Showing posts with label sql server. Show all posts
Showing posts with label sql server. Show all posts

Wednesday, November 20, 2019

Sqlserver group by statements.(sql சர்வர் குரூப் பை ஸ்டேட்மென்ட்ஸ்)



குரூப் பை ஸ்டேட்மென்ட்ஸ் ஆனது தேர்ந்தெடுக்கப்பட்ட ரோக்களின் சம்மரியை வழங்குகின்ற்து.
சான்றாக sql server-ல் ஒரு டேட்டா பேஸ் உருவாக்கி அதில் salarydetails என்றொரு டேபிள் உருவாக்கவும்.
அதில் பின் வருமாறு உள்ளீடு செய்யவும்.
மேலே உள்ள டேபிளில் மொத்த வருமானத்தை கணக்கிட பின் வருமாறு கட்டளை எழுத வேண்டும்.
  select sum(salary) from salaryDetails

வெளியீடு:
50400
இதில் அதிக பட்ச வ்ருமானத்தை கணக்கிட பின் வருமாறு கட்டளை எழுத வேண்டும்.
  select max(salary) from salaryDetails

வெளியீடு:
8800
குறைந்த பட்ச வருமானத்தைக் கணக்கிட பின் வருமாறு கட்டளை எழுத வேண்டும்.
  select min(salary) from salaryDetails


வெளியீடூ:
2800
சராசரி வருமானத்தைக் கணக்கிட பின் வருமாரு நிரல் எழுத வேண்டும்.
  select avg(salary) from salaryDetails


வெளியீடு:
5040
மொத்த ரோக்களை கணக்கிட பின் வருமாறு கட்டளை எழுத வேண்டும்.
  select count(id) from salaryDetails


வெளியீடு:
10
இதில் சம்பளத்தை கணக்கிடும் பொழுது ஒவ்வொரு நகர வாரியாக மொத்த சம்பளம் வேண்டும் என்றால் குரூப் பை கட்டளை எழுத வேண்டும்.
  select city, sum(salary) from salaryDetails group by city

வெளியீடு:

ஒவ்வொரு நகரத்திலும் பாலின வாரியாக சம்பளத்தைக் கணக்கிட பின் வருமாறு கட்டளை எழுத வேண்டும்
  select city,gender, sum(salary)as totalsalary from salaryDetails group by city,gender

மேலும் ஒவ்வொரு நகரத்திலும் உள்ள வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கையை சேர்தே கணக்கிட கீழ் வருமாறு எழுத வேண்டும்.
  select city,gender, sum(salary)as totalsalary , count(id) as [total employees] from salaryDetails group by city,gender

வெளியீடு:
இதில் குறிப்பிட்ட நகரத்தை மட்டும் கணக்கிட பின் வருமாறு கட்டளை எழுத வேண்டும்.
  select city,gender, sum(salary)as totalsalary , count(id) as [total employees] from salaryDetails where city='newyork' group by city,gender

குறிப்பிட்ட நகரத்தில் உள்ளவர்களை கணக்கிட பின் வருமாறும் கட்டளை எழுத வேண்டும்.
select city,gender, sum(salary)as totalsalary , count(id) as [total employees] from salaryDetails  group by city,gender
 having city='newyork'

இதில் வரும் வெளியீடும் மேற் கண்டவாறே இருக்கும்.

Where மற்றும் having வித்தியாசங்கள்.
Where ஆனது select, insert, update, delete என எல்லா வகையான கட்டளகளிலும் உபயோயிக்கலாம்.ஆனால் having ஆனது செலெக்ட் கமாண்டில் மட்டும் உபயோக்கிக்கலாம்.
Where ஆனது முதலில் ஃபில்டர் பண்ணி விட்டு அக்ரிகேட் செய்கின்றது. Having ஆனது அக்ரிகேட் செய்து விட்டு ஃபில்டெர் செய்கின்றது.
Where உடன் அக்ரிகேட் ஃபங்க்சன்கள் உபயோகிக்க முடியாது. Having உடன் அதை சேர்த்து பயன்படுத்தலாம்.
-நன்றி.
முத்து கார்த்திகேயன்,மதுரை.



ads Udanz

Saturday, October 13, 2018

ஜாயின்ஸ் இன் sql server.



இந்த கட்டுரையில் sql server –ல் கொரி எழுதும் பொழுது ஜாயின்ஸ்(joins) எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து பார்ப்போம்.
ஜாயின்களில் மொத்தம் நான்கு வகை உள்ளன.
1.   inner join

ஜாயின்ஸ் இன் sqlserver.
இந்த கட்டுரையில் sql server –ல் கொரி எழுதும் பொழுது ஜாயின்ஸ்(joins) எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து பார்ப்போம்.
ஜாயின்களில் மொத்தம் நான்கு வகை உள்ளன.
1.   inner join
2.   left join
3.   right join
4.   full join.

முதலில் tblEmp என்றொரு டேபிள் இருக்கின்றது.
இரண்டாவதாக tblDepartment என்றொரு டேபிள் இருக்கின்றது.
tblEmp டேபிளில் DepartmentId உள்ளது. அது எந்த டேபிள் என்ற டேட்டா tblDepartment டேபிளில் உள்ளது. எனவே இரண்டு டேபிளையும் இணைத்தால் தான் முழு டேட்டாவும் கிடைக்கும்.
1.inner join
இரண்டு டேபிளும் பொருந்தி வரும் டேட்டா மட்டுமே காண்பிக்கப்படும்.
Syntax:
SELECT columns
FROM table1
INNER JOIN table2
ON table1.column = table2.column;


select Name, gender, salary, DepartmentName from tblEmp inner join tblDepartment on tblEmp.DepartmentId= tblDepartment .Id ;

tblEmp டேபிளில் உள்ள karthi, kala இருவருடைய departmentId குறிப்பிடப்பட வில்லை. எனவே அதனுடன் பொருந்தி வராத இரண்டு ரோவும் வெளியீட்டில் இல்லை.
  

Left outer join.
1.   இரண்டு டேபிளிலும் பொருந்திவரும் தகவல்கள் மேலும் இடது பக்கம் உள்ள பொருந்தி வரா தகவல்கள் இடம் பெறும்.
Syntax:
SELECT columns
FROM table1
LEFT [OUTER] JOIN table2
ON table1.column = table2.column;


.
   select Name, gender, salary, DepartmentName from tblEmp left join tblDepartment on tblEmp.DepartmentId= tblDepartment .Id ;
வெளியீடு:
3.right join.
1.   இரண்டு டேபிளிலும் பொருந்திவரும் தகவல்கள் மேலும் வலது பக்கம் உள்ள பொருந்தி வரா தகவல்கள் இடம் பெறும்.
Syntax:
SELECT columns
FROM table1
RIGHT [OUTER] JOIN table2
ON table1.column = table2.column;

   select Name, gender, salary, DepartmentName from tblEmp right join tblDepartment on tblEmp.DepartmentId= tblDepartment .Id ;
வெளியீடு:
Full join
1.   இரண்டு டேபிளிலும் பொருந்திவரும் தகவல்கள் மேலும் இடது,வலது பக்கம் இரண்டிலும் உள்ள பொருந்தி வரா தகவல்கள் இடம் பெறும்.
Syntax:
SELECT columns
FROM table1
FULL [OUTER] JOIN table2
ON table1.column = table2.column;
select Name, gender, salary, DepartmentName from tblEmp full join tblDepartment on tblEmp.DepartmentId= tblDepartment .Id ;
வெளியீடு:


2. 

முத்து கார்த்திகேயன்,மதுரை.


ads Udanz