Showing posts with label corel draw. Show all posts
Showing posts with label corel draw. Show all posts

Friday, September 28, 2018

கோரல் டிராவில் ட்ரான்ஸ்ஃபர்மேஷன்.



Transformations கட்டளையானது Arrange மெனுவில் முதலில் உள்ளது.அதில் மொத்தம் 5 கட்டளைகள் உள்ளன.
அவை
1.   Position
2.   Rotate
3.   Scale
4.   Size
5.   Skew

1.position.
முதலில் 50mm*50 mm கொண்ட சதுரம் ஒன்றை வரைந்து கொள்ளவும்.. பிற்கு அரேஞ்ச் மெனுவில் transformations என்பதில் position என்பதை கிளிக் செய்யவும்.
பின் வரும் விண்டோ வரும்.

அதில் h என்பதில் 50, v என்பதில் 50 கொடுக்கவும்.
Copies என்பதில் 2 என கொடுக்கவும்.
பின்னர் Apply பட்டனை கிளிக் செய்யவும்.
பின் வரும் தோற்றம் இருக்கும்.
அதாவது சதுரம் ஆனது ஹரிசாண்டல் ஆக 50mmம் வெர்டிகல் ஆக 50 mmம் நகர்ந்து 2 காப்பிகள் உருவாகியிருக்கும்.
2. rotate
முதலில் 15mm*90mm கொண்ட நீள் வட்டம் ஒன்றை வரைந்து கொள்ளவும்.பின்பு அதை செலெக்ட் செய்து கொள்ளவும் அரேஞ்ச் மெனுவில்
tranformations என்பதில் rotate என்பதைசெலெக்ட்செய்யவும்.
இதில் angle என்பதில் 30 டிகிரி கொடுக்கவும். Copies என்பதில் 5 என கொடுக்கவும். இப்பொழுது apply பட்டனை கிளிக் செய்யவும்.



மேல் உள்ளவாறு விண்டோ இருக்கும். அதாவது இந்த ஆப்சன் ஆனது 0-360 வரையில் ஏதாவது ஒரு ஆங்கிளுக்கு ரொடேட் செய்ய பயன்படுகின்றது.
3.scale
.ஆப்ஜெக்ட் ஒன்று வரைந்து கொண்டு அதை சத வீதத்தில் (உ-ம் 120%) பெரிதாக்கவோ அல்லது குறைத்துக் கொள்ளவோ இந்த ஆப்சன் பயன்படுகின்றது.
அரேஞ்ச் மெனுவில் transformation என்பதில் scale என்பதை தேர்ந்தெடுக்கவும்.
h,z என்ற் இரண்டிலுமே 120 என கொடுக்கவும். Copies என்பதில் 3 எனக் கொடுத்து அப்ளை பட்டனை கிளிக் செய்யவும்.

Size:
இதில் சரியான அளவு கொடுத்து அதற்கேற்றாற் போல் மாற்றிக் கொள்ள இது பயன்படுகின்றது..
 முதலில் சதுரம் அல்லது செவ்வகம் வரைந்து  கொண்டு இதில் அரேஞ்ச் மெனுவில் transformations என்பதில் சிழெ செலெக்ட் செய்து அதில் h,z ஆகியவற்றிக்கு சர்இயான அளவைக் குறிப்பிட்டு அப்ளை பட்டனை கிளிக் செய்யவும்.
5.skew:
இதில் ஒரு டெக்ஸ்ட் ஒன்றை டைப் செய்து கொள்ளவும்.பிறகு arrange மெனுவில் transformations என்பதில் skew செலெக்ட் செய்யவும்.

இதில் h என்பதில் 30 டிகிரியும், v என்பதில் 0-வும் கொடுக்கவும்.இப்போது அப்ளை பட்டனை கிளிக் செய்யவும்.

இப்பொழுது டெக்ஸ்ட் 30 டிகிரி சாய்வாக இருக்கும்..

-நன்றி
முத்து கார்த்திகேயன்,மதுரை.
ads Udanz

Saturday, March 17, 2018

கோரல் டிராவில் சிறிய ரங்கோலி வரைவது எப்படி?



முதலில் கோரல் டிராவில் எல்லிப்ஸ் டூலை செலெக்ட் செய்து எலிப்ஸ் வரையவும்.அதற்குள் ஏதாவது கலர் ஃபில் செய்யவும்
பின் arrange மெனு சென்று transformations  என்பதில் rotate செலெக்ட் செய்யவும்.Angle என்பதில் 30 டிகிரியும் காப்பிஸ் என்பதில் 5 கொடுத்து Apply கிளிக் செய்யவும்.
இப்போது பிக் டூல் உபயொகித்து ஆறு எலிப்ஸையும் மொத்தமாக செலெக்ட் செய்யவும்.
Arrange-> combine  செய்தால் வெளியீடு கீழே உள்ள வாறு இருக்கும்.
நன்றி.
முத்து கார்த்திகேயன்,மதுரை.

ads Udanz

Friday, December 29, 2017

கோரல் டிராவில் பவர் கிளிப் ஆப்சன்.


 

கோரல் டிராவில் பவர் கிளிப் ஆப்சன் ஒளி படங்களை குறிப்பிட்ட வடிவில் வெட்டி எடுக்க பயன்படுகின்றது.

உதாரணத்திற்கு முதலில் கோரல் டிராவை ஓபன் செய்து எலிப்ஸ் டூலை செலெக்ட் செய்யவும்.

பின் ctrl கீயை அழுத்திய படியே ஒரு வட்டம் வ்ரையவும்.



பின் p என்கின்ற கீயை அழுத்தினால் வட்டம் விண்டோவின் மத்தியில் வந்து விடும்.

பின்பு file மெனு சென்று import ஆப்சனை கிளிக் செய்யவும் இப்பொழுது ஒரு படத்தை தேர்வு செய்து டிராக் கொடுக்கவும்.

 



 

இப்பொழுது arrange மெனு சென்று order என்பதில்  to ack to page என்பதை தேர்வு செய்யவும்.


இப்பொழுது படம் பின்னால் சென்று விடும். வட்டம் முன்னால் வந்து விடும்



 

        இப்பொழுது effects  மெனு சென்று powerclip-> place inside container என்பதை தேர்வு செய்து வட்டத்தின் உள்ளே கிளிக் செய்ய்யவும்.இப்பொழுது

படமானது கீழ் கண்டவாறு வட்ட வடிவில் வெட்டி எடுக்கப் பட்டிருக்கும்.

 



 

இதே எழுத்துக்களின் வடிவிலும் படத்தை வெட்டி எடுக்கலாம்.

அதற்கு முதலில் டெக்ஸ்ட் டூல் செய்து விண்டோவில் டெக்ஸ்ட் டைப் செய்யவும்.



 

இப்பொழுது file->import சென்று படத்தை தேர்வு செய்து விண்டோவில் டிராக் செய்யவும்.



 

இப்பொழுது arrange ->order->to back of page என்பதை தேர்வு செய்யவும்,

படம் பின்னால் சென்று விடும். டெக்ஸ்ட் முன்னால் வந்து விடும்.

இப்பொழுது effects->powerclip->place inside container தேர்வு செய்து டெக்ஸ்டின் மேல் வைத்து கிளிக் செய்யவும். இப்பொழுது படமானது டெக்ஸ்டின் மீது வெட்டப் பட்டிருக்கும்.



                    நன்றி

முத்து கார்த்திகேயன்,மதுரை.
ads Udanz