Showing posts with label EXCEL. Show all posts
Showing posts with label EXCEL. Show all posts

Thursday, April 2, 2020

எக்சலில் xlookup ஃபங்க்சன்.


நாம் vlookup ஃபங்க்சன் பற்றி அறிவோம்.எக்சலில் முக்கியமான ஃபங்க்சன் இதுபற்றி காண்போம்.
எடுத்துக்காட்டாக vlookup பற்றி காண்போம்.
கீழே உள்ள எக்சல் டேபிளை எடுத்துக் கொள்வோம்.
இதில் E003-ன் வயது தேவை என்றால் பின் வரும் ஃபார்முலா எழுதலாம்.
=VLOOKUP(G2,C2:D6,2,0)
என்று கொடுத்தால் 45 என்று வரும்.
முதலில் உள்ள G2 என்ற செல்லில்  E003 என்று முதலில் டைப் செய்த பிறகே இந்த ஃபார்முலாவை டைப் செய்ய வேண்டும்.
C2:D6 என்பது சோர்ஸ் அர்ரே.
இதில் 2 என்பது ரிசல்ட் ஆனது c2:D6 –ல் இரண்டாவது காலம்ன்.
இதில் 0 என்பது எக்ஸாட்வேல்யூ என்பதைக் குறிக்கும்.
இப்பொழுது xLookUP ஃபங்க்சன் பற்றி காண்போம்.
இதே ரிசல்ட்டுக்கு XLookUP எவ்வாறு  பயன்படுத்துவது என்று காண்போம்.
=XLOOKUP(G2,C2:C6,D2:D6)
என்று கொடுத்தால் 45 என்று காட்டும்.
இதில் G2 என்பதில் E003 என்று டைப் செய்துள்ளதாக எடுத்துக் கொள்வோம்.
C2:C6 என்பது E003 யை தேடவேண்டிய செலெக்சன்.
அதற்கு நேர் எதிரில் உள்ள டேட்டாவை தேட வேண்டிய செலெக்சன்
D2:D6.
இவ்வாறாக எளிதாக XLOOKUP பயன்படுத்தலாம்.
இந்த ஃபார்முலா இப்பொழுது ஆபிஸ் 365-ல் மட்டுமே செயற்படுகின்றது.
நன்றி.
முத்து கார்த்திகேயன்,மதுரை.
91 9629329142



ads Udanz

Friday, September 21, 2018

எக்ஸலில் ரேங்க் ஃபங்க்சன்



ரேங்க் ஃபங்க்சன் ஆனது உதாரணத்திற்கு 10 பேருடைய மார்க் இருந்தால் எது முதல் மதிப்பெண், யார் இரண்டாவது மதிப்பெண், யார் கடைசி என கண்டறிவது ஆகும்.



இங்கு முதல் காலத்தில் பெயர் உள்ளது. இரண்டாவது காலத்தில் மார்க் உள்ளது. B2 முதல் b6 B6 வரை உள்ள மார்க்கிற்கு ரங்க் கண்டு பிடிக்க வேண்டும், அதற்கான ஃபார்முலா c2 வில் உள்ளது.
ஃபார்முலாவை டிராக் செய்யும் போது $B$2:$B6 என அப்சொலூட் ரெஃபரன்ஸ் குறிப்பிடப் பட்டிருப்பதை கவனிக்கவும்.அப்போது டிராக் செய்யும் பொழுது மாறாது. ஆனால் முதலில் உள்ள B2 என்பது B3,B4 என மாறும்.
கீழே அவுட்புட் உள்ளது.

இயல்பாக இது டிசண்டிங்க் ஆர்டரில் இருக்கும். அசண்டிங்க் ஆர்டரில் வேண்டுமென்றால் மூன்றாவது பாராமீட்டராக 1 என சேர்க்க வேண்டும்,.
சான்று:
=RANK(B2,$B$2:$B$6,1)
நன்றி
முத்து கார்த்திகேயன்,மதுரை.
ads Udanz