ஃபங்சன் என்றால் என்ன?
பொதுவாக ஃபங்சன்ஸ் என்பது ஒரு தடவை ஒரு பெயர் இட்டு எழுதி விட்டு திரும்ப எழுதாமலே எத்தனை தடவை வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளலாம்.
ஃபங்சன்ஸ் நண்மைகள்.
1. நிரல் வரிகளின் எண்ணிக்கை குறைகின்றது
2. மெமரியின் அளவு குறைகின்றது
3. நிரலாளரின் நேரம் குறிகின்றது.
4. நிரலுக்கு மாடுலாரிட்டியை தருகின்றது.
5. பிழைகளை கையாளுதல் எளிதாகின்றது.
ஜாவாஸ்கிரிப்டில் ஃபங்க்சன்கள் எவ்வாறு கையாளப்ப்படுகின்றது?
ஜாவாஸ்கிரிப்டில் ஃபங்க்சன்கள் function என்ற கீவேர்டுடன் ஆரம்பிக்கின்றது. அதன் தொடர்ச்சியாக அந்த ஃபங்சனின் பெயர் வருகின்றது.அதற்கடுத்து கர்லி பிராக்கட்டுக்குள்ளே அந்த ஃபங்சனின் பாடி வருகின்றது.பாடியில் உள்ள வரிகள் அந்த ஃபங்சன் அழைக்கப்படும் பொழுது இயக்கப்படுகின்றது.
சான்று நிரல்-1
functions.js
function sayHello()
{
console.log("hello Muthu karthikeyan");
}
sayHello();
sayHello();
அதன் வெளியீடு.
C:\Users\Muthu\Desktop\js>node functions.js
hello Muthu karthikeyan
hello Muthu karthikeyan
ஃபங்சனுக்கு பாராமீட்டர் செலுத்துவது எப்படி?
சான்று நிரல்-2
functions.js
function sayHello(name)
{
console.log("hello ",name);
}
sayHello();
sayHello();
மேலே உள்ள நிரலில் name என்ற பாராமீட்டரை ஃபங்சன் ஏற்கின்றது.
வெளியீடு:
C:\Users\Muthu\Desktop\js>node functions.js
hello undefined
hello undefined
undefined என வர காரணம்.ஃபங்சனை அழைக்கும் பொழுது name என்ற பாராமீட்டரின் மதிப்பு செலுத்த்ப்படவில்லை.
சான்று நிரல்-3
function sayHello(name)
{
console.log("hello ",name);
}
sayHello("Muthu karthikeyan");
sayHello("Mukesh");
வெளியீடு:
C:\Users\Muthu\Desktop\js>node functions.js
hello Muthu karthikeyan
hello Mukesh
நிரல் விளக்கம்.
மேலே உள்ள நிரலில் ஃபங்சனில் நிரல் அழைக்கப்படும் பொழுது name கடத்தப்படுகின்றது.
sayHello("Muthu karthikeyan");
sayHello("Mukesh");
எனவே அதற்கேற்றார் போல் அதன் வெளியீடு அமைகின்றது.
சான்று நிரல் -4
function sayHello(name)
{
console.log(`hello ,${name} how are you?`);
}
sayHello("Muthu karthikeyan");
sayHello("Mukesh");
வெளியீடு:
C:\Users\Muthu\Desktop\js>node functions.js
hello ,Muthu karthikeyan how are you?
hello ,Mukesh how are you?
நிரல் விளக்கம்.
மேலே உள்ள நிரலில் console.log()-ல் name என்ற வேரியபிள் ஆனது எவ்வாறு கையாளப்படுகின்றது என்று பாருங்கள்.
${name} என்று குறிப்பிடப்படுகின்றது .இது name என்ற வேரியபிளுக்கு நாம் செலுத்தும் மதிப்பை வெளியிடுகின்றது.மேலும் அந்த வரி முழுவதும் பேக்டிக் கேரக்டரால்(`) சூழப்பட்டுள்ளது. இந்தன் கீ ஆனது கீபோர்டில் esc கீயிக்கு கீழே உள்ளது. இவ்வாறு கையாளுவது ஜாவாஸ்கிரிப்டில் நவீன முறையாகும்.
சான்று நிரல்-5
function namasthey()
{
return "hello in India";
}
var greetings=namasthey();
console.log(greetings);
console.log(namasthey());
வெளியீடு:
C:\Users\Muthu\Desktop\js>node functions.js
hello in India
hello in India
மேலே உள்ள நிரலில் namasthey என்ற ஃபங்சன் ஆனது எதையும் பிரிண்ட் செய்யவில்லை. ஆனால் “hello in India” என்பது ரிடர்ன் செய்யப்படுகின்றது. இவ்வாறு ரிடர்ன் செய்யப்படும் மதிப்பானது ஃபங்சன் அழைக்கப்படும் வரியில் இடது புறம் உள்ள வேரியபிளில் மதிப்பிருத்தப்படுகின்றது.பிறகு பிரிண்ட் செய்யப்படுகின்றது.
var greetings=namasthey();
console.log(greetings);
அல்லது நேரடியாக பிரிண்ட் செய்யும் ஃபங்க்சனிலேயே நேரடியாக ஃபங்சனை அழைக்கலாம்.
console.log(namasthey());
-தொடரும்.
No comments:
Post a Comment