Thursday, January 21, 2021

ஆங்குலர் ஒரு அறிமுகம்.

 

 



இந்தக்  கட்டுரையில் கிளையண்ட் சைட் ஃப்ரேம் வொர்க் ஆன ஆங்குலர் பற்றிய மேலோட்டமான பார்வை பார்க்க இருக்கின்றோம்.

இந்தக் கட்டுரையில் ஜாவாஸ்கிரிப்ட்  ஃபரேம் வொர்க் ஆன ஆங்குலர் மற்றும் ஆங்குலர் ஜெஎஸ் –ல்  இருந்து ஆங்குலர் எவ்வாறு மாறுபடுகின்றது என்பது குறித்தும் காண இருக்கின்றோம்.

ஜாவா ஸ்கிரிப்ட் ஃப்ரேம் வொர்க் என்பது தற்பொழுது கணினி தொழில் நுட்ப உலகில் பரபரப்பாக பயன்படுத்தப்படும் வார்த்தையாகும்.

நமக்கு ஏன் ஃப்ரேம் வொர்க் தேவைப்படுகின்றது?

ஜாவாஸ்கிரிப்ட் ஃப்ரேம் வொர்க் ஆனது வெப் அப்ளிகேசன் உருவாக்குவதற்கு சரியான டூல்களையும் ,அதை எவ்வாறு வடிவமைக்க வேண்டும் மற்றும் நிரல் வரிகளை எவ்வாறு ஆர்கணைஸ் செய்வது போன்றவற்றிறையும் நமக்கு அளிக்கின்றது.

ஜாவாஸ்கிரிப்ட் ஃப்ரேம் வொர்க் என்பது சமீப காலமாக தான் பயன்பாட்டில் உள்ளது. அதற்கு முன்னால்  மோசமாக வடிவமைக்கப்பட்ட சாதாரண ஜாவாஸ்கிரிப்ட் (ஜெகொரியால் திறன் வழங்கப்பட்ட நிரலையே பயன்படுத்தி வந்தோம்.

ஆங்குலர் அறி முகம் ஆங்குலர் ஜெ எஸ் என்பது என்ன?

ஆங்குலர் ஜெ எஸ் என்பது கூகிள் கார்ப்பரேசனால் 2012-ல் வெளியிடப்பட்டது. இது மாடல்-வியூ-கன்ட்ரோலர் கருத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது.

 ஜாவாஸ்கிரிப்டால் எழுதப்பட்ட இந்த ஃப்ரேம் வொர்க் ஆனது அப்ளிகேசன் லாஜிக்கை டாம் மேனிபுலேசனில் இருந்து பிரிக்கவும்,

பக்க அப்டேட்களை டைனமிக் ஆக அமைக்கவும் பயன்படுத்தபட்டது.

எனினும் ஆங்குலர் ஜெ எஸ் கொண்டு இணையப்பக்கத்தின் ஒரு பகுதியை மட்டுமே கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது.

மேலும் ஒரு சுவராஸ்மான கருத்து என்னவென்றால் டேட்டா பைண்டிங்க் அதாவது மாடலில் (டேட்டா) ஏதாவது மாற்றமென்றால் வியூவில் ஆட்டோமேட்டிக்காக மாற்றம் ஏற்பட முடிந்தது அதே போல் வியூவில் ஏதாவது மாற்றம் என்றால் ஆட்டோமேட்டிக் ஆக மாடலில் மாற்றம் செய்ய முடிந்தது

எல்லாவற்றிற்கும் மேலாக டைரக்டிவ்ஸ் என்றொரு idea உருவாக்க

பட்டு   நிரலாளரால் உருவாக்கிய சொந்த html டேக்கை பயன்படுத்த முடிந்தது.

சான்றாக

<calendar></calendar>

 மேலே உள்ள டேக்கை ஆங்குலர் ஜெ எஸ் ஆனது இன்டெர்னல் ஆக எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை  நிரலாளர் தானாக எழுத முடிந்தது.

மேலும் ஒரு சூப்பரான விசயம் என்றால் dependency injection என்றொரு கருத்து உருவாக்கப்பட்டு அதன் கோடிங்கை ரியூஸ் செய்யவும் எளிதாக பரிசோதனை செய்யவும் முடிந்தது.

ஆங்குலர் ஜெ எஸ் பிரபலமாய் பேசப்பட்ட அதே நேரத்தில் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வெர்சன் ஆன ஆங்குலர் 2 அறிமுகப்படுத்தப்பட்டது.

மேலும் அதிலிருந்து ஆங்குலர் ஜெஎஸ் என அழைக்கப்படாமல் ஆங்குலர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

ஆங்குலர் 2 ஆனது 2016-ல் வெளியிடப்ப்பட்டது. மேலும் இது வெவ்வேறு பிளாட்ஃபார்ம் ஆன வெப், மொபைல், டெஸ்க்டாப் ஆகியவற்றில் அப்ளிகேசன் உருவாக்கப் பயன்பட்டது.

அடுத்து ஆங்குலர் 3 அறிவிக்கப்படாமலே ஆங்குலர் 5 அறிமுகப்படுத்தப் பட்டது.

ஆங்குலரின் லேட்டெஸ்ட்வெர்சன் ஆனது அங்குலர் 10 ஆகும்

 

ஆங்குலர் பயன் படுத்துவதன் நண்மைகள்.

 ஆகையால் ஏன் ஆங்குலர் பயன்படுத்த வேண்டும் என்றால் இது வெப், மொபைல், டெஸ்க் டாப் ஆகியவற்றில் அப்ளிகேசன் உருவாக்க பயன்படுகின்றது மேலும் இது சக்தி வாய்ந்தது, நவீனமானது மேலும் கீழ் வரும் காரணகளுக்காக இதை பயன்படுத்தலாம்.

1.   ஆங்குலர் ஆனது டூல்களை மட்டும் வழங்காமல் டிசைன் பேட்டர்ங்களையும் சேர்த்தே தருகின்றது

2.   இது ஜாவா ஸ்கிரிப்ட் தான் ஆனால் மேலானது. ஆங்குலர் ஆனது டைப் ஸ்கிரிப்ட் கொண்டு எழுதப்பட்டது. டைப் ஸ்கிரிப்ட் ஆனது ஜாவாஸ்கிரிப்ட் es 6 ஐ அடிப்ப்டையாக கொண்டது. இது முற்றிலும் புது மொழி அல்ல நவீன மொழிகளில் உள்ள ஸ்டேட்டிக் டைப்பிங்க், இன்டெர்ஃபேஸ், கிளாஸ், நேம்ஸ்பேஸ், டெகரேட்டர்ஸ் ஆகியவற்றையே பயன்படுத்துகின்றது.

3.    இது html எலிமெண்டுகளுக்கு டைனமிக் பிஹேவியர் வழங்கக்கூடிய டைரக்டிவ்களை தருகின்றது. வெவ்வேறு வகையான http ரிகுவெஸ்ட்களை அனுப்ப முடிகின்றது.

4.   கான்பொனண்ட்கள்  டிகப்பில்ட்(Decoupled) செய்யப்பட்டுள்ளது

5.   எல்லா டாம் மேனிபுலேசனும் எங்கு நடக்க வேண்டுமோ அங்கு நடக்கின்றது.

6.   எளிதாக டெஸ்ட் செய்ய முடிகின்றது.

7.   மல்டிபிள் பிளாட்ஃபார்ம்க்குளான ஃபரேம் வொர்க்.

8.   மிகப்பெரிய கம்யூனிட்டியை கொண்டது.

ஆங்குலர் பயன்படுத்துவதில் உள்ள சிக்கல்கள்.

1.   டைப் ஸ்கிரிப்டை புரிந்து கொள்ள வேண்டும்.

2.   டைப் ஸ்கிரிப்ட் என்பது ஜாவாஸ்கிரிப்டின் சூப்பர் செட் ஆகும். அதோடு இனைந்து செல்ல வேண்டியுள்ளது.

3.   நோட் ஜெ எஸ்(node js) பேக்கேஜ் மேனேஜர் ஆன npm கொண்டு ஆங்குலரை இன்ஸ்டால் செய்ய வேண்டும் அதோடும் இணைந்து செல்ல வேண்டும்.

4.   ஆப் டெவலெப் செய்யும் பொழுது டிபக் டூல்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை அறிய வேண்டும்.

 

முடிவுரை.

.இந்த கட்டுரையில் ஆங்குலர் என்றால் என்ன  இது ஒரு கிளையண்ட் சைட் ஃபரேம் வொர்க் ஆக எவ்வாறு பயன்படுகின்றத, ஆங்குலர் js ல் இருந்து எவ்வாறு மாறுபடுகின்றது. அதன் நண்மைகள் என்ன என்பது குறித்து அறிந்தோம்.

-முத்து கார்த்திகேயன்,மதுரை.

 

ads Udanz

No comments:

Post a Comment