Showing posts with label top 10 programming languages. Show all posts
Showing posts with label top 10 programming languages. Show all posts

Friday, February 14, 2020

2020-ல் நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய டாப்-10 புரோகிராமிங்க் மொழிகள்.



இன்று எல்லாத் துறையிலும் கம்ப்யூட்டர் புகுந்து விட்டது. பேப்பர் பேனா காலம் முடிந்து விட்டது. தகவல்களை சேமிக்கவும் பெறவும் கம்ப்யூட்டர் பயன்படுகின்றது. தானியங்கி முறையில் இயங்கும் கார்கள் கணினி துறை உதவியுடன் வந்து விட்டது.எதிர்காலம் செயற்கை நுண்ணறிவு என்பது தெரிந்து போய் விட்டது.எனினும் இவற்றை உருவாக்க நிறைய நிரலாக்க மொழிகள் வந்து விட்டன. இந்த 2020-ல் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய டாப்-10 நிரலாக்க மொழிகள் குறித்து இந்த கட்டுரையில் காண்போம்.
1.      பைத்தான்.
 பைத்தான் சந்தேகமின்றி முதல் இடத்தை வகிக்கின்றது.புதிதாய் கற்றுக் கொள்வர்களும் எளிதாக கற்றுக் கொள்ளும் வண்ணம் அமைகின்றது.வேகமான, உபயோகிப்பதற்கு எளிதான மேம்பட்ட மென்பொருட்களை உருவாக்க பைத்தான் பயன்படுகின்றது. YouTube, Instagram, Pinterest, SurveyMonkey என்று எல்லாமே பைத்தான் கொண்டு உருவாக்கப்பட்டவை.உங்களுக்கு தேவைப்படும் ஒரு புரோகிராமர் வேலைக்கு இன்று பைத்தான் அறிவு மிகவும் முக்கியம்.oops கருத்துகளை ஆதரிக்கின்றது. பெரிய லைப்ரரி ஃபைல்களை கொண்டுள்ளது.டேட்டா சைன்ஸ், மெசின் லியர்னிங்க் என்று எல்லாத் துறையுலும் பைத்தான் பயன்படுகின்றது.
2.ஜாவா.
ஜாவாவானது 20 ஆண்டுகளுக்கும் மேலாக பிரபலமான நிரலாக்க மொழியாய் இருக்கின்றது.இது மேம்பட்ட வெப் எண்டர்பிரைஸ் பயன்பாடுகளை உருவாக்க ஜாவா பயன்படுகின்றது.உங்களுக்கு ஒரு பெரிய கணினி நிறுவனத்தில் வேலை தேவை என்றால் ஜாவாஸ்கிரிப்ட் அறிவு அவசியம். மேலும் ஆன்ட் ராய்டு ஸ்டுடியோ  மூலம் ஆண்ட் ராய்டு பயன்பாடுகளை உருவாக்க ஜாவா பயன்படுகின்றது.
3.      சி, சி++
இது சிஸ்டம் லெவல் புரோகிராமிங்க் செய்வதற்கு உதவும் இரண்டு நிரலாக்க மொழிகளாகும்.நீங்கள் சிஸ்டம் நிரல் தேவையென்றால் சந்தேகமின்றி சி, சி++ கற்றுக் கொள்ளலாம்.சி ++ அனது மிகவும் வேகமான அதே நேரத்தில் நிலையான மொழியாக விளங்குகின்றது.
மேலுன் இது STL எனப்படும் ஸ்டாண்டர்டு டெம்ப்லேட் டைப்ரரியைக் கொண்டுள்ளது.

4.      ஜாவாஸ்கிரிப்ட்.
ஜாவா ஸ்கிரிப்ட் ஒரு ஃப்ரண்ட் எண்ட் நிரலாக்க மொழியாகும்.
இது இன்டெரக்டிவ் ஃப்ரண்ட்எண்ட் வெப் பயன்பாடுகளை பயன்படுகின்றது. இது கிளையண்ட் சைட் மொழியாக இருந்த ஜாவா ஸ்கிரிப்ட் இப்பொழுது சர்வர் சைட் மொழியாகவும் பயன்படுகின்றது.
5.      கோ (GO) மொழி.
இந்த மொழி கூகுளினால் உருவாக்கப்பட்ட மிகவும் பிரபலமான மொழி. இது மல்டி திரட்டிங்கை நன்றாக செயற்படுத்துகின்றது. இது டிஸ்ட்ரிபியூட்டட் அப்ளிகேசன்கள் உருவாக்கப்பயன்படுகின்றது.
இது சிலிக்கான் பள்ளத்தாக்கில் உள்ள நிறுவனங்களில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது.எனினும் இந்திய நிறுவனங்களில் இது அரிதாக தான் பயன்படுகின்றது.
6.      R மொழி.
இது டேட்டா சைன்ஸ், மெசின் லியர்னிங்க் போன்ற துறைகளில் பயன்பட்டு வரும் மொழியாகும்.இது மிகவும் சூப்பரான லைப்ரரி மற்றும் மெசின் லியர்னிங்க் அல்கரிதம்களை கொண்டுள்ளது.
இது ஸ்டேடிடிஸ்க் கம்ப்யூட்டிங்க் மற்றும் கிராப்பிக்ஸ் துறையிலும் பயன்பட்டு வருகின்றது.
7.      Swift.
இந்த மொழி ios அப்ளிகேசன்களை உருவாக்கப்பயன்பட்டு வருகின்றது. Ios அடிப்படையிலான சாதனங்கள்  ஆன்ட் ராய்டுக்கு போட்டியாக மிகவும் பிரபலமடைந்து வருகின்றது. உதாரணத்திற்கு ஆப்பிள் ஐபேட் அப்ளிகேசன்கள் இந்த மொழி கொண்டு உருவாக்கப்படுகின்றது.
8.      php.
Php வெப் சைட் உருவாக்கப்பயன்படும் மொழியாகும். இது சர்வர் சைட் வேலிடேட்மொழியாகும். பலத்த போட்டிகளுக்கு இடையும் இந்த மொழிக்கென்று தனி இடம் இருக்கின்றது.
9.      சி  ஷார்ப்.
இது மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் பொதுவான பயன்பாடுகள் பயன்பாடுகள் உருவாக்கப்பயன் படும் பொழியாகும். இது விண்டோஸ் அப்ளிகேசன், வெப் அப்ளிகேசன், மொபைல் அப்ளிகேசன் என  எல்லாத் துறைகளிலும் பயன்படுகின்றது.
10.  மேட்லேப்
இது ஸ்டேட்டிடிக்ஸ் அனாலிட்டிஸ் சார்ந்த மொழியாகும்.
இது கம்ப்யூட்டர் விசன் மற்றும் இமேஜ் பிராசசிங்க் துறையிலும் பயன்படுகின்றது.இது சைண்டிபிக் சிமுலேசன் உருவாக்கவும் பயன்படுகின்றது.
நன்றி.
முத்து கார்த்திகேயன் ,மதுரை.
contact : 91 96293 29142.
 






ads Udanz