Thursday, February 15, 2018

Wpf –சில குறிப்புகள்.





விண்டோஸ் பிரசண்டேசன் ஃபௌண்டேசன்(windows presentation foundation) என்பது டாட் நெட் ஃப்ரேம் ஒர்க்கின் ப்ரசண்டேசன் சப்ஸிஸ்ட்டம் (யூசர் இண்டர்ஃபேஸ்) ஆகும். இது விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்தில் யூசர் இண்டர்ஃபேஸ் உருவாக்கப் பயன்படுகின்றது. இந்த இண்டர்ஃபேஸ்கள் விண்டோஸ் கிளையண்ட் அப்ளிகேசன் என்றோ அல்லது விண்டோஸ் அப்ளிகேசன் என்றோ பயன்படுகின்றது.
நீங்கள் டாட் நெட்டில் ப்ரோக்ராம் எழுதியிருந்தால் விண்டோஸ் ஃபார்ம் என்றோ அல்லது Asp.net என்றாலோ என்ன என்று அறிந்திருப்பீர்கள். விண்டோஸ் ஃபார்ம்ஸ்  என்பது விண்டோஸ் கிளையண்ட் அப்ளிகேசன் உருவாக்கவும் Asp.net என்பது வெப் அப்ளிகேசன் உருவாக்கவோ பயன்படுகின்றது.
Wpf என்பது டாட் நெட் ஃப்ரேம் வொர்க் 3.0 உடன் அறிமுகப் படுத்தப் பட்ட விண்டோஸ் அப்ளிகேசன் அல்லது விண்டோஸ் ப்ரவுசர் பேஸ்டு அப்ளிகசேன் ஒன்றோ உருவாக்கப் பயன்பட்டது. ஆனால் அதற்கடுத்து வந்த டாட்நெட் ஃப்ரேம் வொர்க்கில்  விண்டோஸ் ப்ரவுசர் பேஸ்டு அப்ளிகேன் ட்ராப் செய்யப்பட்டது.
Wpf என்பது என்ன?
Wpf என்பது யூசர் இண்டர்பேஸ்கள்,டாக்குமெண்டுகள், இமேஜ்கள், மூவீஸ் போன்றவற்றை உருவாக்கவோ , டிஸ்ப்ளே செய்யவோ, மேனிபுலேட் செய்யவோ பயன்படும் எஞ்சீன் ஆகும். இது முக்கியமாக விண்டோஸ் 7 மற்றும் அதற்கு அடுத்த வந்த விண்டோஸ் ஆபரட்டிங் சிஸ்டத்தினை அடிப்படையாக கொன்டது. இது லைப்ரரி கிளாஸ்களின் தொகுப்பாகும் . இதன் லைப்ரரி கிளாஸ்கள் விண்டோஸ் கிளையண்ட் அப்ளிகேசன்கள் உருவாக்க, இயக்க, மற்றும் நிர்வாகிக்க பயன்படுகின்றது.
XAML என்பது என்ன?
இது மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய டெஸ்கிரிப்டிவ் ப்ரோக்ராமிங் மொழியாகும். இது னெக்ஸ்ட் ஜெனரேசன் மேனேஜ்டு அப்ளிகேசன்களின் யூசர் இண்டர்பேஸ்களை எழுதப் பயன்படுகின்றது.

XAML மற்றும் WPF இவற்றிற்கு இடையே என்ன தொடர்பு:
XAML –ன் உதவி கொண்டு நாம் WPF-ல் கண்ட்ரோல்கள் பற்றி விவரிக்க உதவும் கோட் ஆக பயன்படுகின்றது. இதை சி ஷார்ப், விபி  டாட்நெட்  மற்றும் பிற டாட்நெட் மொழிகளில் எழுதலாம்.
சான்று நிரல்-1:
இப்பொழுது WPF துனை கொண்டு ஒரு சிறிய அப்ளிகேசன் உருவாக்கலாம்.
இந்த நிரலில் ஒரு பட்டனை க்ளிக் செய்யும் பொழுது குறிப்பிட்ட நிறத்தில்
உள்ள லேபிள் எழுதப் பயன்படுகின்றது.

முதலில் விசுவல் ஸ்டுடியோவை திறந்து அதில் FILE->NEW -> PROJECT கிளிக் செய்து அதில் விசுவல் சி ஷார்ப் டெம்ப்ளேட் செலெக்ட் செய்து பிறகு WPF APP(.NET FRAMEWORK) என்பதை கிளிக் செய்யவும். பிறகு ஃபைலிற்கு பெயர் கொடுத்து சேவிங் லொகேசனை தேர்ந்தெடுக்கவும். பிறகு OK கொடுக்கவும்.

அதற்கடுத்து டூல்பாக்ஸில் Text block, label மற்றும் பட்டன் ஆகிவற்றை தேர்ந்தெடுத்து அதை விண்டோவில் அவற்றை டிராக் செய்யவும்.அல்ல்து டிசைன் விண்டோவில் கீழே உள்ளவாறு கோடிங் எழுதி அதை டிசைன் செய்யவும்.
<Window x:Class="Coloured_label_text.MainWindow" xmlns="http://schemas.microsoft.com/winfx/2006/xaml/presentation" xmlns:x="http://schemas.microsoft.com/winfx/2006/xaml" xmlns:d="http://schemas.microsoft.com/expression/blend/2008" xmlns:mc="http://schemas.openxmlformats.org/markup-compatibility/2006" xmlns:local="clr-namespace:Coloured_label_text" mc:Ignorable="d" Title="MainWindow" Height="350" Width="525">  
    <Grid>  
        <TextBlock x:Name="tbname" HorizontalAlignment="Left" Height="22" Margin="175,25,0,0" TextWrapping="Wrap" Text="Coloured Label Text" VerticalAlignment="Top" Width="157" FontSize="14" />  
        <Button x:Name="btnred" Content="Red" HorizontalAlignment="Left" Height="20" Margin="63,71,0,0" VerticalAlignment="Top" Width="79" Click="btnred_Click" />  
        <Button x:Name="btnblue" Content="Blue" HorizontalAlignment="Left" Height="20" Margin="164,71,0,0" VerticalAlignment="Top" Width="79" Click="btnblue_Click" />  
        <Button x:Name="btngreen" Content="Green" HorizontalAlignment="Left" Height="20" Margin="262,71,0,0" VerticalAlignment="Top" Width="79" Click="btngreen_Click" />  
        <Button x:Name="btnviolet" Content="Violet" HorizontalAlignment="Left" Height="20" Margin="367,71,0,0" VerticalAlignment="Top" Width="79" Click="btnviolet_Click" />  
        <Label x:Name="lblred" Content="" HorizontalAlignment="Left" Height="25" Margin="119,121,0,0" VerticalAlignment="Top" Width="111" Foreground="#FFFF0606" />  
        <Label x:Name="lblblue" Content="" HorizontalAlignment="Left" Height="25" Margin="262,121,0,0" VerticalAlignment="Top" Width="111" Foreground="#FF0426FF" />  
        <Label x:Name="lblgreen" Content="" HorizontalAlignment="Left" Height="25" Margin="119,166,0,0" VerticalAlignment="Top" Width="111" Foreground="#FF20FF0A" />  
        <Label x:Name="lblviolet" Content="" HorizontalAlignment="Left" Height="25" Margin="262,166,0,0" VerticalAlignment="Top" Width="111" Foreground="#FF903BD6" /> </Grid>  
</Window>  
இதில் தொடக்க நிலைமையில் லேபிள் காட்சிக்கு உட்படுத்தப்படாமல் உள்ளது. ஒரு குறிப்பிட்ட டெக்ஸ்ட் கொண்ட பட்டனை கிளிக் செய்யும் பொழுது அந்த நிறத்தில் உள்ள லேபிள்கள் காட்சிக்குத்தப்படுகின்றது.

using System;
using System.Collections.Generic;
using System.Linq;
using System.Text;
using System.Threading.Tasks;
using System.Windows;
using System.Windows.Controls;
using System.Windows.Data;
using System.Windows.Documents;
using System.Windows.Input;
using System.Windows.Media;
using System.Windows.Media.Imaging;
using System.Windows.Navigation;
using System.Windows.Shapes;

namespace Coloured_label_text
{
    /// <summary>
    /// Interaction logic for MainWindow.xaml
    /// </summary>
    public partial class MainWindow : Window
    {
        public MainWindow()
        {
            InitializeComponent();
        }

        private void btnred_Click(object sender, RoutedEventArgs e)
        {
            lblred.Content = "You clicked Red";
            lblblue.Content = String.Empty;
            lblgreen.Content = String.Empty;
            lblviolet.Content = String.Empty;
        }

        private void btnblue_Click(object sender, RoutedEventArgs e)
        {
            lblred.Content = String.Empty;
            lblblue.Content = "You clicked Blue";
            lblgreen.Content = String.Empty;
            lblviolet.Content = String.Empty;
        }

        private void btngreen_Click(object sender, RoutedEventArgs e)
        {
            lblred.Content = String.Empty; ;
            lblblue.Content = String.Empty;
            lblgreen.Content = "You clicked Green";
            lblviolet.Content = String.Empty;
        }

        private void btnviolet_Click(object sender, RoutedEventArgs e)
        {
            lblred.Content = String.Empty; ;
            lblblue.Content = String.Empty;
            lblgreen.Content = String.Empty;
            lblviolet.Content = "You clicked Violet";
        }
    }
}
இப்பொழுது நிரலை இயக்கவும்.




இப்பொழுது மேலே உள்ளவாறு வெளியீடு இருக்கும்.
·         இப்பொழுது குறிப்பிட்ட டெக்ஸ் கொண்ட பட்டனை க்ளிக் செய்யவும். அதன் வெளியீடூ பின்வருமாறு இருக்கும்.




நன்றி
முத்துகார்த்திகேயன்,மதுரை
ads Udanz

No comments:

Post a Comment