Friday, January 8, 2021

சி ஷார்ப் வேல்யூ டைப், ரெஃபெரன்ஸ் டைப் வித்தியாசங்கள்.

 



 


 

பொதுவாக சி ஷார்ப்பில் டேட்டா டைப்கள் இரு வகையாகும்.

அவை

1.   வேல்யூ டைப்

2.   ரெஃபெரன்ஸ் டைப்

வேல்யூ டைப் டேட்டாக்கள் stack மெமரியிலும் ரெஃபரன்ஸ் டைப் டேட்டாக்கள் heap மெமரியிலும் ஸ்டோர் செய்யப்படுகின்றது.

வேல்யூ டைப்பில் டேட்டாவானது டைரக்ட் ஆக மெமரியில் ஸ்டோர் செய்யப்படுகின்றது.

ரெஃப்ரன்ஸ் டைப்பில் டேட்டாவானது ஒரு லொக்கேசனில் பதியப்படுகின்றது.மற்றொரு லொக்கேசனில் இருந்து அந்த டேட்டா சுட்டிப்பார்க்கப்படுகின்றது. அதாவது டேட்டா ஒரு லொக்கேகேசனிலும்

அதன் முகவரி ஒரு லொக்கேசனிலும் ஸ்டோர் செய்யப்படுகின்றது.

வேல்யூ டைப்பில் ஒரு வேரியபிளின் மதிப்பை மற்றொரு வேரியபிளில் காப்பி செய்யும் பொழுது அவை தனிதனி வேரியபிளாக எடுத்துக்கொள்ளப்படுகின்றது. ஒன்றில் செய்யும் மாற்றங்கள் மற்றதில் பிரதிபலிக்காது.

சான்று

int x,y;

x=10;

y=x;

இப்பொழுது   x மற்றும்  y ஆகிய இரண்டிலும்  10 என்ற மதிப்பு இருக்கும்.

X=20;

இப்பொழுது x-ல் 20ம் y-யில் 10 ம் இருக்கும்.

x,y ஆகிய இரண்டும் வெவ்வேறாக எடுத்துக்கொள்ளப்படுவதால் ஒன்றில் செய்யும் மாற்றங்கள் மற்றதில் பிரதிபலிக்காது.

.



 

ரெஃப்ரன்ஸ் டைப் வேரியபிள்கள் வேறு மாதிரியாக செயல் படுகின்றது.

ஒரு வேரியபிளின் மதிப்பை மற்றொரு வேரியபிளில் மதிப்பிருத்தும் பொழுது இரண்டும் ஒரே மெமரி லொகேசனை பாயிண்ட் செய்கின்றன.

எனவே ஒரு வேரியபிளின் மதிப்பை மாற்றும் பொழுது அது இன்னொரு வேரியபிளின் மதிப்பையும் மாற்றுகின்றது.

நன்றி

முத்து கார்த்திகேயன் ,மதுரை

To learn following online classes in affordable price contact

91 96293 29142 

email: muthu.vaelai@gmail.com

ads Udanz

No comments:

Post a Comment