Tuesday, October 30, 2018

டேலி கம்பனி உருவாக்கம். சில கேள்விகளும் பதில்களும்.



ஃபைனான்சியல் அக்கவுண்ட் மட்டும் நிர்வாகிப்பது எப்படி?
கம்பனி உருவாக்கத் திரையில் maintain என்பதில் Accounts only என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இப்பொழுது inventory options இருக்காது(உ-ம் stock item)
ஒரு வருடத்தின் தொடக்கத்திலேயே accounts only வேண்டுமா அல்லது accounts with inventory வேண்டுமா என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.இடையில் மாறுதல் கூடாது.
ஃபைனான்சியல் இயர் என்பது என்ன? எவ்வாறு செட் செய்வது?
ஃபைனான்சியல் இயர் என்பது 1 வருடம் ஆகும். இது பொதுவாக ஏப்ரல் 1 லிருந்து அதற்கடுத்த வருடம் மார்ச் 31 வரை இருக்கும். நாம் வேறு தேதி தேர்ந்த்டுத்துக் கொள்ளலாம்.
கமபனி பிரஃபைலை எவ்வாறு மாற்றியமைப்பது?
கேட் வே ஆஃப் டேலியிலிருந்து alt+f3 பட்டனை அழுத்தினால் company info மெனு வரும்.அதில் alter செலெக்ட் செய்து பிறகு கம்பனியை செலக்ட் செய்ய வேண்டும்.இப்பொழுது வரும் திரையில் வேண்டிய மாறுதல்களை செய்து கொள்ளலாம்.
கம்பனியை டெலீட் செய்வது எப்படி?
Alt+f3 பிரஸ் செய்து company info –திரையில் alter செலெக்ட் செய்து கம்பனி பெயரைத் தேர்ந்த்டுக்கவும். இப்பொழுது கம்பனி பிரஃபைல் ஸ்கிரீனில் இருந்த படி Alt+D பிரஸ் செய்யவும். கன்ஃபர்மேசன் மெனுவில் yes என்பதை தேர்ந்த்டுத்தால் கம்பனி டெலீட் ஆகி விடும்.
ஒரு கம்பனியை செலக்ட் மற்றும் ரிசெலக்ட் செய்வது எப்படி?
கேட் வே ஆஃப் டேலியிலிருந்து F1 கீயை அழுத்தவும். கம்பனி லிஸ்ட் வரும் அதில் இருந்து கம்பனி பெயரை தேர்ந்த்டுத்துக் கொள்ளலாம்.
ரிசெலெக்ட் செய்வதற்கு கேட் வே ஆஃப் டேலி ஸ்கிரீனில் இடது பக்கம் உள்ள கம்பனி லிஸ்டில் நமக்கு தேவையான கம்பனியைத் தேர்ந்த்டுத்துக் கொள்ளலாம். இது ஆக்டிவ் கம்பனி ஆகும். மேலும் இது போல்ட் எழுத்தாக இருக்கும்.
கம்பனி shut செய்வது எப்பட்?
கேட் வே ஆஃப் டேலியிலிருந்து alt+f1 கீயை அழுத்தி கம்பனி பெயரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இப்பொழுது இடது பக்கத் திரையில் கம்பனி பெயர் இருக்காது.
டேலி எஜுகேசனல் மோட் என்பது என்ன?
இதற்கு டேலி லைசன்ஸ் வாங்கத் தேவையில்லை. ஆனால் இது கட்டுப் படுத்தப் பட்ட வெர்சன் ஆகும். தேதிகளில் 1,2, 31 தவிர வேறு எந்த தேதியும்  பயன்படுத்த முடியாது. சில ஆப்சன்களும் இருக்காது. எனினும் கற்றுக் கொள்வதற்கு தேவையான எல்லா விசயங்களும் இருக்கின்றது.
டேலியின் தொடக்கத் திரையில் Alt+w மற்றும் alt+I கீயை அழுத்தி எஜுகேசனல் மோடில் வேலை செய்யலாம்.
எவ்வாறு டேட்டாவை பாதுகாப்பது?
டேலியில் இரு வகைகளில் டேட்டாவை பாதுகாக்கலாம்.
1.   Data Encryption
2.   Security control
Data Encryption.
இது டேட்டாவை நம்மைத் தவிர வேறு யாறும் பயன்படுத்த முடியாத படி என்கிரிப்சன் செய்கின்றது. இதற்கு tally vault என்று பெயர். கம்பனி உருவாக்கத்திரையில் பாஸ்வேர்டு கொடுத்து என்கிரிப்ட் செய்து கொள்ளலாம்.
Security control.
இது ஆதரைஸ்டு நபர்களை மட்டும்.அவர்களுக்கு டேலியை பயன்படுத்த அனுமதி கொடுக்க பயன்படுகின்றது. இது கம்பனி உருவாக்கத் திரையில் Use security control என்பதற்கு yes என்று கொடுக்கவும்.
மல்டி லைன் அட்ரஸ் கொடுப்பது எப்படி?
முகவரி கொடுக்கும் பொழுது ஒவ்வொரு லைனின் முடிவிலும் எண்டர் கீ அழுத்தி இன்புட் கொடுக்கலாம்.
உதாரணம்
M63, narmatha street
Ellis nagar
Madurai.
டெலிபோன் மற்றும் மொபைல் எண்களில் ஒன்றுக்கு மேற்பட்டவை கொடுக்கலாமா? எவ்வாறு?
கொடுக்கலாம். கமா கொடுத்து பிரித்தெடுத்துக் கொள்ளலாம்.
உ-ம்:
994419271, 96845321
ஒரு கம்பனியின் முகவரி, போன் நம்பர்,மொபைல் போன் நம்பர் கட்டாயம் கொடுக்க வேண்டுமா?
கட்டாயம் இல்லை. இது ஆப்சனல் தான்.
முத்து கார்த்திகேயன்,மதுரை.
 

ads Udanz

Saturday, October 27, 2018

c# out பராமீட்டர்.


சி ஷார்ப்பில் ஒரு மெத்தடிலிருந்து எவ்வாறு ஒன்றுக்கும் மேற்பட்ட மதிப்பை ரிடர்ன் செய்வது என்று இந்த வீடியோவில் காணலாம்.

நன்றி
முத்து கார்த்திகேயன்,மதுரை.

ads Udanz

Friday, October 26, 2018

C# வேல்யூ மற்றும் ரெஃப் பராமீட்டர் வித்தியாசம் வீடியோ.



இந்த வீடியோவில் சி# மெத்தட்களுக்கு பராமீட்டர்கள் அனுப்பும் பொழுது வேல்யூ மற்றும் ரெஃப் டைப்புகளுக்கு இடையேயான வித்தியாசத்தை காணலாம்.





நன்றி
முத்து கார்த்திகேயன்,மதுரை.
ads Udanz

Thursday, October 25, 2018

ஜாவா அர்ரே லிஸ்ட் கிளாஸ்


நிரலாக்க மொழிகளில் பொதுவாக அர்ரேயின் சைஸ் கம்பைல் நேரத்தில் குறிப்பிட்டுள்ள போல் தான் அமையும். இயக்க நேரத்தில் அதன் அளவை கூட்டவோ அல்லது குறைக்கவோ முடியாது. அர்ரே லிஸ்ட் ஒரு டைனமிக் அர்ரேயாகும். அர்ரே போல் அல்லாது அதன் அளவை இயக்க நேரத்தில் கூட்டவோ குறைக்கவோ முடியும்.
ArrayList கிளாஸ் ஆனது AbstractList கிளாஸை இன்ஹெரிட் செய்கின்றது.List என்ற இன்டர்ஃபேசை இம்ப்ளிமென்ட் செய்கின்றது
அர்ரேலிஸ்ட் பற்றிய குறிப்புகள்:
  • இதில் டூப்ளிகேட் எலிமென்டுகள் இருக்கலாம்.
  • எந்த ஆர்டரில் இன்செர்ட் செய்கின்றோம் என்பதை அழியாமல் பேணுகின்றது. இது is non synchronized கிளாஸ் ஆகும். இதன் எலிமெண்டுகளை ரேண்டம் முறையில் அனுகலாம்.
  •  
  • அர்ரேலிஸ்ட் கிளாஸை பொறுத்த வரை இதை கையாளுதல் மெதுவானதாகும். ஏனெனில் ஒரு எலிமென்ட் ஆனது ரிமூவ் செய்யப்படும் போது மற்ற எலிமெண்டுகள் ஷிஃப்ட் செய்ய ரிடுகின்றது.
Constructors of Java ArrayList
Constructor
Description
ArrayList()
இது வெற்று அர்ரேலிஸ்டை உருவாக்குகின்றது
ArrayList(Collection c)
இது கலக்சன் c –யில் இருக்கும் எலிமெண்டுகளுடன் அ்ர்ரேலிஸ்டை உருவாக்குகின்றது.
ArrayList(int capacity)
இது குறிப்பிட்ட கெப்பாடிட்டியுடன் அர்ரேலிஸை உருவாக்குகின்றது.

Methods of Java ArrayList
Method
Description
void add(int index, Object element)
இது குறிப்பிட்ட எலிமெண்டை குறிப்பிட்ட இண்டெக்ஸில் இன்செர்ட் செய்கின்றது.
boolean addAll(Collection c)
இது ஒரு அர்ரேலிஸ்டின் முடிவில் கலக்சன் C –யில் இருக்கும் எல்லா எலிமெண்டுகளையும் சேர்த்துக் கொள்கின்றது.
void clear()
இது எல்லா எலிமெண்டுககையும் நீக்குகின்றது
int lastIndexOf(Object o)
இது ஒரு எலிமெண்டின் கடைசி இண்டெக்ஸை ரிடர்ன் செய்கின்றது
Object[] toArray()
Iஇது ஒரு அர்ரேலிஸ்டை அர்ரேயாக கன்வெர்ட் செய்து அனுப்புகின்றது
Object[] toArray(Object[] a)
இது ஒரு அர்ரேலிஸ்டின் எல்லா எலிமெண்டுகளையும் அதன் ஆர்டரிலேயே அர்ரேயாக மாற்றி அனுப்பிகின்றது .
boolean add(Object o)
இந்த மெத்தட் ஆனது ஒரு ஆப்ஜெக்டை அதன் முடிவில் சேர்த்துக் கொள்கின்றது.
boolean addAll(int index, Collection c)
இது ஒரு கலக்சனை ஒரு அர்ரேலிஸ்டின் குறிப்பிட்ட இண்டெக்ஸில் ஆட் செய்து கொள்கின்றது.
Object clone()
இது ஒரு அர்ரே லிஸ்டை அப்படியே நகல் எடுக்கின்றது.
int indexOf(Object o)
இது ஒரு அர்ரேலிஸ்டில் குறிப்பிட்ட எலிமெண்ட் எந்த இண்டெக்ஸில் முதலாவதாக இருக்கின்றது என்பதை ரிடர்ன் செய்கின்றது.
void trimToSize()
இது ஒரு அர்ரேலிஸ்டை அதன் தற்போதைய அளவிற்கு டிரிம் செய்து கொள்கின்றது.


Java Non-generic Vs Generic Collection

Jdk 1.5 வெர்சனுக்கு முன் நான் ஜெனரிக் கலக்சன் தான் செயல்பட்டு வந்தது. அதாவது ஒரே அர்ரேலிஸ்டில் வெவ்வேறு வகையான டேட்டாக்களை சேமிக்கலாம். ஆனால் அது typesafe கிடையாது.

உதாரணம்.

ArrayList al=new ArrayList();//creating old non-generic arraylist  

இப்பொழுது உள்ள வெர்சன்களில் ஜெனரிக் அர்ரேலிஸ்ட் உருவாக்கலாம். எனவே ரண்டைமில் வெவ்வேறு வகையான டேட்டாக்களை சேமிக்க இயலாது.

உதாரணம்.

ArrayList<String> al=new ArrayList<String>();//creating new generic arraylist  

மேலே உள்ள அர்ரேலிஸ்ட் al என்பதில் string இனத்தைத் தவிர வேறு எந்த டைப்பிலும் டேட்டா சேமிக்க இயலாது.

.

அர்ரே லிஸ்ட் சான்று நிரல்-1
import java.util.*;  
class TestCollection1{  
 public static void main(String args[]){  
  ArrayList<String> list=new ArrayList<String>();//Creating arraylist  
  list.add("Muthu");//Adding object in arraylist  
  list.add("karthikeyan");  
  list.add("Muthu ");  
  list.add("karthikeyan ");  
  //Traversing list through Iterator  
  Iterator itr=list.iterator();  
  while(itr.hasNext()){  
   System.out.println(itr.next());  
  }  
 }  
}  
வெளியீடு:
       Muthu  
  Karthikeyan
       Muthu  
  Karthikeyan
ஒரு கலக்சனில் உள்ள எலிமெண்டுகளை பின் வரும் இரண்டு வகைகளில் அணுகலாம்.
1.  Iterator interface பயன்படுத்தி.
2.  For each loop பயன்படுத்தி
மேலே உள்ள நிரலில் iterator interface பயன்படுத்தி எழுதப் பட்டுள்ளது.
கீழே உள்ள நிரல் for rach பயன்படுத்தி எழுதப் பட்டுள்ளது.
import java.util.*;  
class TestCollection2{  
 public static void main(String args[]){  
  ArrayList<String> al=new ArrayList<String>();  
  al.add("Rani");  
  al.add("Arun");  
  al.add("Rani");  
  al.add("Arun");  
  for(String obj:al)  
    System.out.println(obj);  
 }  
}  
வெளியீடு:
       Rani
       Arun
       Rani
       Arun
Students கிளாஸ் ஆப்ஜெக்டை எவ்வாறு கலக்சன் லிஸ்டில் சேமிப்பது என்று கீழே உள்ள நிரலில் குறிப்பிடப் பட்டுள்ளது.
class Student{  
  int rollno;  
  String name;  
  int age;  
  Student(int rollno,String name,int age){  
   this.rollno=rollno;  
   this.name=name;  
   this.age=age;  
  }  
}  
import java.util.*;  
public class TestCollection3{  
 public static void main(String args[]){  
  //Creating user-defined class objects  
  Student s1=new Student(101,"Muthu",25);  
  Student s2=new Student(102,"Ragu",28);  
  Student s2=new Student(103,"Hari",26);  
  //creating arraylist  
  ArrayList<Student> al=new ArrayList<Student>();  
  al.add(s1);//adding Student class object  
  al.add(s2);  
  al.add(s3);  
  //Getting Iterator  
  Iterator itr=al.iterator();  
  //traversing elements of ArrayList object  
  while(itr.hasNext()){  
    Student st=(Student)itr.next();  
    System.out.println(st.rollno+" "+st.name+" "+st.age);  
  }  
 }  
}  
வெளியீடு:

       101 Muthu 25
       102 Ragu 28
       103 Hari 26

addAll(Collection c) method உதாரணம்.
import java.util.*;  
class TestCollection4{  
 public static void main(String args[]){  
  ArrayList<String> al=new ArrayList<String>();  
  al.add("Ragu");  
  al.add("Vijay");  
  al.add("Arun");  
  ArrayList<String> al2=new ArrayList<String>();  
  al2.add("Subbu");  
  al2.add("Hari");  
  al.addAll(al2);//adding second list in first list  
  Iterator itr=al.iterator();  
  while(itr.hasNext()){  
   System.out.println(itr.next());  
  }  
 }  
}  
வெளியீடு:
       Ragu
       Vijay
       Arun
       Subbu
       Hari
removeAll() method உதாரணம்
import java.util.*;  
class TestCollection5{  
 public static void main(String args[]){  
  ArrayList<String> al=new ArrayList<String>();  
  al.add("Ragu");  
  al.add("Vijay");  
  al.add("Arun");  
  ArrayList<String> al2=new ArrayList<String>();  
  al2.add("Ragu");  
  al2.add("Hari");  
  al.removeAll(al2);  
  System.out.println("iterating the elements after removing the elements of al2...");  
  Iterator itr=al.iterator();  
  while(itr.hasNext()){  
   System.out.println(itr.next());  
  }  
  
  }  
}  
வெளியீடு:
       iterating the elements after removing the elements of al2...
       Vijay
       Arun


 retainAll() method உதாரணம்.
import java.util.*;  
class TestCollection6{  
 public static void main(String args[]){  
  ArrayList<String> al=new ArrayList<String>();  
  al.add("Ragu");  
  al.add("Vijay");  
  al.add("Arun");  
  ArrayList<String> al2=new ArrayList<String>();  
  al2.add("Ragu");  
  al2.add("Hari");  
  al.retainAll(al2);  
  System.out.println("iterating the elements after retaining the elements of al2...");  
  Iterator itr=al.iterator();  
  while(itr.hasNext()){  
   System.out.println(itr.next());  
  }  
 }  
}  
வெளியீடு:
       iterating the elements after retaining the elements of al2...
       Ragu
Java ArrayList Book கிளாஸ் சான்று நிரல்.

import java.util.*;  
class Book {  
int id;  
String name,author,publisher;  
int quantity;  
public Book(int id, String name, String author, String publisher, int quantity) {  
    this.id = id;  
    this.name = name;  
    this.author = author;  
    this.publisher = publisher;  
    this.quantity = quantity;  
}  
}  
public class ArrayListExample {  
public static void main(String[] args) {  
    //Creating list of Books  
    List<Book> list=new ArrayList<Book>();  
    //Creating Books  
    Book b1=new Book(101,"Every one has a story" , "Savi sharma","Westland",10);  
    Book b2=new Book(102,"Will you still love me","Ravinder singh","penguin",5);  
    //Adding Books to list  
    list.add(b1);  
    list.add(b2);  
    //Traversing list  
    for(Book b:list){  
        System.out.println(b.id+" "+b.name+" "+b.author+" "+b.publisher+" "+b.quantity);  
    }  
}  
}  
வெளியீடு:
101 Every one has a story Savi Sharma Westland 10
102 Will you still love me Ravinder singh penguin 5
நன்றி
முத்து கார்த்திகேயன்,மதுரை.

ads Udanz