Showing posts with label node js in Tamil. Show all posts
Showing posts with label node js in Tamil. Show all posts

Thursday, March 21, 2024

நோட் ஜெ எஸ் கற்றுக் கொள்வோம் -பகுதி4

 



விசுவல் ஸ்டுடியோ கோடை ஓபன் செய்யவும்.

File-> open folder

ஆப்சன் செல்லவும்.

நான் ஏற்கனவே E டிரைவில் node prgs என்றொரு ஃபோல்டர் உருவாக்கி வைத்துள்ளேன்.

அதை ஒபன் செய்து கொள்கின்றேன்.

அந்த ஃபோல்டரில் newprg.js என்றொரு ஜாவா ஸ்கிரிப்ட் ஃபைல் உருவாக்கவும்.

Console.log(“Welcome by Muthu karthikeyan”);

என்று டைப் செய்யவும்.

Ctrl+s கொடுத்து ஃபைலை சேவ் செய்யவும்.

Terminal-> New Terminal

செல்லவும்.

டெர்மினலில்

Node newprg.js எனக் கொடுத்தால்

Welcome by Muthu karthikeyan

என வெளீயீடு செய்யும்.

அடுத்து input.js என புதிய ஃபைலை உருவாக்கவும்.

இதில் இன்புட் வாங்குவது எப்படி என பார்க்க இருக்கின்றோம்.

const readline = require('readline');

const rl = readline.createInterface({

    input: process.stdin,

    output: process.stdout

})

கொடுத்துள்ளோம் . அதாவது முதலில் readline என்றஆப்ஜெக்டை இம்போர்ட் செய்துள்ளோம். அதை readline என்ற கான்ஸ்டண்டில் மதிப்பிருத்தியுள்ளோம்.

பிறகு அதைப் பயன்படுத்தி ஒரு இன்புட் அவுட்புட் செய்ய ஒரு இன்டெர்ஃபேசை உருவாக்கியுள்ளோம்.

அடுத்து

rl.question("What's your age", (age) => {

    console.log("you are " + age + " years old");

 

})

இப்பொழுது rl என்ற கான்ஸ்டண்டில் இன்புட் வாங்க வேண்டி முதலில் பிராம்ப்ட் , அடுத்த்து அதை log செய்து ஒரு கமாண்ட் என(callback ஃபங்க்சன்)

கொடுத்துள்ளோம்.

இப்பொது டெர்மினலில்.

Node input.js

எனக் கொடுத்தால்.

What’s your age

எனக்காட்டும்

45

என உள்ளீடு செய்தால்

You are 45 years old

வெளியீடு செய்யும் ஆனால் அது அந்த பிராசசை விட்டு வெளியேறியிருக்காது.

rl.question("What's your age", (age) => {

    console.log("you are " + age + " years old");

    rl.close();

})

அதாவது rl.close() என்ற ஃபங்க்சனை அழைத்துள்ளோம்.

இப்பொழுது கோடை ரன் செய்தால் இன்புட் மற்றும் அவுட்புட்டிற்கு பிறகு பிராசசை விட்டு வெளியேறியிருக்கும்.

அடுத்து close ஈவண்டில் ஒரு கோடிங்கை இயக்குவதற்கு கூடுதல் நிரல் வரிகள் சேர்த்து முழுமையான நிரலாக பின் வருமாரு எழுதுவோம்.

const readline = require('readline');

const rl = readline.createInterface({

    input: process.stdin,

    output: process.stdout

})

rl.question("What's your age", (age) => {

    console.log("you are " + age + " years old");

    rl.close();

})

rl.on("close", () => {

    console.log("bye visit again!");

    process.exit(0);

}

)

வெளியீடு:

PS E:\node prgs> node input.js

What's your age45

you are 45 years old

bye visit again!

PS E:\node prgs>

அதாவது rl ஆனது close ஆகும் பொழுது bye visit again! என log செய்துள்ளேன்.

பிறகு மொத்த பிராசசை விட்டு வெளியேற

Process.exit(0);

எனக் கொடுத்துள்ளேன்.

தொடரும்.

நன்றி

முத்துக் கார்த்திகேயன், மதுரை

 

 

 


ads Udanz

Monday, March 18, 2024

நோட் ஜெ எஸ் கற்றுக் கொள்ளலாம். பகுதி-2

 


நோட் ஜெ எஸ் நிறுவுதல்.



கூகுளில் Node js எனத் தந்து தேடவும். வரும் ரிசல்டில் nodejs.org செல்லவும்.

கீழ் வரும் பக்கம் காண்பிக்கப்படும்.



இதில் lts வெர்சன் , current வெர்சன் என இரண்டு காட்டப்படும்.

இதில் lts வெர்சன் தேர்ந்தெடுக்கவும்.

இந்தப்பக்கமானது os -ஐ அதுவே கண்டுபிடித்து காட்டும். உதாரணத்துக்கு மேலே உள்ள பக்கம் விண்டோசில் தேடிப்பார்க்கும் பொழுது தானாகவே காண்பிக்கப்படுகின்றது.

வேறு os எனில் download லிங்கை கிளிக் செய்யவும்.

இதில் os-க்கு ஏற்றார் போல் தேர்ந்த்தெடுத்து டவுன் லோட் செய்து கொள்ளவும்.

இப்பொழுது ஃபைலை ரன் செய்யவும்.







சுலபமான நெக்ஸ்ட் , நெக்ஸ்ட் நிறுவுதல்-தான்.

நிறுவிய பிறகு கமாண்ட் பிராம்ப்ட் சென்று நோட் நிறுவப்பட்டிருக்கின்றதா என்று உறுதி செய்யவும் .

கமாண்ட் ப்ராம்ப்டில் node -v எனக் கொடுக்கவும்.

Node வெர்சன் காட்டப்படும்.



பிழைச் செய்தி காட்டப்பட்டால் நோடை மறுபடியும் நிறுவவும்.

நன்றி

தொடரும்.

முத்து கார்த்திகேயன்,மதுரை.

 

ads Udanz

Sunday, March 3, 2024

நோட் ஜெ எஸ் கற்றுக் கொள்வோம். பகுதி -1

 



 

நோட் ஜெ எஸ்(NODE JS) என்பது என்ன?

Node js is a java script run time built on Google’s open source v8 engine.

அதாவது

நோட் ஜெ எஸ் ஒரு இயக்க நேர சூழல் ஆகும்.

இது கூகுளின் v8 எஞ்சினை பயன்படுத்துகின்றது.

 

எந்த பிரவுசர் என்றாலும் அது Html, Css, Javascript ஆகியவற்றை புரிந்து கொள்ளும். ஒரு பிரவுசரில் உள்ள ஜாவாஸ்கிரிப்ட் எஞ்சின் ஜாவாஸ்கிரிப்ட் நிரலை இயக்குகின்றது. பிரவுசர் ஆனது fetch, getElementById, Selector, Console.log போன்ற API -க்களையும் ஃபங்க்சன்களையும் தருகின்றது.

2019 வரை ஜாவா ஸ்கிரிப்ட் ஆனது பிரவுசருக்கு உள்ளே மட்டும் இயங்கி வந்தது. பிரவுசருக்கு வெளியே எந்த ஜாவா ஸ்கிரிப்ட் நிரலும் இயக்கப்பட வில்லை.

ஒவ்வொரு பிரவுசரும் அதன் உள்ளே ஒவ்வொரு வகையான ஜாவா ஸ்கிரிப்ட் எஞ்சின்களை கொண்டுள்ளது.

சான்று:

FireFox – spider monkey

Chrome- v8 Engine

Edge – சக்ரா

என ஒவ்வொரு பிரவுசரும் ஒவ்வொரு வகையான எஞ்சின்களை கொண்டுள்ளது.

குரோமை பொறுத்த வரை v8 எஞ்சின் தான் ஜாவாஸ்கிரிப்ட் நிரலை இயக்குவதற்கு பொறுப்பு.

2009-ல் ரியான் என்ற நிரலாளர் ஒரு புதிய திட்டத்தை கொண்டு வந்தார். ஜாவா ஸ்கிரிப்ட் நிரலை பிரவுசருக்கு வெளியே இயங்க வைப்பது அவருடைய யோசனை.

அவர் v8 எஞ்சினை எடுத்து அதை C++ புரோக்கிராமின் உட் புகுத்தினார்.

அது தான் நோட் என அழைக்கப்படுகின்றது. நோட் ஜெ எஸ் என்பது ஜாவா ஸ்கிரிப்ட் நிரலை இயக்கக் கூடிய ரன் டைம் என்விரான்மென்ட் ஆகும். இது ப்ளைன் ஜாவா ஸ்கிரிப்டை விட கூடுதல் API-க்களை கொண்டுள்ளது.

Node js is the Java script run time and some additional APIs.

.

இப்பொழுது Node Js ஆனது பிரவுசருக்கு வெளியே தனித்தியங்க கூடிய நிலையில் உள்ளது. மேலும் இது ஜாவா ஸ்கிரிப்டால் செய்யக்கூடியவற்றைக் காட்டிலும் கூடுதல் செயற்பாடுகளை செய்கின்றது. ஃபைல் சிஸ்டமை ஆக்சஸ் செய்தல், நெட் வொர்க் திறன்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

கடைசியில் இப்பொழுது நோட் ஜெ எஸ் ஆனது சர்வர் சைடில் இயங்கும் ஜாவா ஸ்கிரிப்ட் ஆக விளங்குகின்றது.

இது வேகமானது.

Scalable.

ஜாவா ஸ்கிரிப்ட் வேகமானது ஆகவும் பல்மடங்கு பெறுகும் படியாகவும் உள்ளதற்கு காரணம் இது சிங்கிள் திரட்டில் இயங்குகின்றது.

இது ஈவண்ட் ட்ரைவிங்க் மற்றும் நான்-பிளாக்கிங்க் I/O சிஸ்டமைக் கொண்டுள்ளது. இதனால் இது லைட் வெய்ட் ஆகவும் விளங்குகின்றது.

வேகமான மற்றும் Scalable ஆன டேட்டா இண்டெண்சிவ் பயன்பாடுகளை உருவாக்குவதற்கு நோட் ஜெ எஸ் சிறந்தது.

இந்த தொடரில் நோட் ஜெ எஸ் மற்றும் மாங்கோ டிபி ஆகியவற்றைக் கொண்டு எவ்வாறு டேட்டா இண்டென்சிவ் அப்ளிகேசன்களை உருவாக்குவது என்று பார்ப்போம்.

மாங்கோ டிபி  மற்றும் நோட் ஜெ எஸ் கொண்டு  டேட்டா இன்செர்ட் செய்தல் டேட்டா கேட்டு பெறுதல், டேட்டா அப்டேட் செய்தல், டேட்டா அழித்தல் ஆகியவற்றை எவ்வாறு  செய்வது என பார்க்கலாம்.

API மட்டும் அல்லது நோட் கொண்டு சில வகையான பயன் பாடுகளை உருவாக்கலாம்.

Streaming apps அதாவது யூடியூப், நெட் பிளிக்ஸ் போன்ற கனமான சர்வர் பயன்பாடுகளை உருவாக்க நோட் ஜெ எஸ் உகந்தது அல்ல.

நோட் ஜெ எஸ்ஸால் முடியாதது:

1.     இமேஜ் மேனிபுலேசன்

2.     வீடியோ கன்வெர்சன்

3.     ஃபைல் கன்வெர்சன்.

 

Uber, paypal, Ebay போன்ற நிறுவனங்கள் நோட் ஜெ எஸ்ஸை பயன்படுத்துவதால் நாமும் நோடை பயன்படுத்தலாம்.

 

நோட் ஜெ எஸ் மூலம் ஜாவா ஸ்கிரிப்டை ஃப்ரண்ட் எண்ட் மற்றும் பேக் எண்ட் ஆகிய இரு பக்கங்களிலும் பயன்படித்த முடிகின்றது.

அதனால் சர்வர் சைட் பயன்பாட்டிற்கென்று புதிய மொழியை கற்க அவசியமில்லை.

நோட் ஜெ எஸ் ஓபன் சோர்ஸ் லைப்ரரிகள் நிறைய இணையத்தில் இலவசமாக நிறைய கொட்டிக் கிடக்கின்றது.

இந்த பேக்கேஜ்கள் npm பயன்பாட்டிற்கு தயாரான நிலையில் உள்ளது.

நோட் ஜெ எஸ் நிரலாளர்களுக்கான பெரிய  கம்யூனிட்டியும் இணையத்தில் உள்ளது.

                                                              நன்றி

                                                                                   முத்து கார்த்திகேயன் , மதுரை

 

 

 

ads Udanz

Monday, April 13, 2020

Node js ஃபைல் சிஸ்டம் மாடூல்.



இந்த மாடூல் நமது கம்ப்யூட்டரில் உள்ள  ஃபைல்களை கையாள பயன்படுகின்றது.
ஃபைல் சிஸ்டம் மாடூலை பயன்படுத்துவதற்கு require  மெத்தட் தேவைப்படுகின்றது.
var fs = require('fs');
ஃபைல் சிஸ்டமின் பொது பயன்பாடுகள்.
  • Read files
  • Create files
  • Update files
  • Delete files
  • Rename files
ரீட் ஃபைல் .
இது நம் கணினியில் உள்ள ஃபைலை படிக்க உதவுகின்றது.
சான்றாக நம் கணினியில் கீழ் வரும் html ஃபைல் இருப்பதாக எடுத்துக் கொள்வோம்.
Demofile1.html
<html>
<body>
<h1>My Header</h1>
<p>My paragraph.</p>
</body>
</html>
Node js ஃபைல் ஒன்றை இந்த ஃபைலை ரீட் செய்யுமாறு எழுத வேண்டும்.
var http = require('http');
var fs = require('fs');
http.createServer(
function (req, res) {
  fs.readFile(
'demofile1.html', function(err, data) {
    res.writeHead(200, {'Content-Type': 'text/html'});
    res.write(data);
    res.end();
  });
}).listen(
8080);
இந்த ஃபைலை demo_readfile.js என்ற பெயரில் சேவ் செய்யவும்.
இப்பொழுது இந்த ஃபைலை இயக்குவோம்.
C:\Users\Your Name>node demo_readfile.js
பிறகு http://localhost:8080 சென்று பார்த்தால் வெளியீடு இருக்கும்.
Create files.
இதில் மூன்று வகையான செயல்பாடுகள் உள்ளன. அவை.
  • fs.appendFile()
  • fs.open()
  • fs.writeFile()
append file.
இது ஒரு ஃபைலில் கடைசியில் நம்முடைய டெக்ஸ்டை ஆட் செய்து செய்து கொள்கின்றது.இந்த ஃபைல் ஏற்கனவே இல்லையென்றால் புதிதாக உருவாக்கப்படும்.
var fs = require('fs');

fs.appendFile(
'mynewfile1.txt', 'Hello content!', function (err) {
 
if (err) throw err;
  console.log(
'Saved!');
});
open file.
இதில் இரண்டாவது ஆர்க்கியூமெண்ட் ஆனது (flag) ‘w’ என்று இருந்தால் இது ஃபைலை ரைட் செய்வதற்காக திறக்கப்படும். ஏற்கனவே இல்லையெனில் புதிதாக திறக்கப்படும்.
var fs = require('fs');

fs.open(
'mynewfile2.txt', 'w', function (err, file) {
 
if (err) throw err;
  console.log(
'Saved!');
});
fs.write மெத்தட் ஃபைலில் எழுதுவதற்கு பயன்படுகின்றது.
ஏற்கனவே ஃபைல் இல்லையென்றால் குறிபிட்ட உள்ளடக்கத்துடன் ஃபைல் உருவாக்கப்படும்.
var fs = require('fs');

fs.writeFile(
'mynewfile3.txt', 'Hello content!', function (err) {
 
if (err) throw err;
  console.log(
'Saved!');
});
ஃபைலை டெலீட் செய்தல்.
Fs.unlink மெத்தட் ஆனது ஃபைலை டெலீட் செய்ய பயன்படுகின்றது.
var fs = require('fs');

fs.unlink(
'mynewfile2.txt', function (err) {
 
if (err) throw err;
  console.log(
'File deleted!');
});
இவ்வாறாக ஃபைல்களை நோட் ஜெ எஸ் கொண்டு கையாளலாம்.
நன்றி.
முத்து கார்த்திகேயன்,மதுரை.

ads Udanz