Monday, January 25, 2021

PHP குக்கி

 


PHP குக்கி என்பது பிரவுசரில் சேமிக்கப்படும் சிறிய தகவல் ஆகும். இது பயனாளரை அறிந்து கொள்வதற்காக பயன்படுகின்றது.

குக்கி என்பது சர்வரில் உருவாக்கப்பட்டு பிரவுசரில் சேமிக்கப்படுகின்றது. அடுத்த தடவை பிரவுசரில் இருந்து கோரிக்கை அனுப்பும் பொழுது குக்கியும் சேர்ந்து அனுப்பப்படுகின்றது. எனவே அந்த குக்கியை வைத்து சர்வர் கோரிக்கை அனுப்புவர் பற்றி தெரிந்து கொள்கின்றது.


சுருக்கமாக குக்கி ஆனது சர்வரில் உருவாக்கப்பட்டு பிரவுசரில் சேவ் செய்யப்பட்டு அடுத்த தடவை கோரிக்கை அனுப்பும் பொழுது பிரவுசரில் இருந்து சர்வருக்கு அனுப்பப்படுகின்றது.

Php குக்கி ஆனது <html> டேக்கிற்கு முன்னாலேயே பயன்படுத்தப்படவேண்டும்.

PHP setcookie() ஃபங்க்சன்

PHP setcookie()  ஃபங்க்சன் ஆனது http response உடன் குக்கியை உருவாக்கப் பயன்படுகின்றது. ஒரு தடவை குக்கியை உருவாக்கிய பின் அதை $_COOKIE என்ற குலோபள் வேரியபிள் கொண்டு அனுகலாம்.

Syntax

  1. bool setcookie ( string $name [, string $value [, int $expire = 0 [, string $path   
  2. [, string $domain [, bool $secure = false [, bool $httponly = false ]]]]]] )  

சான்று.

  1. setcookie("CookieName""CookieValue");/* defining name and value only*/  
  2. setcookie("CookieName""CookieValue", time()+1*60*60);//using expiry in 1 hour(1*60*60 seconds or 3600 seconds)  
  3. setcookie("CookieName""CookieValue", time()+1*60*60, "/mypath/""mydomain.com", 1);

 

PHP $_COOKIE

 

$_COOKIE  எனப்படும் குளோபள் வேரியபிள் குக்கியை ஆக்சஸ் செய்யப்பயன் படுகின்றது.

சான்று

  1. $value=$_COOKIE["CookieName"];//returns cookie value  

PHP Cookie சான்று நிரல்

File: cookie1.php

<?php  

setcookie("user""KARTHIKEYAN");  

?>  

<html>  

<body>  

<?php  

if(!isset($_COOKIE["user"])) {  

    echo "Sorry, cookie is not found!";  

else {  

    echo "<br/>Cookie Value: " . $_COOKIE["user"];  

}  

?>  

</body>  

</html>  

Output:

Sorry, cookie is not found!

முதலில் குக்கி செட் ஆகாது ஆனால் பக்கதை ரிஃப்ரெஸ் செய்யும் பொழுது குக்கி செட் ஆகி விடும்.

Output:

Cookie Value: KARTHIKEYAN

PHP Delete Cookie

 Expiration தேதியை கடந்த காலத்தில் செட் செய்யும் பொழுது குக்கி டெலீட் ஆகின்றது

File: cookie1.php

  1. <?php  
  2. setcookie ("CookieName""", time() - 3600);// set the expiration date to one hour ago  
  3. ?>  

நன்றி

முத்து கார்த்திகேயன்,மதுரை.

contact: 91 96293 29142

ads Udanz

No comments:

Post a Comment