Showing posts with label tally. Show all posts
Showing posts with label tally. Show all posts

Wednesday, August 21, 2019

டேலி பேங்க் ரிகன்சிலியேசன்


டேலியில் நாம் நம்முடைய லெஜெரில்  பேங்க் சம்பந்தப்பட்ட வுவுச்சர்களை ஒரு தேதியில் குறிப்பிட்டிருப்போம். ஆனால் பேங்க் பாஸ் புக்கில் தேதி மாறியிருக்கும்.
உதாரணத்திற்கு ஒரு செக்கை பாங்கில் செலுத்தினோம் என்றால் அன்றைய தேதியில் பேங்க் அக்கவுண்டை டெபிட் செய்திருப்போம். ஆனால் பேங்க் புக்கில் என்று நம்முடைய செக் கொடுக்கப் பட்ட நாள் அல்லாமல் அது என்று பணமாக மாற்றப்பட்டுள்ளதோ அன்றைய தேதி இருக்கும்.
மேலும் நம் பணத்திற்கு வட்டி போட்டிருந்தாலோ, அல்லது ஏதேனும் கட்டணம் பிடிக்கப்பட்டிருந்தாலோ அது பேங்க் புக்கை பார்க்கும் போது தான் தெரிய வரும். அதாவது பாஸ் புக்கை பார்த்து நாம் சில எண்ட்ரிகளை வவுச்சரில் குறிப்பிட வேண்டியிருக்கும்.இதுவே பாங்க் ரிகன்சிலியேசன் எனப்படுகின்றது.
இப்பொழுது நாம் முதலில் நம்முடைய கம்பனியின் இருப்பை பார்ப்போம்.
Capital- 2,50,000.
Cash-1,00,000.
Bank-1, 50,000.
முதலில் டேலியில் நாம் புதிதாக ஒரு கம்பனி உருவாக்க வேண்டும்.
அதில் மேற்கண்ட லெட்ஜெர்களை உருவாக்க வேண்டும்.
அதற்கு
Gateway of tally->accounts info->ledger->single create என்பதன் மூலம் நாம் மூன்று லெட்ஜெர்களையும் உருவாக்க வேண்டும்.அதன் பேலன்ஸ் தொகை குறிப்பிட வேண்டும்.
இவற்றில் cash அக்கவுண்ட் ஆனது டிஃபால்டாக இருக்கும். நாம் அதை உருவாக்கத்தேவையில்லை.
லெட்ஜெரில் இருந்த படியே page up கீயை cash லெட்ஜெர் வரும் வரை அழுத்தி அந்த லெட்ஜெரில் தொகை 1,00,000 குறிப்பிட வேண்டும்.
டிரான்ஸ்சாக்சnகள்
ஏப்ரல்.
1.     டெலிபோன் ஏர்டெல் கம்பனிக்கு செலுத்தப்பட்டது   ₹ 500  ஆகும்.
2.     கமிசன் பெறப்பட்டது ₹5000.
5. சம்பளம் கொடுக்கப்பட்ட்து(செக்காக) ₹ 7500.
7.வாடகை செலுத்தப் பட்டது ₹5000.
8. வங்கியில் பணம் செலுத்தப்பட்டது ₹12000.
12.வியாபாரச் செலவு ₹ 15,000.
மேற்கண்ட வவுச்சர்களை உருவாக்கவும்.
இப்பொழுது
Gateway of tally->display-> day book சென்றால் பின் வருமாறு இருக்கும்.


மேற்கண்ட படத்தில் எல்லா தேதிகளுமே 1.4.2019 ஆக உள்ளதை கவனிக்கவும். நான் டேலி எஜுகேசன் வெர்சன் உபயோகிப்பதால் மாதத்தில் 1,2, 30 தேதிகளைத் தவிர வேறு தேதிகள் கொடுக்க முடியாது.

இப்பொழுது நம் பேங்க் புக்கை பார்ப்போம்.
April
 1.4.2019   Balance                                            1,50,000
2.4.2019    airtel                                              500
4.4.2019  interest                                            320
6.4.2019 salary                                                7500
7.4.2019 cash                                                10000
9.4.2019 eb charge                                      2500
15.4.2019 rent                                               5000
17.4.2019 cash                                           10000
இப்பொழுது
Gateway of tally-> display-> account books-> cash/bank a/c-bank a/c
April
சென்றால் கீழ் வருமாறு திரை இருக்கும்

இப்பொழுது f5 reconcile பட்டனை அழுத்தவும்.
திரை பின் வரும் படி இருக்கும்.

இதில் bank date என்பதில்  ஏர்டெல் தேதி 2.4.2019 என மாற்றி யுள்ளேன் .அதை போல் மற்ற தேதிகளையும் மாற்றவும்.
எல்லா தேதிகளையும் மாற்றிய பிறகு எண்டர் கொடுத்து வெளியேறவும்.
இப்பொழுது பாஸ் புக்கில் இருக்கும் சில குறிப்பிட்ட எண்ட்ரிகள் நம்மடைய லெட்ஜெரில் விடுபட்டு இருக்கும்.
அவற்றை வவுச்சர் என்ட்ரி செய்யவும்.
அவையாவன
4.4.2019 இன்டெரஸ்ட்     ₹320
7.4.2019  கேஷ்                      ₹10000
9.4.2019 eb                             ₹2,500

17.4.2019                                          ₹10000
ஆகியவை ஆகும் அவற்றிற்குறிய வவுச்சர் எண்ட்ரிகளை உருவாக்கவும்.
இப்பொழுது cash/bank book சென்று பார்த்தால் திரை பின் வருமாறு இருக்கும்.

இப்பொழுது f5 கீயை அழுத்தினால் திரை பின் வருமாறு இருக்கும்.

Bank date  என்பதில் தேதிகளை மாற்றவும்.
எல்லாவற்றையும் மாற்றிய பிறகு எண்டர் கொடுத்து வெளியேறவும்.
இப்பொழுது திரையில் f5 அழுத்தினால் பின் வருமாறு இருக்கும்.
அதில் commission received என்பது திரையில் இருக்கும். இது இந்த மாதம் பாஸ் புக்கில் இடம் பெற வில்லை. அடுத்த மாதம் இடம் பெறலாம்.
திரையில் கீழ் புறம் amount not reflected in bank ₹5000 என இருக்கும்.
இதுவே கடைசி நிலையாகும்.
நன்றி.
முத்து கார்த்திகேயன்,மதுரை.
 மதுரையில் டேலி கற்றுக் கொள்ள  பின் வரும் எண்ணை தொடர்பு கொள்ளவும்.
9629329142.























ads Udanz

Tuesday, October 30, 2018

டேலி கம்பனி உருவாக்கம். சில கேள்விகளும் பதில்களும்.



ஃபைனான்சியல் அக்கவுண்ட் மட்டும் நிர்வாகிப்பது எப்படி?
கம்பனி உருவாக்கத் திரையில் maintain என்பதில் Accounts only என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இப்பொழுது inventory options இருக்காது(உ-ம் stock item)
ஒரு வருடத்தின் தொடக்கத்திலேயே accounts only வேண்டுமா அல்லது accounts with inventory வேண்டுமா என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.இடையில் மாறுதல் கூடாது.
ஃபைனான்சியல் இயர் என்பது என்ன? எவ்வாறு செட் செய்வது?
ஃபைனான்சியல் இயர் என்பது 1 வருடம் ஆகும். இது பொதுவாக ஏப்ரல் 1 லிருந்து அதற்கடுத்த வருடம் மார்ச் 31 வரை இருக்கும். நாம் வேறு தேதி தேர்ந்த்டுத்துக் கொள்ளலாம்.
கமபனி பிரஃபைலை எவ்வாறு மாற்றியமைப்பது?
கேட் வே ஆஃப் டேலியிலிருந்து alt+f3 பட்டனை அழுத்தினால் company info மெனு வரும்.அதில் alter செலெக்ட் செய்து பிறகு கம்பனியை செலக்ட் செய்ய வேண்டும்.இப்பொழுது வரும் திரையில் வேண்டிய மாறுதல்களை செய்து கொள்ளலாம்.
கம்பனியை டெலீட் செய்வது எப்படி?
Alt+f3 பிரஸ் செய்து company info –திரையில் alter செலெக்ட் செய்து கம்பனி பெயரைத் தேர்ந்த்டுக்கவும். இப்பொழுது கம்பனி பிரஃபைல் ஸ்கிரீனில் இருந்த படி Alt+D பிரஸ் செய்யவும். கன்ஃபர்மேசன் மெனுவில் yes என்பதை தேர்ந்த்டுத்தால் கம்பனி டெலீட் ஆகி விடும்.
ஒரு கம்பனியை செலக்ட் மற்றும் ரிசெலக்ட் செய்வது எப்படி?
கேட் வே ஆஃப் டேலியிலிருந்து F1 கீயை அழுத்தவும். கம்பனி லிஸ்ட் வரும் அதில் இருந்து கம்பனி பெயரை தேர்ந்த்டுத்துக் கொள்ளலாம்.
ரிசெலெக்ட் செய்வதற்கு கேட் வே ஆஃப் டேலி ஸ்கிரீனில் இடது பக்கம் உள்ள கம்பனி லிஸ்டில் நமக்கு தேவையான கம்பனியைத் தேர்ந்த்டுத்துக் கொள்ளலாம். இது ஆக்டிவ் கம்பனி ஆகும். மேலும் இது போல்ட் எழுத்தாக இருக்கும்.
கம்பனி shut செய்வது எப்பட்?
கேட் வே ஆஃப் டேலியிலிருந்து alt+f1 கீயை அழுத்தி கம்பனி பெயரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இப்பொழுது இடது பக்கத் திரையில் கம்பனி பெயர் இருக்காது.
டேலி எஜுகேசனல் மோட் என்பது என்ன?
இதற்கு டேலி லைசன்ஸ் வாங்கத் தேவையில்லை. ஆனால் இது கட்டுப் படுத்தப் பட்ட வெர்சன் ஆகும். தேதிகளில் 1,2, 31 தவிர வேறு எந்த தேதியும்  பயன்படுத்த முடியாது. சில ஆப்சன்களும் இருக்காது. எனினும் கற்றுக் கொள்வதற்கு தேவையான எல்லா விசயங்களும் இருக்கின்றது.
டேலியின் தொடக்கத் திரையில் Alt+w மற்றும் alt+I கீயை அழுத்தி எஜுகேசனல் மோடில் வேலை செய்யலாம்.
எவ்வாறு டேட்டாவை பாதுகாப்பது?
டேலியில் இரு வகைகளில் டேட்டாவை பாதுகாக்கலாம்.
1.   Data Encryption
2.   Security control
Data Encryption.
இது டேட்டாவை நம்மைத் தவிர வேறு யாறும் பயன்படுத்த முடியாத படி என்கிரிப்சன் செய்கின்றது. இதற்கு tally vault என்று பெயர். கம்பனி உருவாக்கத்திரையில் பாஸ்வேர்டு கொடுத்து என்கிரிப்ட் செய்து கொள்ளலாம்.
Security control.
இது ஆதரைஸ்டு நபர்களை மட்டும்.அவர்களுக்கு டேலியை பயன்படுத்த அனுமதி கொடுக்க பயன்படுகின்றது. இது கம்பனி உருவாக்கத் திரையில் Use security control என்பதற்கு yes என்று கொடுக்கவும்.
மல்டி லைன் அட்ரஸ் கொடுப்பது எப்படி?
முகவரி கொடுக்கும் பொழுது ஒவ்வொரு லைனின் முடிவிலும் எண்டர் கீ அழுத்தி இன்புட் கொடுக்கலாம்.
உதாரணம்
M63, narmatha street
Ellis nagar
Madurai.
டெலிபோன் மற்றும் மொபைல் எண்களில் ஒன்றுக்கு மேற்பட்டவை கொடுக்கலாமா? எவ்வாறு?
கொடுக்கலாம். கமா கொடுத்து பிரித்தெடுத்துக் கொள்ளலாம்.
உ-ம்:
994419271, 96845321
ஒரு கம்பனியின் முகவரி, போன் நம்பர்,மொபைல் போன் நம்பர் கட்டாயம் கொடுக்க வேண்டுமா?
கட்டாயம் இல்லை. இது ஆப்சனல் தான்.
முத்து கார்த்திகேயன்,மதுரை.
 
‘

ads Udanz

Monday, August 6, 2018

டேலியில் அக்கவுண்டிங்க் வவுச்சர்.



டேலியில் எந்த ஒரு பரிவர்த்தணையும் முறைப்படி அதற்குரிய வவுச்சர் டைப்பில் பதியவேண்டும். அதை வைத்து டேலி சாப்ட்வேரே பிராப்பிட் & லாஸ் , பேலன்ஸ் சீட் முதலியவற்றை அதுவே ஆட்டோ ஜெனரேட் செய்யும்.
வவுச்சர் டைப்பின் வகைகள்:
1.   Contra
2.   Payment
3.   Receipt
4.   Journal
5.   Purchase
6.   Sales
7.   Debit note
8.   Credit note.
Contra:
இதில் புதிதாக ஒரு பேங்க் அக்கவுண்ட் தொடங்குதல், பணம் டெபாசிட் செய்தல், பணம் எடுத்தல், பேங்க் ஓடி (od) பெறுதல், பேங்க் ஓடி செலுத்தல்,
ஒரு பேங்க் அக்கவுண்டிலிருந்து இன்னொரு அக்கவுண்டிற்கு பணம் டிரான்ஸ்பர் செய்தல் முதலியவற்றை காண்ட்ரா வவுச்சரில் பதிவு  செய்யலாம்.
இதற்குறிய சார்ட் கட் கீ- f4.
Contra உதாரணங்கள்:
1.    வங்கியில் ரூ 7000 செலுத்தப்பட்ட்து.
dr: வங்கி கணக்கு 7000
(bank a/c)
cr  பணம்  (cash a/c)              7000
2.   ரூ 10000 வங்கி od பெறப்பட்டது.
 Dr: வங்கி கணக்கு( bank a/c) 10000.
  Cr: வங்கி o/d  (bank o/d a/c)          10000

3.   வங்கியிலிருந்து ரூ 2000 எடுக்கப்பட்டது.
Dr: பணம்(cash)    2000
Cr: வங்கி  (bank)        2000
4.   வங்கி od செலுத்தப்ப்பட்டது:
Dr: வங்கி o/d (bank o/d) 10000
Cr: வங்கி   (bank)      10000.

Payment:.
ஒரு சப்ளையருக்கு பணம் கொடுத்தல், சொத்து வாங்குதல், செலவுகள் அதாவது வாடகை, சம்பளம், மின்சாரக் கட்டணம், தொலைபேசி கட்டணம் முதலியவற்றை செலுத்தும் பொழுது பேமெண்ட் வவுச்சர் டைப்பில் பதிவு செய்ய வேண்டும். இதில் முக்கியமாக பணம் அல்லது பேங்க் அக்கவுண்ட் கிரெடிட் செய்யப்பட வேண்டும்.
இதற்குரிய சார்ட் கட் கீன் f5.
Payment உதாரணம்:
1.   தள்ளுபடி கொடுத்தது: ரூ 2500
Dr: தள்ளுபடி(indirect expenses) 2500
Cr: பணம் (cash)       2500
2.   சொந்த செலவிற்காக வங்கியிலிருந்து ரூ 7000 எடுக்கப்பட்டது:
Dr: Drawing(capital) 7000
Cr: பணம் (cash)    7000
3.   ரூ 20000 க்கு இயந்திரம் வாங்கப்பட்டது.
Dr: இயந்திரம்: (fixed assets) 20000
CR பணம் (cash a/c)        20000
4.   திரு கணேசிடமிருந்து ரூ 12000 கொடுக்கப்பட்டது
DR: கணேஸ்(sundry debtor)      12000
Cr: பணம்  (cash)            12000
5.   மின்சாரக் கட்டணம் ரூ 2000 செலுத்தப் பட்டது.
DR: மின்சாரக் கட்டணம் (Indirect expenses) 2000
CR: பணம்  (cash)                 2000.
மேலே உள்ள எல்லா உதாரணங்களிலும் பணம் கிரெடிட் செய்யப்பட்டுள்ளது. எல்லா பேமெண்டிலும் கட்டாயமாக பணம் அல்லது வங்கிக் கணக்கு கிரெடிட் செய்யப்பட வேண்டும்.
Receipt
கஸ்டமரிடமிருந்து பணம் பெறுதல், ஒரு பொருளை விற்கும் பொழுது தள்ளுபடி பெறுதல், பேங்க் வட்டி பெறுதல், கமிசன் பெறுதல் போன்ற வற்றை ரெசிப்ட் வவுச்சரில் பதிவு செய்தல் வேண்டும். இதில் முக்கியமாக
பணம் அல்லது வங்கிக் கணக்கு டெபிட் செய்யப்பட வேண்டும்.
இதற்குறிய சார்ட் கட் கீ:f6.
சான்று :
1.கூடுதல் முதலீடாக ரூ 2,00,0000 பெறப்பட்டது.
DR: பணம் (cash)2,00,000.
CR. முதலீடு (capital)      2,00,000.
2. வங்கியிடமிருந்து ரூ 3000 வட்டி பெறப் பட்டது.
DR: பணம் (cash)   3000
cr: வட்டிக் கணக்கு (indirect income)   3000
3. வங்கியில் ரூ 2,00,000 லோன் பெறப்பட்டது.
 Dr. வங்கி(bank)   2,00,000
Cr: வங்கி லோன் (loan  & Liability)     2,00,000.
4.வாடகை ரூ 7000 பெறப்பட்டது.
Dr: பணம் (cash)  7,000
CR: வாடகை கணக்கு(indirect income) 7,000
5.   இயந்திரம் ரூ 10000க்கு விற்கப் பட்டது.
Dr: பணம் (cash)10,000
Cr: இயந்திரம்(fixed assets)   10,000.
மேலே உள்ள எல்லா பதிவுகளிலும் பணம் அல்லது வங்கிக் கணக்கு டெபிட் செய்யப்பட்டுள்ளதை கவனிக்கவும்.

Journal:
இதில் அட்ஜஸ்ட்மெண்ட் என்ட்ரி அதாவது பொருட்கள் தேய்மானம், நிலுவையில் உள்ள சம்பளக் கணக்கு, முன் கூட்டியே செய்யப்பட்ட செலவு,
சொத்து கடன் கொடுத்து வாங்குதல் போன்றவற்றின் போது ஜெர்னல் டைப்பில் பதிவு செய்யலாம்.
இதற்குறிய சார்ட் கட் கீ f7.
சான்றுகள்.
1.இயந்திரம் தேய்மானம் ரூ 5000.
Dr: இயந்திர தேய்மானம்(indirct expenses) ரூ 5,000.
Cr: இயந்திரம்(fixed assets)                   5,000
2. முதலீடு மேலான வட்டி ரூ 2,000
Dr. முதலீட்டு வட்டி(indirect expenses)   2,000.
Cr. முதலீடு:  (capital)             2,000.
3. நிலுவையில் உள்ள சம்பளம்: ரூ 5000
Dr. சம்பளம் (indirect expenses) 5,000.
Cr: சம்பள நிலுவை(current liability)   5,000.
4. முன் கூட்டியே செலுத்தப்பட்ட தள்ளுபடி: ரூ 200.
Dr. முன் செலுத்தப்பட்ட தள்ளுபடி(current assets):200
Cr: தள்ளுபடி: (indirect expenses)       200


Purchase:
இது கடனுக்கு சரக்கு வாங்கினாலும் சரி அல்லது பணம் கொடுத்து சரக்கு வாங்கினாலும் சரி பர்சேஸ் டைப்பில் பதிவு செய்யப்பட வேண்டும்.
இதற்குறிய சார்ட் கட் கீ :F9.
சான்று:
1.   ரொக்கத்திற்கு கொள்முதல் செய்யப்பட்ட கணக்கு: 20,000.
Dr: கொள்முதல் கணக்கு:(purchase accounts)   20,000.
Cr: பணம்   (cash a/c)                    20,000.
2.   ரவியிடமிருந்து ரூ 50,000க்கு சரக்கு கொள்முதல் செய்யப்பட்டது
Dr: கொள்முதல் கணக்கு (purchase accounts)   50,000.
Cr: ரவி (sundry creditors)                          50,000.


Sales:
இது கடனுக்கு சரக்கு விற்றாலும் சரி அல்லது பணத்துக்கு விற்றாலும் சேல்ஸ் டைப்பில் பதிவு செய்யப் பட வேண்டும்.
இதற்குறிய சார்ட் கட் கீ: F8.
சான்று:
1.   ரொக்கத்திற்கு விற்கபட்ட சரக்கு: ரூ 30,000.
Dr: பணம்(cash a/c)    30,000.
Cr: விற்பனைக் கணக்கு (sales a/c) 30,000.
2.   ரமேஸ் என்பவற்கு கடனில் விற்கப்பட்ட சரக்கு ரூ 20,000.
Dr: ரமேஸ் (sundry debtor)   20,000.
Cr: விற்பனைக் கணக்கு (sales a/c)20,000.

Debit note:
இது வாங்கிய சரக்கு ஏதிலும் சேதாரம் இருந்தால் நாம் சப்ளையருக்கு திருப்பி அனுப்பும் பொழுது பதிவு செய்ய பயன் படுகின்றது.
சார்ட் கட் கீ: ctrl+f9.
1.   ரவிக்கு ரூ 400 மதிப்புள்ள சரக்கு திருப்பி அனுப்பபட்டது.
Dr: ரவி (sundry creditor)   400
Cr: கொள்முதல் திருப்பம்(purchase accounts) 400
Credit note:
இது நம்மிடமிருந்து சரக்கு வாங்கிய கஸ்டமர் சேதாரம் எனில் நமக்கு பொருளை திருப்பி  பெறும் பொழுது பதிவு செய்ய பயன்படுகின்றது.
சார்ட் கட் கீ: ctri+f8.
சான்று:
ரமேசிடமிருந்து ரூ 400 மதிப்புள்ள சரக்கு சேதாரம் திருப்பி பெறப்பட்டது.
Dr: விற்பணை திருப்பம்(sales account)   400.
CR: ரமேஸ்     (sundry debtor)             400
பின் குறிப்பு:
முதலில் gate way of tally –யில் இருந்து alt+f3 அழுத்தி company info மெனு செல்லவும். இங்கு  இங்கு create company அழுத்தி புதிதாக கம்பனி உருவாக்கிக் கொள்ளவும். பிறகு accounts info சென்று அங்கு ledger அழுத்தி பிறகு சிங்கிள் create செய்து ஒவ்வொரு லெட்ஜெர் ஆக உருவாக்கிக் கொள்ளவும். நான் மேலே உள்ள எல்லா சான்றுகளிலும் அடைப்பிக் குறிக்குள் எல்லா லெட்ஜெரும் எந்த க்ரூப் என குறிப்பிட்டு உள்ளேன்.
பிறகு accounting vouchers சென்று ஒவ்வொரு வவுச்சர் டைப்பிலும் வவுச்சர் உருவாக்கவும்.
மீண்டும் ஞாபகத்திற்காக ஒவ்வொன்றின் சார்ட் கட் கீ மட்டும் மீண்டும்:
1.   Contra F4
2.   Payment F5
3.   Receipt F6
4.   Journal F7.
5.   Purchase F9
6.   Sales F8
7.   Debit note CTRL+F9
8.   Credit note CTRL+F8.
Debit note , credit note முன் கூட்டியே எனேபிள் ஆக இருக்காது.  F11 accounting voucher சென்று அங்கு Enable debit and credit note என்பதிற்கு yes கொடுக்கவும். அதே போல் சேல்ஸ் மற்றும் பர்ச்சேஸ் வவுச்சரில் ctrl+V அழுத்தி டேட்டா பதிவு செய்யவும்.
       -முத்து கார்த்திகேயன்,மதுரை.

ads Udanz