Monday, February 5, 2018

CSS-கற்றுக் கொள்ளலாம்-பகுதி-8




CSS Animation(css அனிமேசன்)

CSS Animation பண்பானது ஒரு இணைய பக்கத்தில் அனிமேசன் செய்ய பயன்படுகின்றது.. ஜாவாஸ்கிரிப்ட் அல்லது ஃப்ளாஷ் பதிலாக நாம் css கொண்டே அனிமேசன் செய்யலாம்..
CSS3 @keyframes Rule என்றால் என்ன?
CSS3 @keyframes ஆனது css அனிமேசன் தொடரை நிர்வாகிக்கின்றது.
அனிமேசன் என்றால் என்ன?
அனிமேசன் என்பது ஒரு எலெமெண்டின் பண்புகளை ஒன்றிலிருந்து மற்றதற்கு படிபடியாக மாற்றப் பயன்படுகின்றது.ஒரு அனிமேசனில் நாம் விரும்பிய பண்புகளை சேர்த்துக் கொள்ளலாம்.மாற்றங்களை நாம் சதவீத கணக்கில் கொடுக்கலாம்.0% என்பது ஒரு அனிமேசனின் தொடக்க்த்தையும் 100% என்பது ஒரு அனிமேசனின் முடிவினையும் குறிக்கின்றது..
Css அனிமேசன் எவ்வாறு செயல்படுகின்றது?
ஒரு அனிமேசன் ஆனது @keyframe விதியில் உருவாக்கும் பொழுது ஒரு செலக்டருடன் பைண்ட் செய்யப்பட வேண்டும்.ஒரு அனிமசேன் ஆனது குறைந்த பட்சம் கீழ் காணும் இரண்டு பண்புகளை கொண்டிருத்தல் வேண்டும்.
1.   அனிமேசனின் பெயர்.
2.   அனிமேசன் நடக்கும் மொத்த நேரம்


CSS animation பண்புகள்
பண்புகள்
Description

@keyframes
இது அனிமேசனை ஸ்பெசிபை செய்ய பயன்படுகின்றது.
Animation

இது ஒன்றிரண்டு பண்புகளைத் தவிர்த்து மற்ற எல்லா பண்புகளையும் மதிப்பிருத்தப் பயன் படுகின்றது
animation-delay
இது அனிமசன் எப்பொழுது தொடங்க வேண்டும் என்பதனைக் குறிக்கப்பயன்படுகின்றது.
animation-direction
இது அனிமேசன் ஆனது எந்த திசையில் செயல்படுத்த வேண்டும் என்பதை கூற பயன்படுகின்றது.
animation-duration
இது அனிமேசன் மொத்தம் எவ்வளவு நேரம் நடை பெற வேண்டும் என்பதைக் குறிப்பிட பயன்டுகின்றது.
animation-fill-mode
இது அனிமேசன் நடைபெறா பொழுது ஒருஎலெமெண்டின் பண்புகள் என்ன என்பதைக் குறிப்பிட பயன்படுகின்றது.
animation-iteration-count
இது அனிமேசன் மொத்தம் எத்தனை  தடவை நடக்க வேண்டும் என்பதைக் குறிப்பிடப் பயன்படுகின்றது.
animation-play-state
இது அனிமேசன் எந்த நிலையில் இருக்கின்றது என்பதைகுறிப்பிட பயன்படுகின்றது. உதராணத்திற்கு ஒரு அனிமேசன் ஆனது இயங்கு நிலையில் உள்ளதா அல்லது தாற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதா என்பதை குறிப்பிட பயன்படுகின்றது.
animation-name
இது அனிமேசனின் பெயரைக் குறிப்பிடப் பயன்படுகின்றது.
animation-timing-
function
இது அனிமேசனின் வேகத்தைக் குறிப்பிடப் பயன்படுகின்றது
Css அனிமேசன் உதாரணம் ஒரு எலெமெண்டின் பின்னனி வண்ணத்தை மாற்றுவது எப்படி?
பின் வரும் நிரலில் ஒரு எலெமெண்டின் பின்னனி வண்ணத்தை சிவப்பு நிறத்திலிருந்து கருப்பு நிறத்திற்கு எவ்வாறு மாற்றுவது என்பதை குறிப்பிட பயன்படுகின்றது.
சான்று நிரல்-1
<!DOCTYPE html> 
<html> 
<head> 
<style>  
div { 
    width: 100px; 
    height: 100px; 
    background: red; 
    -webkit-animation: myfirst 6s; /* Chrome, Safari, Opera */ 
    animation: myfirst 5s; 
} 
/* Chrome, Safari, Opera */ 
@-webkit-keyframes myfirst { 
    from {background: red;} 
    to {background: green;} 
} 
/* Standard syntax */ 
@keyframes myfirst { 
    from {background: red;} 
    to {background: green;} 
} 
</style> 
</head> 
<body> 
<p><b>Note:</b> The IE 9 and earlier versions don't support CSS3 animation property. </p> 
<div></div> 
</body> 
</html>
வெளியீடு:



CSS அனிமேசன் உதாரணம்.
பின் வரும் உதாரணம் ஒரு அனிமேசனை சதவீத  கணக்கீடு கொண்டு எவ்வாறு மாற்றுவது என்பதைக் குறிப்பிடப் பயன்படுகின்றது.
சான்று நிரல்-2
<!DOCTYPE html> 
<html> 
<head> 
<style>  
div { 
    width: 100px; 
    height: 100px; 
    background: red; 
    position: relative; 
    -webkit-animation: myfirst 5s; /* Chrome, Safari, Opera */ 
    animation: myfirst 5s; 
} 
/* Chrome, Safari, Opera */ 
@-webkit-keyframes myfirst { 
    0%   {background:red; left:0px; top:0px;} 
    25%  {background:yellow; left:300px; top:0px;} 
    50%  {background:blue; left:200px; top:300px;} 
    75%  {background:green; left:0px; top:200px;} 
    100% {background:red; left:0px; top:0px;} 
} 
/* Standard syntax */ 
@keyframes myfirst { 
    0%   {background:red; left:0px; top:0px;} 
    25%  {background:yellow; left:300px; top:0px;} 
    50%  {background:blue; left:300px; top:200px;} 
    75%  {background:green; left:0px; top:200px;} 
    100% {background:red; left:0px; top:0px;} 
} 
</style> 
</head> 
<body> 
<p><b>Note:</b> The Internet Explorer 9 and its earlier versions don't support this example.</p> 
<div></div> 
</body> 
</html> 
வெளியீடு

CSS Gradient

Css கிரேடியண்ட் கொண்டு ஒரு எலெமெண்டின் நிறத்தை ஒரு நிறத்திலிருந்து மற்ற நிறத்திற்கு என்பது பற்றியதாகும்.

 Css கிரேடியண்டை ஏன் உபயோகப்படுத்த வேண்டும்?.
Ø  நம்மிடம் ஒரு இமேஜ் இல்லாத் பொழுது
Ø  டவுன்லோட் நேரம் மற்றும் பாண்ட்வித் உபயோகத்தை குறைப்பதற்கு.
Ø  இது ஷூம் செய்யப்பட்டாலும் அதன் தோற்றம் பாதிக்கப்படாது.
CSS கிரேடியண்டின் இரண்டு வகைகள்
  1. Linear gradients(லீனியர் கிரடியண்ட்)
  2. Radial gradients(ரேடியல் கிரேடியண்ட்)

1) CSS லீனியர் கிரேடியண்ட்

லீனியர் கிரேடியண்டில் நிறமானது மேல்/கீழ்/வலது/இடது/கோணல்   திசையில் மாற்றம் நடை பெறுகின்றது என்பதை குறிப்பிட பயன்படுகின்றது.

(i)                 CSS Linear Gradient: (மேலிருந்து கீழாக)

சான்று நிரல்-3

<!DOCTYPE html>  
<html>  
<head>  
<style>  
#grad1 {  
    height: 100px;  
    background: -webkit-linear-gradient(red, green); /* For Safari 5.1 to 6.0 */  
    background: -o-linear-gradient(red, green); /* For Opera 11.1 to 12.0 */  
    background: -moz-linear-gradient(red, green); /* For Firefox 3.6 to 15 */  
    background: linear-gradient(red, green); /* Standard syntax (must be last) */  
}  
</style>  
</head>  
<body>  
<h3>Linear Gradient - Top to Bottom</h3>  
<p>This linear gradient starts at the top. It starts red, transitioning to green:</p>  
<div id="grad1"></div>  
</body>  
</html>  
வெளியீடு:


(ii) CSS Linear Gradient: (இடமிருந்து வலமாக)

உம் கிரேடியண்டிடை பின் வரும் சான்று நிரலானது இடமிருந்து வலமாக மாறும் லீனியர் கிரேடியண்டை எவ்வாறு செயல்படுத்துவது என்பதைக் குறிப்பிட பயன்படுகின்றது..
சான்று நிரல்-4
<!DOCTYPE html>  
<html>  
<head>  
<style>  
#grad1 {  
    height: 100px;  
    background: -webkit-linear-gradient(left, red, green); /* For Safari 5.1 to 6.0 */  
    background: -o-linear-gradient(right, red, green); /* For Opera 11.1 to 12.0 */  
    background: -moz-linear-gradient(right, red, green); /* For Firefox 3.6 to 15 */  
    background: linear-gradient(to right, red , green); /* Standard syntax (must be last) */  
}  
</style>  
</head>  
<body>  
<h3>Linear Gradient - Left to Right</h3>  
<p>This linear gradient starts at the left. It starts red, transitioning to green:</p>  
<div id="grad1"></div>  
</body>  
</html>  
Output:

லீனியர் கிரேடியண்ட் ஆனது இடமாக சிவப்பு  நிறத்தில் தொடங்கி வலது புறத்தில் பச்சை நிறமாக நடை பெறுகின்றது.

(iii) CSS Linear Gradient: (Diagonal)

பின் வரும் நிரலில் ஒரு லீனியர் கிரேடியண்ட் ஆனது டயகனலாக எவ்வாறு மாறுகின்றது என்பது குறிப்பிடப்படுகின்றது..
சான்று நிரல்-5
<!DOCTYPE html>  
<html>  
<head>  
<style>  
#grad1 {  
    height: 100px;  
    background: -webkit-linear-gradient(left top, red , green); /* For Safari 5.1 to 6.0 */  
    background: -o-linear-gradient(bottom right, red, green); /* For Opera 11.1 to 12.0 */  
    background: -moz-linear-gradient(bottom right, red, green); /* For Firefox 3.6 to 15 */  
    background: linear-gradient(to bottom right, red , green); /* Standard syntax (must be last) */  
}  
</style>  
</head>  
<body>  
<h3>Linear Gradient - Diagonal</h3>  
<p>This linear gradient starts at top left. It starts red, transitioning to green:</p>  
<div id="grad1"></div>  
</body>  
வெளியீடு:



2) CSS ரேடியல் கிரடியண்ட்

இதற்கு குறைந்த பட்சம் இரண்டு நிறமாவது தேவைப்படுகின்றது. இதில் கிரேடியண்ட் ஆனது ரேடியலாக செயற்படுத்தப் படுகின்றது
  1. background: radial-gradient(shape size at position, start-color, ..., last-color);   

(i) CSS Radial Gradient: (Evenly Spaced Color Stops)

இது ஒரே விகிதத்தில் அளவிடப்பட்ட இரண்டு நிறங்களை கொண்டு ரேடியலாக எவ்வாறு செயற்படுத்துவது என்பதை குறிப்பிடப் பயன்படுகின்றது.
சான்று நிரல்-6
<!DOCTYPE html>  
<html>  
<head>  
<style>  
#grad1 {  
    height: 150px;  
    width: 200px;  
    background: -webkit-radial-gradient(blue, green, red); /* Safari 5.1 to 6.0 */  
    background: -o-radial-gradient(blue, green, red); /* For Opera 11.6 to 12.0 */  
    background: -moz-radial-gradient(blue, green, red); /* For Firefox 3.6 to 15 */  
    background: radial-gradient(blue, green, red); /* Standard syntax (must be last) */  
}  
</style>  
</head>  
<body>  
<h3>Radial Gradient - Evenly Spaced Color Stops</h3>  
<div id="grad1"></div>  
</body>  
</html>  
வெளியீடு:


 (ii) Radial Gradient: (Differently Spaced Color Stops) வித்தியாசமான விகிதத்தில் நடைபெறும் ரேடியல் கிரேடியண்ட்

சான்று நிரல்-7

<!DOCTYPE html>  
<html>  
<head>  
<style>  
#grad1 {  
    height: 150px;  
    width: 200px;  
    background: -webkit-radial-gradient(blue 5%, green 15%, red 60%); /* Safari 5.1 to 6.0 */  
    background: -o-radial-gradient(blue 5%, green 15%, red 60%); /* For Opera 11.6 to 12.0 */  
    background: -moz-radial-gradient(blue 5%, green 15%, red 60%); /* For Firefox 3.6 to 15 */  
    background: radial-gradient(blue 5%, green 15%, red 60%); /* Standard syntax (must be last) */  
}  
</style>  
</head>  
<body>  
<h3>Radial Gradient - Differently Spaced Color Stops</h3>  
<div id="grad1"></div>  
</body>  
</html>  
வெளியீடு:

நன்றி
-முத்து கார்த்திகேயன்,மதுரை.
ads Udanz

No comments:

Post a Comment