Sunday, November 13, 2011

Java 1ம் பாடம்.




Java-ஜாவா-ஒரு அறிமுகம்.

ஜாவா ஒரு இணைய மொழி ஆகும்.
சன் மைக்ரோ சிஸ்டமால் உருவாக்கப் பட்டு இன்று ஆரக்கிள் கார்ப்பரஷனின் கையில் உள்ளது.
இது உருவாக்கப்படுவதற்கு முன்னால் சி,சி++ மிகவும் பிரபலமாக இருந்த சமயம்.நிறைய எலக்ட்ரானிக் சாதனங்கள் கண்டுபிடிக்கப் பட்டன.
இவற்றில் நிரலாக்கம் செய்தால் ஒரு சாதனத்தில் செய்யப்பட்ட நிரலை வேறொரு சாதனத்தில் அப்படியே இயக்க முடிய வில்லை. ஒவ்வொரு சாதனத்திற்கும் ஏற்றாற் போல் நிரல் பெயர்ப்பி(compiler) எழுத வேண்டியிருந்தது. Compiler என்பது விலை உயர்ந்ததாய் இருந்தது.
எனவே ஒரு portable language தேவைப்பட்டது.
மேலும் இரண்டாவது காரணம்
இணையம் கண்டு பிடிக்கப்பட்டது. இணையம் சம்பந்தப்பட்ட பயன்பாடுகக்ள்(applications) உருவாக்குவதற்கு ஒரு மொழி தேவைப்பட்டது.
இந்த இரண்டுமே ஜாவா மொழி கண்டு பிடிக்கப்பட காரணமாகும்.
ஆம் ஜாவா ஒரு portable மொழியாகும்.
இத்ற்கு முன் oak என்று பெயரிடப்பட்டிருந்த இந்த மொழியை உருவாக்கிய
சன் மைக்ரோ சிஸ்டம் சேர்ந்த நிரலாளர்கள் ஜாவா காஃப்பி குடித்துக்
கொண்டே என்ன பெயரிடலாம் என்று யோசித்த போது  காஃப்பியின் பெயரிட்டால் என்று தோன்றியது. இதுவே ஜாவா என்று பெயரிட காரணமாகும்.
Java is a both  compiled and interpreted language.
முதலில் ஜாவா compile செய்யப்ப்ட்டு class file ஆக மாற்றப்படுகின்றது.
பிறகு jvm (java virtual machine) ஆல் இன்டெர்ப்ரெட் செய்ய்ப்பட்டு இயக்கப்படுகின்றது.
ஜாவா ஒரு பொருள் நோக்கு நிரலாக்க மொழியாகும்(object oriented language).
மேலும் ஜாவா ஒரு நவீன மொழியாகும். உயர்தர பிழை கையாளுதல் (exception handling) மற்றும் garbage collection கொன்ண்டுள்ளது. அதாவது garbage collector ஆனது அவ்வப்போது இயங்கி நிரல் ஆக்கிரமித்திருந்த நிணைவகத்தை release செய்கிறது.
ஜாவாவில் pointer கிடையாது. எனவே ஜாவா நிரலால் நம் கணினியில் உள்ள நிணைவத்தை அணுக முடியாது. எனவே hacking போன்றவை தடுக்கப்படுகின்றன.
எனவே ஜாவா ஒரு பாதுகாப்பான மொழி எனப்படுகின்றது(java is a secured language)
மேலும் ஜாவாவில் multiple inheritance கிடையாது.
ஜாவா படிப்பதற்கு முன் ஒரு ide(Integrated development environment) ஐ உங்கள் கணினியில் டவுன் லோட் செய்து இயக்குங்கள்..(Netbeans,eclipse)  
இது பற்றிய தமிழில் விவரங்களுக்கு திரு ராஜ் குமாரின் tamilcpu.blogspot.com
என்ற தளத்திற்கு சென்று பார்க்கவும்.

  

ads Udanz

4 comments:

  1. எல்லா நிரல் மொழிகளைப் பற்றியும் எழுதுகிறீர்கள். மகிழ்ச்சி. நிறைய மாணவர்களைச் சென்றடைய தமிழ் திரட்டிகளில் இணைக்கவும்.

    ReplyDelete
  2. எல்லா நிரல் மொழிகளைப் பற்றியும் எழுதுகிறீர்கள். மகிழ்ச்சி

    ReplyDelete