Showing posts with label photoshop. Show all posts
Showing posts with label photoshop. Show all posts

Sunday, April 5, 2020

போட்டா ஷாப் டிப்ஸ் & ட்ரிக்ஸ்.



இமேஜூக்கு sepia எஃபெக்ட் பயன்படுத்துதல்.
முதலில் யாராவது ஒருவர் படத்தைப் போட்டா ஷாப்பில்  ஓபன் செய்து கொள்ளவும்.
லேயர் மெனுவிற்க்கு சென்று New Adjustment Layer என்பதில் Hue/Saturation என்ற விவரத்தை தேர்வு செய்யவும்.
பாப் அப் பாக்ஸ் ஒன்று வரும் .
அதில் ஓகே செலெக்ட் செய்யவும்.
இது ஆட்டோ மேட்டிக் ஆக லேயர் பேலட்டில் Hue/Saturation லேயரை உருவாக்கும்.
மேலும் இது hue/saturation பிராப்பர்ட்டி பாக்ஸை ஓபன் செய்யும்.
இதில் preset என்பதில் sepia என்பதை தேர்வு செய்யவும் .
இப்பொழுது இமேஜ் கீழ்கண்டவாறு இருக்கும்.

Liquify  ஃபில்டெர்.
முதலில் ஒரு இமேஜ் ஒன்றை ஓபன் செய்து கொள்ளவும்.
Filter மெனுவில் liquefy என்பதை தேர்வு செய்யவும்.
Liquify டையலாக் பாக்ஸ் ஓபன் ஆகும்.
அதில் டிஃபால்ட் ஆக வார்ப் டூல் செலெக்ட் ஆகியிருக்கும். இல்லையெனில் அந்த டையலாக் பாக்ஸின் இடது மேல்புறம் உள்ள அந்த டூலை செலெக்ட் செய்து கொள்ளவும்.
பிரஸ் அளவு 25 என்றும் பிரஸ் பிரஸ்ஸர் 70 என்றும் மாற்றவும்.
நமக்கு தேவையானவாறு பிக்சரில் கிளிக் செய்து டிராக் செய்து கொள்ளவும்.
இப்பொழுது கீழே உள்ளவாறு இருக்கும்.
நன்றி.
முத்து கார்த்திகேயன்,மதுரை.
To learn any computer course inMadurai contact:96293 291242


ads Udanz

Saturday, July 22, 2017


போட்டா ஷாப்பில் ஒளிப்படங்களை வட்ட வடிவில் வெட்டி எடுப்பது எப்படி?


பொதுவாக போட்டா ஷாப்பில் கிராப் டூலை உபயோகித்து சதுர வடிவிலோ  அல்லது செவ்வக வடிவிலோ வெட்டி எடுப்போம் . ஆனால் கிராப் டூலை உப்யோகித்து வட்ட வடிவில் வெட்டி எடுக்க முடியாது.

இதற்கான மாற்று வழியை பார்ப்போம்.

முதலில் போட்டா ஷாப்பில் படத்தை ஓபன் செய்து கொள்ளவும்.



இப்பொழுது லேயர் பேனலில் background என்பதற்கு அருகில் உள்ள lock ஐகானை டபிள் க்ளிக் செய்யவும்



வரும் டயலாக் பாக்சில் ok என்பதை க்ளிக் செய்யவும்.

எலிப்டிகள் மார்க்யூ டூலை செலக்ட் செய்யவும் .shift கீயை அழுத்தியவாறே படத்தில் ட்ராக் செய்யவும். முதலில் மவுஸ் பட்டனை ரிலீஸ் செய்து விட்டு  பின்பு ஷிப்ட் பட்டனை ரிலீஸ் செய்யவும்.

இப்பொழுது செலெக்ட் மெனுவில் inverse என்பதை தேர்வு செய்யவும்.



இப்பொழுது டெலிட் பட்டனை செலக்ட் செய்யவும்.



 

இப்பொழுது image மெனுவில் ட்ரிம் ஆப்சனை தேர்வு செய்யவும்.



டயலாக் பாக்சில் மேலே உள்ளவாறு செட் செய்து கொண்டு ஓகே பட்டனை க்ளிக் செய்யவும்.

இப்பொழுது ஃபைல் மெனுவில் சேவ் அஸ் செலெக்ட் செய்து படத்தை png டைப்பாக சேவ் செய்யவும்.



 

இப்பொழுது வட்ட வடிவில் வெட்டப்பட்ட படத்தை மேலே காண்கின்றோம்.

                                -முத்து கார்த்திகேயன்,மதுரை.

 
ads Udanz