பூலியன் டேட்டா இனம்.
பூலியன் டேட்டா இனமானது true அல்லது false மதிப்புகளுக்குள் ஒன்றை
சேமிக்கிறது. பூலியன் இனத்துக்கும் இன்டிஜர் (integer) எந்த டேட்டா இன மாற்றமும் கிடையாது.அதாவது சி
மொழியைப் போல் 0 என்பதை falseக்கும்
1 என்பதை trueவிற்க்கும்
எடுத்துக் கொள்ளாது.
// Demonstrate bool values.
using System;
class BoolDemo
{
static void Main()
{
bool b;
b = false;
Console.WriteLine("b is " + b);
b = true;
Console.WriteLine("b is " + b);
// A bool value can control the if statement.
if(b) Console.WriteLine("This is executed.");
b = false;
if(b) Console.WriteLine("This is not executed.");
// Outcome of a relational operator is a bool value.
Console.WriteLine("10 > 9 is " + (10 > 9));
}
}
Output:
b is False
b is True
This is executed.
10 > 9
is True
மேலே உள்ள நிரலின் படி முதலில் WriteLine மெத்தட் ஆனது
b என்ற பூலியன் வேரியபிளின் மதிப்பை
வெளிடுகின்றது. பின் b ன் மதிப்பானது if ஸ்டேட்மென்ட்டை கன்ட்ரோல் செய்கின்றது.
அடுத்த முக்கியமானது > operator ஆனது பூலியன் மதிப்பை வெளியிடுகின்றது.
(10>9) ஐ ()க்குள்
கொடுத்திருப்பதின் காரணம் + operator ஆனது > ஐ
விட முன்னிலை அதிகம்.
வெளியீட்டில்
சில வசதிகள்.
WriteLine
மெத்தடின் மூலம் நமக்கு எவ்வாறு data output வேண்டுமோ அவ்வாறு அமைத்துக் கொள்ளலாம் .
String
myName=”muthu”;
Console.WriteLine(“my
name is “+ myName);
மேற்கண்ட வரிகளின் output ஆனது பின் வருமாறு இருக்கும்
My
name is muthu.
எனினும் floating point
numbersஐ வெளியிடும் போது எத்தனை decimal places போண்றவற்றை நம்மால் கொடுக்க முடியாது.
உதாரணத்திற்கு
Console.WriteLine(“10.0/3.0 is “+10.0/3.0)
பின்வருமாறு வெளிடும்.
10.0/3.0 is 3.3333333
Number format ன் கன்ட்ரோல் ஆனது பின் வரும் writeLine statement படி கொடுக்கப்படுகின்றது.
WriteLine(“format string”, arg0, arg1, ... , argN);
இந்த WriteLine மெத்தடில் ஆர்க்கியுமென்ட்ஸ் + operator க்கு பதில் ,(comma) operatorல் பிரிக்கப்படுகின்றது.
உதாரணமாக
Console.WriteLine("February has {0} or {1}
days.", 28, 29);
வெளியீடு:
February has
28 or 29 days.
அதாவது
{0} ஆனது 28 ஆலும் {1} என்பது 29 ஆலும் replace செய்யப்பட்டிருக்கின்றது.
WriteLine மெத்தடின் அடுத்த இனம்
Console.WriteLine("February
has {0,10} or {1,5} days.", 28, 29);
முதலில்
{0,10} என்பதில் உள்ள 0 ஆனது முதல் ஆர்க்யூமென்ட் என்பதையும் 10 என்பது fieldந் அகலமானது 10 என்பதையும் குறிகின்றது.
இரண்டாவது
உள்ள {1,5} என்பது 1 என்பது இரண்டாவது ஆர்க்யூமென்ட் என்பதையும் 5 என்பது fieldந் அகலமானது 5 என்பதையும் குறிகின்றது.
வெளியீடு:
February has 28
or 29 days.
WriteLine மெத்தடின் அடுத்த இனம்:
Console.WriteLine("Here
is 10/3: {0:#.##}", 10.0/3.0);
வெளியீடு:
Here is 10/3:
3.33
மேலே
உள்ள WriteLine மெத்தடின் #.## ஆனது இரண்டே தசமஸ்தானம் என்பதைக்
குறிக்கின்றது
மற்றுமொரு
உதாரணம்
.
Console.WriteLine("{0:###,###.##}",
123456.56);
வெளியீடு:
123,456.56
மற்றுமொரு
உதாரணம்.
decimal balance;
balance = 12323.09m;
Console.WriteLine("Current
balance is {0:C}", balance);
வெளியீடு:
Current
balance is $12,323.09
C
ஆனது வெளியீட்டை currency formatல் வெளியிடுகின்றது.
மாதிரி நிரல்.
using
System;
class UseDecimal
{
static void Main()
{
decimal price;
decimal discount;
decimal discounted_price;
// Compute discounted price.
price = 19.95m;
discount = 0.15m; // discount rate is 15%
discounted_price = price - ( price * discount);
Console.WriteLine("Discounted price: {0:C}",
discounted_price);
}
}
வெளீயீடு:
Discounted
price: $16.96
-தொடரும்