Monday, January 25, 2021

PHP குக்கி

 


PHP குக்கி என்பது பிரவுசரில் சேமிக்கப்படும் சிறிய தகவல் ஆகும். இது பயனாளரை அறிந்து கொள்வதற்காக பயன்படுகின்றது.

குக்கி என்பது சர்வரில் உருவாக்கப்பட்டு பிரவுசரில் சேமிக்கப்படுகின்றது. அடுத்த தடவை பிரவுசரில் இருந்து கோரிக்கை அனுப்பும் பொழுது குக்கியும் சேர்ந்து அனுப்பப்படுகின்றது. எனவே அந்த குக்கியை வைத்து சர்வர் கோரிக்கை அனுப்புவர் பற்றி தெரிந்து கொள்கின்றது.


சுருக்கமாக குக்கி ஆனது சர்வரில் உருவாக்கப்பட்டு பிரவுசரில் சேவ் செய்யப்பட்டு அடுத்த தடவை கோரிக்கை அனுப்பும் பொழுது பிரவுசரில் இருந்து சர்வருக்கு அனுப்பப்படுகின்றது.

Php குக்கி ஆனது <html> டேக்கிற்கு முன்னாலேயே பயன்படுத்தப்படவேண்டும்.

PHP setcookie() ஃபங்க்சன்

PHP setcookie()  ஃபங்க்சன் ஆனது http response உடன் குக்கியை உருவாக்கப் பயன்படுகின்றது. ஒரு தடவை குக்கியை உருவாக்கிய பின் அதை $_COOKIE என்ற குலோபள் வேரியபிள் கொண்டு அனுகலாம்.

Syntax

  1. bool setcookie ( string $name [, string $value [, int $expire = 0 [, string $path   
  2. [, string $domain [, bool $secure = false [, bool $httponly = false ]]]]]] )  

சான்று.

  1. setcookie("CookieName""CookieValue");/* defining name and value only*/  
  2. setcookie("CookieName""CookieValue", time()+1*60*60);//using expiry in 1 hour(1*60*60 seconds or 3600 seconds)  
  3. setcookie("CookieName""CookieValue", time()+1*60*60, "/mypath/""mydomain.com", 1);

 

PHP $_COOKIE

 

$_COOKIE  எனப்படும் குளோபள் வேரியபிள் குக்கியை ஆக்சஸ் செய்யப்பயன் படுகின்றது.

சான்று

  1. $value=$_COOKIE["CookieName"];//returns cookie value  

PHP Cookie சான்று நிரல்

File: cookie1.php

<?php  

setcookie("user""KARTHIKEYAN");  

?>  

<html>  

<body>  

<?php  

if(!isset($_COOKIE["user"])) {  

    echo "Sorry, cookie is not found!";  

else {  

    echo "<br/>Cookie Value: " . $_COOKIE["user"];  

}  

?>  

</body>  

</html>  

Output:

Sorry, cookie is not found!

முதலில் குக்கி செட் ஆகாது ஆனால் பக்கதை ரிஃப்ரெஸ் செய்யும் பொழுது குக்கி செட் ஆகி விடும்.

Output:

Cookie Value: KARTHIKEYAN

PHP Delete Cookie

 Expiration தேதியை கடந்த காலத்தில் செட் செய்யும் பொழுது குக்கி டெலீட் ஆகின்றது

File: cookie1.php

  1. <?php  
  2. setcookie ("CookieName""", time() - 3600);// set the expiration date to one hour ago  
  3. ?>  

நன்றி

முத்து கார்த்திகேயன்,மதுரை.

contact: 91 96293 29142

ads Udanz

PHP செசன்(session)

 

 


PHP  செசன் என்பது ஒரு இணையப்பக்கத்திலிருந்து மற்றொரு இணையப்பக்கத்திற்கு தற்காலிகமாக தகவலை சேமிக்க உதவுகின்றது. அதாவது பயனர் அந்த இணையப்பக்கதிலிருந்து வெளியேரும் வரை தகவலை சேமிக்கின்றது.

இது பெரும் பாலும் இ-காமர்ஸ் இணைய தளங்களின் பொருளின் பெயர், விலை போன்ற தகவல்களை சேமிக்கப் பயன்படுகின்றது.

 PHP செசன் ஆனது ஒவ்வொரு பயனருக்கும்  தனித்தனி USER ID யை தருகின்றது.


PHP session_start() function

PHP session_start()  ஃபங்க்சன் ஆனது ஒரு செசனைத் தொடக்குவிக்கின்றது. ஏற்கனவே செசன் தொடக்கப்படிருந்தால் அதைத் தொடர்கின்றது. இல்லையெனில் புதிதாக தொடக்குவிக்கின்றது| Syntax

  1. bool session_start ( void )  

சான்று

  1. session_start();  

PHP $_SESSION

PHP $_SESSION ஆனது செசன் வேரியபிள்களின் அர்ரே ஆகும். இது செசன் வேரியபிள்களை மதிப்பிருத்தவும் பெறவும் பயன்படுகின்றது.

சான்று மதிப்பிருத்தல்

  1. $_SESSION["user"] = "Sachin";  

சான்று பெறுதல்

  1. echo $_SESSION["user"];  

PHP Session சான்று

File: session1.php

<?php  

session_start();  

?>  

<html>  

<body>  

<?php  

$_SESSION["user"] = "Sachin";  

echo "Session information are set successfully.<br/>";  

?>  

<a href="session2.php">Visit next page</a>  

</body>  

</html>  

File: session2.php

<?php  

session_start();  

?>  

<html>  

<body>  

<?php  

echo "User is: ".$_SESSION["user"];  

?>  

</body>  

</html>  

PHP Session Counter சான்று

File: sessioncounter.php

  1. <?php  
  2.    session_start();  
  3.   
  4.    if (!isset($_SESSION['counter'])) {  
  5.       $_SESSION['counter'] = 1;  
  6.    } else {  
  7.       $_SESSION['counter']++;  
  8.    }  
  9.    echo ("Page Views: ".$_SESSION['counter']);  
  10. ?>  

PHP செசனை அழித்தல்

PHP session_destroy() ஃபங்க்சன் ஆனது எல்லா செசன் வேரியபிள்களையும் அழிக்க பயன்படுகின்றது.

File: session3.php

<?php  

session_start();  

session_destroy();  

?>  

நன்றி

முத்து கார்த்திகேயன்,மதுரை.

 

ads Udanz

Sunday, January 24, 2021

html step by step part 10 tables

My new video about html .

Table in html.

Thank you

Muthu karthikeyan,

Madurai

96293 29142

ads Udanz

c++ part5 while loop

 

 

This video explains about while loop in c++.

Thank you

Muthukarthikeyan,Madurai.

96293 29142

ads Udanz

Saturday, January 23, 2021

C# இண்டர்ஃபேஸ்

 



 சி#-ல் இன்டெர்ஃபேஸ் என்பது கிளாஸின் blue print ஆகும். இதுவும் அப்ஸ்ட்ராக்ட் கிளாஸ் போன்றது தான். ஆனால் இதில் வரும் எல்லா  மெத்தடுமே அப்ஸ்ட்ராக்ட் மெத்தட் ஆகும்..

மெத்தட் இம்ப்லிமென்டேசன் வர முடியாது.

இன்டெர்ஃபேஸிற்க்கு ஆப்ஜெக்ட் உருவாக்க முடியாது.

இது மல்டிபிள் இன்ஹெரிடென்ஸிற்க்கு பயன்படுத்த முடிகின்றது

அதாவது சி ஷார்ப்பில் ஒன்றிற்க்கு மேற்பட்ட கிளாஸை இன்ஹெரிட் செய்ய இயலாது. ஆனால் ஒரு கிளாஸ் எத்தனை இண்டெர்ஃபேசை வேண்டுமானாலும் இம்ப்ளிமெண்ட் செய்யலாம்

ஒரு கிளாஸ் ஆனது ஒரு இன்டெர்ஃபேசை இம்ப்ளிமென்ட் செய்யும் உள்ள அதில் உள்ள எல்லா அப்ஸ்ட்ராக்ட் மெத்தடுகளுக்கும் இம்ப்ளிமென்டேசனும் அதில் வர வேண்டும்.

 

சி ஷார்ப் சான்று நிரல்.

கீழே உள்ள சான்றுன் நிரலில் Drawable என்றொரு இன்டெர்ஃபேஸ் உள்ளது அதில் draw() என்ற மெத்தட் அறிவிப்பு உள்ளது.அந்த இன்டெர்ஃபேசை rectangle, circle என இரண்டு கிளாஸ்கள் தனித்தனியே இன்ஹெரிட் செய்கின்றன. அந்த இரண்டு கிளாசிலும் draw என்ற மெத்தடின் இம்ப்ளிமெண்டேசன் உள்ளது.

.

using System;  

public interface Drawable  

{  

    void draw();  

}  

public class Rectangle : Drawable  

{  

    public void draw()  

    {  

        Console.WriteLine("drawing rectangle...");  

    }  

}  

public class Circle : Drawable  

{  

    public void draw()  

    {  

        Console.WriteLine("drawing circle...");  

    }  

}  

public class TestInterface  

{  

    public static void Main()  

    {  

        Drawable d;  

        d = new Rectangle();  

        d.draw();  

        d = new Circle();  

        d.draw();  

    }  

}  

Output:

drawing ractangle...
drawing circle...
இன்டெர்ஃபேசில் உள்ள மெத்தட்கள் டிஃபால்ட் ஆகவே அப்ஸ்ட்ராக்ட்
 மற்றும்  பப்ளிக் ஆகும். என்வே அந்த மெத்தடில் public, abstract என்ற 
கீவேர்டுகளை பயன்படுத்தினால் பிழை சுட்டப்படும்.

using System;  

public interface Drawable  

{  

    public abstract void draw();//Compile Time Error  

}  

முத்து கார்த்திகேயன்,மதுரை.

 

ads Udanz