Monday, February 19, 2018

பைத்தான் ஒரு அறிமுகம்.


இது வெப் அப்ளிகேசன், GUI அப்ளிகேசன், சைன்ஸ்டிபிக் அப்ளிகேசன் முதலியவை உருவாக்கப் பயன்படுகின்றது.

இது ஒரு டயனமிக் மொழியாகும்.

ஹை லெவெல் மொழியாகும்.

இது ஒரு இன்டெர் பிரடெடு மொழியாகும்.

கற்றுக் கொள்வதற்கு எளிதானதாகும்.

இதன் டைனமிக் மற்றும் இன்டெர்பிரடெட் ஆகியவை ஒன்று சேரும் பொழுது இது ஸ்கிரிப்டிங்க் மற்றும் விரைவான பயன்பாட்டு உருவாக்கத்திற்கு பயன்படுகின்றது.

இதை வெப், எண்டர்ப்ரைஸ், 3D CAD போன்ற பெரும் பாடான சாஃப்ட்வேர் உருவாக்கத்திற்கு. பயன்படுகின்றது.

ஏன் பைத்தான்?

இது பல்துறை பயன்பாட்டிற்கு உதவுகின்றது. ப்ரோமிங்கில் குறைந்தளவே அறிவிருந்தாலும் இதை பயன்படுத்தலாம் அதாவது

 ப்ரோகிராமர் ஃப்ரெண்ட்லி.

பைத்தானின் அம்சங்கள்:

1.   உபயோகிப்பதற்கு எளிது.

2.   பல்வேறு ப்ளாட்ஃபார்மிலும் பயன்படுத்தலாம்.

3.   சி,சி++ போன்ற மொழிகளுடன் கலந்து உபயோகிக்கலாம்.

4.   இதன் ஸ்டாண்டர்ட் லைப்ரேரி ரியல் லைஃப் அப்ளிகேசன்  உருவாக்கத்திற்கு பயன்படுகின்றது.

5.   இது ஓபன் சோர்ஸ் மொழியாகும்.

6.   இது ஒரு ஆப்ஜெக்ட் ஒரியெண்டட் மொழியாகும்.

7.      பைத்தானை பயன்படுத்தி CPYTHON, JPYTHON போன்ற பல உருவாக்கத்திற்கு பயன்படுகின்றது.

கீழே  உள்ளது ஒரு சி++ மொழி நிரலாகும். இதில் X என்றொரு வேரியபிள் அறிவித்து அதன் இன்புட்டை பெறுவதற்கு எத்தனை வரிகள் தேவைப்படுகின்றது பாருங்கள்

#include<iostream>
using namespace std;
int main(){
      int x;
      cin >> x;
    return 0;
}
இதுவே ஜாவா மொழியென்றால் எத்தனை வரிகள் எழுத வேண்டும் என்று கீழே காண்பிக்கப்பட்டுள்ளது.

import java.util.Scanner;
class Test{
      Scanner input = new Scanner(System.in);
      public static void main(String args[]){
            int x;
            x = input.nextInt();
    }
}
இதுவே பைத்தான் எனில்

x = input()
ஃபைல் இம்போர்ட் கிடையாது. செமி கோலன் கிடையாது கர்லி பிரேசஸ் கிடையாது . ஓரே ஒரு ஒற்றை வரி.
ஒரு வேரியபிளில் இன்புட் வாங்குவதற்கு முன் அதை அறிவிக்க வேண்டிதில்லை. ஏனென்றால் நம் இன்புட் எந்த டைப்பில் உள்ளதோ அதே டைப்பாக வேரியபிளும் எடுத்துக் கொள்ளப்படும்.



Applications of Python
1.வெப் அப்ளிகேசன்:பைத்தானை பயன்படுத்தி வெப் அப்ளிகேசன் உருவாக்கலாம். Django, Flask, Pyramid போன்ற ஃப்ரேம் ஒர்க் பயன்படுத்தி வெப் அப்ளிகேசன்கள் உருவாக்கலாம்.
டெக்ஸ்டாப் அப்ளிகேசன்:
GUI அப்ளிகேசன்கள், டெக்ஸ்டாப் உபயோகத்திற்கலாம். TK என்பது ஒபன் சோர்ஸ் டெக்ஸ்டாப் அப்ளிகேசன் உருவாக்கப்பயன்படும் டூல்கிட் ஆகும்.
சைண்டிஃபிக் கம்ப்யூடின்ட்டிங் அப்ளிகேசன்:
பைத்தான் லைப்ரரிகளான SciPy, Numpy போன்ற வற்றை பயன்படுத்தி சைண்டிஃபிக் அப்ளிகேசன்கள் உருவாக்கலாம்.
AI மற்றும் ML(Artificial Intelligence and Machine learning):
செயற்கை நுண்ணறிவு மற்றும் மெசின் லியர்னிங்க் போன்றவற்றிற்கு பைத்தானை பயன்படுத்தலாம்
இமேஜ் ப்ராசசிங்க்:
ஒரு இமேஜை பிக்சல் பை பிக்சல் ஆக ட்ராவர்ஸ் செய்து அதை ஆய்வு செய்யக் கூடிய திறமை பைத்தானிற்கு உள்ளது.
பைத்தானை இன்ஸ்டால் செய்வது எப்படி?
  1. python.org/download செல்லவும்.
  2. அதில் லேட்டஸ்ட் ரீலிஸ் செலெக்ட் செய்து அதை கிளிக் செய்து டவுன் லோட் செய்யவும்.
  3. இன்ஸ்டாலரை ஓபன் செய்து பின் வரும் ஸ்டெப்களை ஃபாலோ செய்யவும்.
  4.  
மேலே உள்ளவாறு ஆப்சன் செலெக்ட் செய்த பிறகு நெக்ஸ்ட் பட்டனை செலெக்ட் செய்யவும்.
  1. இந்த படிகளை செய்து முடித்த பிறகு பைத்தான் இன்ஸ்டால் ஆகும்.
  2.  
  3. இன்ஸ்டாலேசன் வெற்றிகரமாக செய்த பிறகு கமாண்ட் பிராம்ப்டில் செக் செய்ய python –v என்று டைப் செய்யவும்.
  4. அது பைத்தான் வெர்சனை காண்பித்தால்  வெற்றிகரமாக இன்ஸ்டால் ஆகி விட்டது என் அர்த்தம்.


Set Environment Variable
விண்டோஸ் பயனாளர்கள் என்விரான்மெண்ட் வேரியபிள் செட் செய்ய வேண்டும்.
மை கம்ப்யூட்டரை வலது கிளிக் செய்யவும்.
அதில் ப்ராப்பர்ட்டிஸ் என்பதை செலெக்ட் செய்யவும். பின் வரும் விண்டோவில் advanced system settings என்பதை செலெக்ட் செய்யவும்.
பின்வரும் விண்டோவில் Environment variable என்கின்ற பட்டனை க்ளிக் செய்யவும். புதிய யூசர் உருவாக்கத்திற்கு new என்பதை க்ளிக் செய்யவும்.
பின் path என்பதை வேரியபிளாகவும் அதன் வேல்யூவாக பைத்தானின் இன்ஸ்டால் லொகேசனை செலெக்ட் செய்யவும்.
Setting python path variable
பிறகு ok கிளிக் செய்யவும்.




நன்றி
முத்து கார்த்திகேயன்,மதுரை.
ads Udanz

1 comment:

  1. my system window 7 suggest me python which is suitable for window 7
    thank you

    ReplyDelete