Thursday, May 28, 2015

CSHARP பாடம் -11 CONSTRUCTORS IN C#.NET




CONSTRUCTOR என்பது ஒரு க்ளாஸ் உள்ளே உள்ள SPECIAL METHOD ஆகும்.இது அந்த க்ளாஸிற்கு ஆப்ஜெக்ட் உருவாக்கும் போது தானாகவே இயங்குகிறது.


ஒரு CONSTRUCTOR ஆனது பின் வரும் வழிமுறைகளில் CALL ஆகுகின்றது.

1.ஆப்ஜெக்ட் உருவாக்கும் போது(new KEYWORD மூலமாக)
2.அதே க்ளாஸின் மற்றொரு CONSTRUCTOR –ல் இருந்து.(this KEYWORD மூலமாக)
3.DERIVED CLASS-ன் CONSTRUCTOR-ல் இருந்து(base KEYWORD மூலமாக)


CONSTRUCTOR வகைகள்:

1. Default constructor

2. Parameterized constructor

3. Instance constructor

4. Static constructor

5. Private constructor


DEFAULT CONSTRUCTOR

PARAMETER இல்லாத CONSTRUCTOR-கள் DEFAULT CONSTRUCTOR

எனப்படுகின்றது.ஒரு க்ளாஸின் உள்ளே(NON STATIC CLASS) நாம் எந்த CONSTRUCTOR-ம் இல்லாத போது கம்பைலரால் தானாகவே PROVIDE செய்யப்படுகின்றது. இது எந்த பராமீட்ட்டரும் இன்றி ஆப்ஜெக்ட் உருவாக்கும் போது அழைக்கப்படுகின்றது.



PARAMETERIZED CONSTRUCTOR

PARAMETER உள்ள CONSTRUCTOR –கள் PARAMETERIZED CONSTRUCTOR எனப்படுகின்றது. ஒரு க்ளாஸின் உள்ளே ஒன்றுக்கு மேற்பட்ட PARAMETERIZED CONSTRUCTOR இருக்கலாம். DEFAULT CONSTRUCTOR ஆனது ஒரு க்ளாஸின் உள்ளே எந்த PARAMETERIZED CONSTRUCTOR-ம் இல்லாத போதே கம்பைலரால் PROVIDE செய்யப்படுகின்றது. ஒரு க்ளாஸின் உள்ளே PARAMETERIZED CONSTRUCTOR இருந்தால் DEFAULT CONSTRUCTOR நாம் தான் எழுத வேண்டும்.


STATIC CONSTRUCTOR



ஒரு STATIC CLASS அல்லது NON STATIC CLASSந் உள்ளே உள்ள STATIC VARIABLE S இவற்றை INITIALIZE செய்ய பயன்படுகின்றது. இதனில் எந்த ACCESS MODIFIER-ம் குறிப்பிடப்படுவதில்லை.எந்த PARAMETER-ம் PASS பண்ண முடியாது.ஒரு க்ளாஸிற்கு ஒரு STATIC CONSTRUCTOR தான் இருக்கும். this,base KEYWORDS மூலம் CALL செய்ய இயலாது. STATIC CONSTRUCTOR ஆனது அந்த க்ளாஸிற்கு எந்த ஆப்ஜெக்டும் CREATE செய்வற்கு முன்பே CALL செய்யப்படுகின்றது.ஒரு க்ளாஸின் மொத்த LIFE TIME-ல் ஒரு தடவை தான் இது CALL ஆகுகின்றது


PRIVATE CONSTRUCTOR


PRIVATE என்ற ACCESS SPECIFIER உள்ள CONSTRUCTOR ஆனது PRIVATE CONSTRUCTOR எனப்படுகின்றது. PRIVATE CONSTRUCTOR –களுக்கு ஆப்ஜெக்ட் உருவாக்கவோ அல்லது INHERIT செய்யப்படவோ இயலாது.அந்த க்ளாஸின் உள்ளேயே தான் ஆப்ஜெக்ட் உருவாக்க வேண்டும்.



நான் மதுரையில் FULL DOTNET பாடங்கள் வ்குப்புகள் நடத்தி வருகின்றேன்
CONTENTS:
C#, VISUAL C#,VB.NET,ASP.NET,ADO.NET,WPF WCF ,AJAX ,MVC,RAZOR, JQUERY,LINQ, GRID VIEW,CHART SQL SERVER ஆகியவை ஆகும் 

தொடர்புக்கு:
91 96293 29142
























ads Udanz

Tuesday, May 26, 2015

ஜாவா-பாடம்-20 this keyword.


ஜாவாவில் this keyword தற்போதைய ஆப்ஜெக்ட்டை(current object) குறிக்கும்reference variable ஆகும்.

public class Point {
    public int x = 0;
    public int y = 0;
       
    //constructor
    public Point(int a, int b) {
        x = a;
        y = b;
    }
}

மேலே உள்ள நிரலில் this keyword உபயோகிக்கப் படவில்லை.இதே நிரலை கீழே உள்ளவாறு எழுதினோம் என்றால் this keyword தேவைப்படும்.

public class Point {
    public int x = 0;
    public int y = 0;
        
    //constructor
    public Point(int x, int y) {
        this.x = x;
        this.y = y;
    }
}

point class-ன் instance variable பெயரும் x,y. மற்றும் point constructor –ன் தலைப்பில் x,y என இரு local variable ம் உள்ளன.எனவே name collision தவிர்க்கவே this.x ,this.y என்று குறிப்பிடப்பட்டுள்ளது.this.x ,this.y ஆகியவை முறையே point class-ன் instance variable x,y ஆகும்.

constructor உடன் this keyword பயன்பாடு.

cclass Student
{  
    int id;  
    String name;  
    Student()
{
System.out.println("default constructor is invoked");
}  
      
    Student (int id,String name)
{  
    this ();//it is used to invoked current class constructor.  
    this.id = id;  
    this.name = name;  
  }  
    void display()
{
System.out.println(id+" "+name);}  
      
    public static void main(String args[]){  
    Student e1 = new Student(111,"karan");  
    Student e2 = new Student(222,"Aryan");  
    e1.display();  
    e2.display();  
   }  
}

 Output:
       default constructor is invoked
       default constructor is invoked
       111 Karan 
               222 Aryan 

ஒரு கிளாஸின் உள்ளே நிறைய constructors இருந்து ஒன்றிலிருந்து மற்றொரு constructor  அழைக்கப்பட this keyword பயன்படுத்தப்படுகின்றது.மேலே உள்ள நிரலில் parameterized constructor-ல் இருந்து non parameterized constructor ஆனது this()என அழைக்கப்பட்டுள்ளது.

 நான் மதுரையில் C,C++,JAVA CLASSES நடத்தி வருகின்றேன்.


மேலும் DOTNET, PHP, TALLY, MS-OFFICE வகுப்புகளும் நடத்தி வருகின்றேன்.

தொடர்புக்கு:

91 96293 29142
ads Udanz

Wednesday, May 20, 2015

CODE::BLOCKS INSTALL செய்து உபயோகிப்பது எப்படி?


CODE::BLOCKS  என்பது C,C++க்கான ஒரு IDE ஆகும்.IDE என்பது INTEGRATED DEVELOPMENT ENVIRONMENT ஆகும். அதாவது C,C++ PROJECTS-DEVELOP செய்யும் சூழலை இது வழங்குகின்றது.
முதலில் இதை எப்படி டவுன் லோட் செய்வது என்று பார்ப்போம்.
கூகுளில் CODE BLOCKS என்று கொடுக்கவும்.
வரும் ரிசல்ட்களிம் முதன்மையாக WWW.CODEBLOCKS.ORG க்ளிக் செய்து DOWNLOAD என்பதை க்ளிக் செய்யவும்.
  • இப்பொழுது  மூன்று தெரிவுகள் இருக்கும்.முதலாவதாக உள்ள Download the binary release என்பதை தெரிவு செய்யவும்.


இப்பொழுது Windows 2000 / XP / Vista / 7: என்ற தலைப்பின் உள்ள codeblocks-13.12mingw-setup.exe என்பதை தேர்வு செய்து டவுன்லோட் செய்யவும்.  பின் அதை இன்ஸ்டால் செய்யவும்.

 

பிறகு ஸ்டார்ட் பட்டனை க்ளிக் செய்து CODE BLOCKS என்பதை தேர்வு செய்யவும்.
CODE BLOCK இயங்க ஆரம்பிக்கும். பின் FILE MENU சென்று NEW PROJECT என்பதை தேர்வு செய்யவும்.

பின் வரும் விண்டோவில் CONSOLE APPLICATION என்பதை க்ளிக் செய்யவும்.
பின் வரும் விண்டோவில் NEXT தேர்வு செய்து LANGUAGES என்பதில் C++என்பதை தேர்வு செய்யவும்.

பின் NEXT க்ளிக் செய்து வரும் விண்டோவில் PROJECT TITLE என்பதில் நீங்கள் விருப்பபடும் பெயர் கொடுக்கலாம். பின் FOLDER TO CREATE PROJECT IN என்பதில் நீங்கள் விருப்ப படும் LOCATION(PROGRAM SAVING LOCATION) தேர்வு செய்யலாம்.

பின் வரும் விண்டோவில் COMPILER என்பதில் GNU GCC COMPILER என்பதை தேர்வு செய்யவும்.

இப்பொழுது FINISH என்பதை க்ளிக் செய்யவும் இபோது பின் வருமாரு விண்டோ வரும்.








SOURCES என்பதை EXPAND செய்து பார்த்தால் MAIN.CPP இருக்கும்..
இப்பொழுது நாம் வேண்டிய நிரல்களை எழுதலாம்.
COMPILE  செய்ய PROJECT பெயரை இடது புறம் உள்ள பேனில் தெரிவு செய்து வலது க்ளிக் செய்து BUILD என்பதை க்ளிக் செய்யவும். பின் ரன் செய்ய மேலே உள்ள டூல் பாரில் உள்ள பச்சை நிற முக்கோண ஐக்காணை க்ளிக் செய்யவும்.

படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது.

நான் மதுரையில் C,C++,JAVA CLASSES நடத்தி வருகின்றேன்.


மேலும் DOTNET, PHP, TALLY, MS-OFFICE வகுப்புகளும் நடத்தி வருகின்றேன்.
தொடர்புக்கு:


91 96293 29142
please also visit:
http://karthikeyantutorials.com/
ads Udanz

Friday, May 15, 2015

phpக்கான logout நிரல்




Php ல் லாக் அவுட் நிரல் மிகவும் எளிமையானதாகும்.

Logout என்றால் ஒரு பக்கத்தை விட்டு வெளியே வந்த பின் back button ஆனது சொடுக்கப்பட்டால் மீண்டும் அந்த பக்கத்திற்கு செல்லக் கூடாது.

அதற்கான கோடிங்:

<?php

Session_start();

Session_destroy();

header(“location:”.siteurl);

?>

இங்கே siteurl ஆனது logout லிங்க் க்ளிக் செய்யப்படும் போது நாம் எந்த பக்கத்திற்கு செல்ல வேண்டும் என்பதை குறிப்பதாகும்.

உதாரணமாக நாம் logout button சொடுக்கப்படும் போது home.php என்ற பக்கத்திற்கு செல்ல வேண்டும் என்றால்

header(“location:home.php”);

என்று அமைய வேண்டும்.
நான் மதுரையில் C,C++,JAVA CLASSES நடத்தி வருகின்றேன்.


மேலும் DOTNET, PHP, TALLY, MS-OFFICE வகுப்புகளும் நடத்தி வருகின்றேன்.
தொடர்புக்கு:
please also visit:
http://karthikeyantutorials.com/


91 96293 29142
ads Udanz

Java lesson-19 STATIC METHODS


static என்கின்ற KEYWORD உடன் அறிவிக்கப்படும் METHODS ஆனதுSTATIC METHOD என அழைக்கப்படுகின்றது.இவை அழைக்கப்படுவதற்கு அந்த கிளாஸிற்கு ஆப்ஜெக்ட் CREATE செய்ய வேண்டும் என்கின்ற அவசியம் இல்லை.அதற்கு பதிலாக CLASS NAME இணைத்து அழைக்கப்படுகின்றது

SYNTAX:

NORMAL METHOD CALLING:
OBJNAME.METHODNAME();


STATIC METHOD CALLING:
CLASSNAME.METHODNAME();

STATIC METHOD உள்ளே STATIC VAIABLE மற்றும் தான் கையாள முடியும்.
class Employee
{
int empno;
String name;
static String company = "tvS";

static void change(
{
company = “pepsi";
}

Student9(int r, String n)
{
empno=r;
name=n;
}

void display ()
{
System.out.println(empno+" "+name+" "+company);
}

public static void main(String args[])
{
Employee.change();
Employee e1=new Employee(111,”muthu”);
Employee e2=new Employee(112,”ram”);
Employee e1=new Employee(113,”senthil”);



e1.display();
e2.display();
e3.display();
}
மேலே உள்ள நிரலில் change என்பது static method .இதன் உள்ளே company என்கின்ற static variable கையாளப்படுகின்றது. இந்த மெத்தட் ஆனது க்ளாஸ் பெயரை உபயோகித்து அழைக்கப்படுகின்றது. display என்பது instance method .
object பெயரை உபயோகித்து இது அழைக்கப்படுகின்றது.

static methods:சில கட்டுப்பாடுகள்:

1.              இதன் உள்ளே ஸ்டேட்டிக் அல்லாத உறுப்பினர்களை கையாள        முடியாது. non static method-களை அழைக்கவும் முடியாது.
2.            this மற்றும் super key words உடன் சேர்த்து பயன் படுத்த முடியாது.


       Static Import

ஜாவாவில் import key ஆனது static keyword உடன் இனைத்து பயன்படுத்தப்படுகின்றது.இவை library static method-களை importசெய்ய பயன்படுத்த இவை பயன்படுகின்றது.


 

மேலே உள்ள நிரலில் sqrt  மற்றும் pow  என்கின்ற  static methods import செய்யப்பட்டு உபயோகப்படுத்த படுகின்றது.இவை Mathஎன்கின்ற libraray class-ன் உள்ளே உள்ளன.
நான் மதுரையில் C,C++,JAVA CLASSES நடத்தி வருகின்றேன்.


மேலும் DOTNET, PHP, TALLY, MS-OFFICE வகுப்புகளும் நடத்தி வருகின்றேன்.
தொடர்புக்கு:


91 96293 29142
please also visit:
http://karthikeyantutorials.com/
ads Udanz