்குகளை கொண்டு ஒன்றினைக்கலாம்..

Python

பைத்தான் ஆனது 1991-ல் அறிமுகப்பட்ட காலத்தில் இருந்து நிறைய டூல்களும் ஃப்ரேம் வொர்க்குகளும் உருவாக்கப்பட்டுள்ளது.

.

 

சான்றாக பைத்தானை சப்லைம் டெக்ஸ்ட் போன்ற எடிட்டர் உடன் ஒன்றினைக்கலாம்.

டெஸ்ட் ஆட்டோமேசனுக்கு Robot Framework இருக்கின்றது. வெப் டெவலப்மென்டிற்க்கு Django, Flask போன்ற ஃப்ரேம் வொர்க்குகள் இருக்கின்றன.

Libraries

NodeJS

இதில் NPM –Node Package Manager கொண்டு லைப்ரரிகள் மற்றும் பேக்கேஜ்களை நிர்வாகிக்கலாம்..

Python

 இதில்  pip- “pip installs python “ கொண்டு லைப்ரரிகள் மற்றும் பேகேஜ்களை நிர்வாகிக்கலாம்.

லைப்ரரிகளை பொருத்தவரை இரண்டுமே வெற்றி பெருகின்றது.

Universality

NodeJS

இதில் ஜாவா ஸ்கிரிப்ட் கொண்டு பேக் எண்ட் மற்றும் ஃபிரண்ட் எண்ட் இரண்டு பக்கத்திலும் பயன்படுத்தலாம்.

நோட் ஜெ எஸ் கொண்டு வெப் பயன்பாடுகள் மட்டுமல்லாது மொபைல், டெஸ்க்டாப் அப்ளிகேசன் எது வேண்டுமென்றாலும் உருவாக்கலாம்.

நோட் ஜெ எஸ் கொண்டு பயன்பாடு உருவாக்கி எந்த ஆபரேடிங்க் சிஸ்டெமிலும் இயக்கலாம்.

Python

பைத்தான் பேக் எண்ட் , ஃப்ரண்ட் எண்ட் இரண்டிலும் பயன்படுத்தலாம்.பைத்தானும் கிராஸ் பிளாட்ஃபார்ம் ஆகும் . இதிலும் நிரல் உருவாக்கி எல்லா ஆபரேட்டிங்க் சிஸ்டத்திலும் இயக்கலாம்

பைத்தான் வெப் மற்றும் விண்டோஸ் பயன்பாடுகளுக்கு உருவாக்கினாலும் மொபைல் கம்ப்யூட்டிங்கை பொறுத்தவரை சிறந்ததல்ல. AI, IoT பொறுத்த வரை பைத்தான் வேகமாக வளர்ந்து வருகின்றது.

யுனிவெர்சலிடியை பொறுத்த வரை நோட் ஜெ எஸ், பைத்தான் இரண்டுமே சிறந்தது

 

Learning curve

NodeJS

 நோட் ஜெ எஸ் ஜாவா ஸ்கிரிப்டை அடிப்படையாக கொண்டதால் எளிதாக கற்றுக் கொள்ளலாம்.

நோட் ஜெ எஸ் இன்ஸ்டாலேசனும் எளிதாகும். எனினும் இது ஈவண்ட் ட்ரைவண்ட் ஆதலால் டெவலப்பர்கள் கற்றுக் கொள்ள சற்றுக் கொள்ளவேண்டியிருக்கின்றது.

Python

உங்களுக்கு ஜாவாஸ்கிரிப்ட் தெரியாது என்றால் பைத்தான் மற்றும் நோட் ஜெ எஸ் இரண்டில் எதைக் கற்றுக்கொள்வது என்ற தடுமாற்றம் இருந்தால் பைத்தானை தேர்ந்தெடுப்பது நல்லது.

பைத்தானில் நிரல் எழுதும் பொழுது குறைவான நிரல் வரிகளே போதும். மேலும் பைத்தான் கற்றுக் கொள்ளும் நிரல் வரிகளை எவ்வாறு முறையாக இன்டெண்ட் செய்யலாம் என்பதையும் கற்றுக் கொள்ளலாம்.

கற்றுக் கொள்வதை பொறுத்த வரை பைத்தான், நோட் ஜெ எஸ் இரண்டுமே எளிதாகும். இதில் எது கற்றுக் கொள்வது என்பது அவரவர் சொந்த தேர்வு எடுத்துக் கொள்ளலாம்.

பைத்தானை லினக்ஸ், விண்டோஸ் இரண்டிலும் எளிதாக இன்ஸ்டால் செய்யலாம்.ஆனால் மேக் ஓ எஸ்ஸில் நிறுவுது கடினம்

Community

NodeJS

நோட் ஜெ எஸ் கம்யூனிட்டி பெரியதாகும் மற்றும் ஆக்டிவ் ஆனதாகும். இது அறிமுகப்படுத்தப்பட்டு 10 ஆண்டுகள் ஆகின்றது. அதிலிருந்து இதன் கம்யூனிட்டி வளர்ந்து இப்பொழுது பெரியதாக இருக்கின்றது

Python

பைத்தான்  ஆனது நோட் ஜெ எஸ் கட்டிலும் வயதானது ஆகும். நீங்கள் பிசினஸ் நடத்துவரோ அல்லது டெவலப்பர் ஆனாலோ பைத்தானின் பெரிய கம்யூனிட்டி உங்களுக்க்கு கரம் கொடுக்கும்.

Node JS vs Python: 8 – 6

Apps it is best suitable for

NodeJS

. ஈவண்ட் டிரைவண்ட் ஆதலால் இது கிளையண்ட் மற்றும் சரவர் சைட் இரண்டு பக்கத்திலும் பயன்படுகின்றது. எனினும் cpu  ரிசோர்ஸ்  அதிக அளவில் பயன்படுத்துவது எனில் நோட் ஜெ எஸ் சிறந்ததல்ல.

Python

பைத்தான் விண்டோஸ், வெப் டெவெலப்மென்ட், டேட்டா சைன்ஸ், மெசின் லியர்னிங்க் ,செயற்கை நுண்ணறிவு ஆகிய எல்லா துறைகளிலும் பயன்படுகின்றது.

முடிவுரை.

ஒவ்வொரு பயன்பாடும் வெவ்வேறு தேவைகள் இருக்கும். எனவே இரண்டில் எதை தேர்ந்தெடுப்பது என்பது அந்த பயன்பாட்டின் தேவையை பொருத்ததாகும்.

முத்து கார்த்திகேயன்,மதுரை

ads Udanz

No comments:

Post a Comment