Wednesday, May 8, 2024

ஜாவா SPRING BOOT நிறுவி பிராஜெக்ட் இயக்குவது எப்படி?

 





முதலில் ஜாவாவை நிறுவவும்.

அதற்கு கூகுளில் amazon corretto என்று தேடவும் முதலில் வ்ரும் லிங்கில் சென்று வெர்சன் 17-ஐ டவுன் லோட் செய்து நிறுவிக் கொள்ளவும்.

அடுத்து maven down load என்று கூகுளில் சியர்ச் செய்யவும். முதல் வரும் லிங்கிற்குள் செல்லவும். பைனரி ஜிப் ஆர்கைவ் என்ற ஜிப் ஃபைலை டவுன் லோட் செய்து கொள்ளவும். அதை எக்ஸ்ட்ராக்ட் செய்து அந்த ஃபோல்டரை c டிரைவில் உள்ள program files என்ற ஃபோல்டரின் உட்புறம் சேவ் செய்யவும்.

அடுத்து  உங்கள் கணினியில் சிஸ்டம் என்விரான்மெண்ட் என சியர்ச் செய்து edit system environment variables என்பதை கிளிக் செய்யவும்.

அடுத்து வரும் டயலாக் பாக்சில் environment variables என்ற பட்டனை கிளிக் செய்யவும். அடுத்து வரும் பாக்சில் system variables என்ற தலைப்பின் கீழ் path என்ற ஆப்சனை டபிள் கிளிக் செய்யவும்.அடுத்து வரும் பாக்சில் browse பட்டனை கிளிக் செய்யவும்.அதில் c டிரைவில் ப்ரோக்ராம் ஃபைலில் நாம் சேவ் செய்த்துள்ள மேவன் ஃபைல் ஃபோல்டருக்குள் சென்று bin ஃபோல்டரை கிளிக் செய்து ஒகே கொடுக்கவும். பின் ஒகே கொடுத்து வெளியேரவும்.

பின் கமாண்ட் பிராம்ப்டில் mvn -version எனக் கொடுத்தால் வெர்சன் சரியாக காட்டும்.

பின் கணினியில் விசுவல் ஸ்டுடியோ கோடை இணையத்தில் இருந்து டவுன் லோட் செய்து நிறுவவும்.

பிறகு visual studio code -ல் extension pack for java என தேடி மொத்தம் ஒரே பேக்கேஜாக 6 எக்ஸ்டென்சன்களை நிறுவவும்.

இதில் ஃபைல் மெனுவில் auto save என்ற ஆப்சனை டிக் செய்யவும்.

அடுத்து ஸ்ப்ரிங்க் பூட் எக்ஷ்டென்சன் என தேடி அந்த எக்ஷ்டென்சனையும் இன்ஸ்டால் செய்யவும்.

அடுத்து ctrl+shift+p கீயை பிரஸ் செய்யவும்.

அடுத்து வரும் பாக்சில் spring initializer: create a maven project என்பதை கிளிக் செய்யவும். அடுத்து ஸ்ப்ரிங்க் பூட் வெர்சனை தேர்வு செய்யவும். சான்றாக 2.6.7.

அடுத்து வரும் மொழிகளில் ஜாவா என்பதை தேர்வு செய்யவும் அடுத்து குரூப் ஐடி கேட்கும் இதில் நிறுவனத்தின் பெயர் எண்டர் செய்யவும்.

சான்றாக

com.karthikeyan



இதில் com என்பதற்கு பதில் org அல்லது net என்பவைகளை கொடுக்கலாம்.

அடுத்து artifact id கேட்கும் இதில் அப்ளிகேசன் பெயரை கொடுக்கவும்.

சான்றாக hello-spring.

இதில் லோயர் கேஸ் எழுத்துக்களை கொடுக்க வேண்டும் அடுத்து வரும் வார்த்தைக்கு முன் ஹைபன் கொடுக்கவும்.

அடுத்து jar என்பதை தேர்வு செய்யவும்.

அடுத்து உங்கள் ஜாவா வெர்சனை தேர்வு செய்யவும் . நீங்கள் ஜாவா 17 வெர்சனை நிறுவியிருந்தால் 17 என்பதை தேர்வுன் செய்யவும்.

அடுத்து டிபெண்டெண்சி ஃபைல்கள் எவை தேவை என்று கேட்கும்.

இப்போதைக்கு எதுவும் கொடுக்க தேவையில்லை. அடுத்து எந்த ஃபோல்டரில் அப்ளிகேசனை சேவ் செய்ய வேண்டும் என்று லொக்கேசனை தேர்வு செய்யவும்.

கீழே successfully generated  எனக் காட்டும். அதில் open பட்டனை கிளிக் செய்யவும்.




பிராஜெக்டில் மூன்று முக்கிய பகுதிகள் இருக்கும். அவையாவன.

1.    Source code

2.    Resources

3.    Application tests.

Src/main/java/com/karthikeyan/hello-spring என் பாத் இருக்கும்.

அதற்குள் Application.java என் இருக்கும் அது தான் என்ட்ரி லொக்கேசன் ஆகும்.

Src/main/resources/static என ரிசோர்சஸ் பாத்  இருக்கும்.

அதற்குள் templates, application.properties ஆகியவையும் இருக்கும்.

Src/test/java என்பது அப்ளிகேசன் டெஸ்ட் பாத் ஆகும்.

Src/test/java/com/karthikeyan/hello-spring என இருக்கும். அதற்குள்

                         ApplicationTests.java என இருக்கும்.

 

இந்த பிராஜெக்டை இயக்க

mvn spring-boot:run

என டெர்மினலில் கொடுத்தால் கோட் ஆனது ரன் ஆகும்.

இரண்டாவது தடவை இயக்கினால் ஏற்கனவே கம்பைல் செய்து உருவாக்கப்பட்ட ஃபைல்களை டெலீட் செய்து விட்டு இயக்க

Mvn clean spring-boot:run என கொடுக்க வேண்டும்.

 

 

உங்கள் http சர்வரை தொடக்குவிக்க ஒரு டிபெண்டென்சி ஃபைல் தேவைப்படுகின்றது.

அதற்கு கூகுளில் spring boot web dependency எனக் கொடுக்கவும்.அடுத்து சென்ட் ரல் மேவன் ரெப்பாசிட்டரிக்குள் சென்று முதலில் மேவன் வெர்சனைத் தேர்ந்தெடுக்கவும்.

பிறகு அதில் உள்ள வரிகளை காப்பி செய்து  நம் பிராஜெட்டில்  உள்ள pom.xml ஃபைலில் டிபென்டென்சிக்குள் பேஸ்ட் செய்யவும்.

<dependency>

<groupid>org.springframework.boot</groupid>

<artifactid>spring-boot-starter-web</artifactid>

</dependency>

காப்பி பேஸ்ட் செய்யும் பொழுது வெர்சனும் சேர்ந்தே இருக்கும். அந்த வரிகளை மட்டும் அகற்றவும்

சான்றாக

<version>2.6.7</version>

இப்பொழுது

Mvn clean spring-boot: run

எனக் கொடுத்தால் டாம்கேட் சர்வர் இயங்கும் இது டிஃபால்ட் ஆக 8080 என்ற போர்ட்டில் இயங்கும்.

இப்பொழுது பிரவுசரில்

Localhost:8080

எனக்கொடுத்தால்

White label error page எனக் காட்டும்.

காரணம் எந்த html ஃபைலையும் உருவாக்க வில்லை.

Resources ஃபோல்டெரில் static என்ற ஃபோல்டரை உருவாக்கி அதற்குள்

Index.html என்ற புதிய ஃபைலை உருவாக்கவும்.

அதில் body டேக்கிற்குள்

<h1> Hello spring </h1>

எனக் கொடுக்கவும்.

இப்பொழுது மீண்டும்

mvn clean spring-boot run எனக்கொடுத்தால் டாம்கேட் சர்வர் இயங்கும்

இப்பொழுது பிரவுசரில்

Localhost:8080

எனக்கொடுத்தால் அவுட் புட்

Hello spring

எனக் காட்டும்

8080 ஏற்கனவே உபயோத்தில் இருந்தால் போர்ட் எண்ணை மாற்றிக் கொள்ளலாம்.

அதற்கு resources என்ற ஃபோல்டரில் application.properties என்ற ஃபைலுக்கு சென்று

Server.port=9090

எனக் கொடுக்கலாம்.

இப்பொழுது பிராஜெக்டை இயக்கி

Localhost:9090

அல்லது

127.0.0.1:9090

என பிரவுசரில் கொடுத்தால்

Hello spring

என அவுட்புட் கிடைக்கும்.

   -முத்து கார்த்திகேயன்,மதுரை

 

ads Udanz