Showing posts with label oops. Show all posts
Showing posts with label oops. Show all posts

Thursday, January 2, 2020

ஜாவா பாடம்-2 பகுதி-4


ஊப்ஸ்(oops) ஆனது பின் வரும் அம்சங்களைக் கொண்டுள்ளது.
1.      என்கேப்சுலேசன்
2.      அப்ஸ்ட்ராக்சன்
3.      இன்ஹெரிடன்ஸ்
4.      பாலிமார்பிசம்.
என்கேப்சுலேசன்.
கடை நிலை பயனருக்கு தெரிய தேவையில்லாவற்றை அவரிடம் இருந்து மறைப்பதே ஆகும்.
ஆக்சஸ் ஆனது தேவைப்படுவன்வற்றுக்கே வழங்கபடுகின்றது.இதை இன்ஃபர்மேசன் ஹைடிங்க் என்றும் அழைக்கலாம்.உதாரணத்திற்கு ஒரு டிவியை நீங்கள் பயம்படுத்த விரும்பினால் அதன் ஆன் மற்றும் ஆஃப் பட்டங்களை பயனர் அழுத்தினா;ல் போதும். இன்டெர்னல் ஆக ஒரு டிவி ஆனது பட்டனை அழுத்தியவுடன் என்னென நடக்கின்றது என கடைநிலை பயனருக்கு தெரிய வேண்டுயதில்லை.
அப்ஸ்ட்ராக்சன்.
முக்கியமற்ற தகவல்களை கண்டுகொள்ளாமல் முக்கியமான தகவல்களில் மற்றும் கவனம் கொள்ளுதலே அப்ஸ்ட்ராக்சன் ஆகும்.
இன் ஹெரிடன்ஸ்
ஒரு கிளாஸின் ஃபங்க்சனாலிட்டியை நீட்டுவிப்பது அதாவது எக்ஸ்டெண்ட் செய்வதே இன் ஹெரிடன்ஸ் ஆகும்.
அடிப்படை கிளாஸில் சில பண்புகளும் , மெத்தட்களும் இருக்கலாம். அதை இன் ஹெரிட் செய்யும் கிளாஸில் எதையும் மீண்டும் எழுதாமல் கூடுதலாக எது தேவையோ அதை மட்டும் சேர்த்துக் கொள்ளுதல் ஆகும்.
பாலிமார்பிசம்.
பாலிமார்பிசம் என்பது இரு லத்தீன் வார்த்தைகளின் மொத்தமாகும் பாலி என்றால் நிறைய என்றும் மார்ப் என்றால் ஃபார்ம்ஸ் ஆகும்.
ஒரு பொருளானது ஒன்றுக்கு மேற்பட்ட வடிவம் எடுப்பதே பாலிமார்பிசம் ஆகும். ஒரு நபர் வெவ்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு ரோல் செய்யலாம். அதே போன்று ஒரு கிளாசோ அல்லது மெத்தடோ வெவ்வேறு இடத்தில் வெவ்வேறு மாதிரியாக செயல்படுதலே பாலிமார்பிசம் எனப்படும்.


ads Udanz

Tuesday, December 31, 2019

ஜாவா பாடம் -2 பகுதி-3


ஒரு கிளாஸ் ஆனது ஒரு ஆப்ஜெக்ட் அல்லது ஒரு குரூப் ஆஃப்  ஆப்ஜெக்டின் அமைப்பு, பிஹேவியர் ஆகியவற்றை டிஃபைன் செய்கின்றது.
ஆப்ஜெக்ட்கள் ஆனது ஆப்ஜெக்ட் ஒரியண்டட் புரோகிராமிங்கின் அடிப்படையாக விளங்குகின்றது.
ஒரு ஆப்ஜெக்ட் ஆனது பின் வரும் பண்புகளைக்  கொண்டுள்ளது.
1.ஸ்டேட்(state)
ஒரு ஆப்ஜெக்டின் ஸ்டேட் ஆனது ஒரு ஆப்ஜெட்டின் பண்பு மற்றும் அந்த பண்பின் மதிப்பு ஆகியவற்றைக் குறிக்கின்றது.ஒரு ஆன் லைன் வாணிகத்தில் ஒரு புத்தகம் ஆர்டர் செய்தால் அதன் பக்கம், விலை போன்றவை பண்புகளாக அமையலாம்.
2.பிஹேவியர்
ஒரு ஆப்ஜெக்ட் ஆனது அதன் தன்மையை ஒரு கால அடிப்படையில் மாற்றிக் கொள்கின்றது.சான்றாக ஒரு புத்தகம் ஆன்லைனில் விற்பனைக்கு உள்ளது என்பதில் இருந்து விற்று விட்டதாக மாறலாம்.ஒரு மாற்றப்பட ஸ்டேட்டே பிஹேவியர் ஆகும்.
3.ஐடென்டிட்டி(identity)
ஒவ்வொரு ஆப்ஜெக்டும் யுனிக் ஆக விளங்கும் வகையில் ஒரு ஐடென்டிட்டியை கொண்டுள்ளது. சான்றாக ஒரு புத்தகத்தின் பக்கங்கள் , பெயர் போன்றவை ஒன்றாக இருந்தாலும் அதன் எண் யுனிக் ஆக இருக்கும்.

ஒரு ஆப்ஜெக்ட் ஆனது ஒரு கிளாஸின் மெம்பர் ஆகும். ஆப்ஜெக்ட் ஒரியண்டட் மெதடாலஜி என்பது டேட்டா மற்றும் மெத்தடுகளைக் கொண்டுள்ளது. டேட்டா ஆனது மெத்தடின் மூலம் ஆக்சஸ் செய்யப்படுகின்றது.
-தொடரும்.



ads Udanz

Thursday, December 12, 2019

ஜாவா பாடம் -2 பகுதி-2



ஆப்ஜெக்ட் ஒரியண்டட் ப்ரோகிராமிங்க் பயன்பாடுகள்.

பிஸினஸ் மேனேஜ்மென்ட், ஹோம் கம்ப்யூட்டிங்க், அக்கவுண்ட்ஸ் மேமேஜ்மென்ட் போன்ற வெவ்வேறு பகுதிகளில் ஆப்ஜெக்ட் ஒரியண்டட் ப்ரோக்ராமிங்க் பயன்பாடுகளை உருவாக்கப் பயன்படுகின்றது.
இவை CUI கேரக்டர் யூசர் இன்டெர்ஃபேஸ் அல்லது GUI கிராபிக்கள் யூசர் இன்டெர்ஃபேஸ் பயன்பாடுகளாக அமைகின்றன.

கேரக்டர் யூசர் இன்டெர்ஃபேஸ் பயன்பாடுகள்.

CUI என்பது கம்ப்யூட்டரிடம் நாம் தொடர்பு கொள்ளக் கூடிய வகையில் இன்டெர்ஃபேஸை வழங்குகின்றது. இதில் கட்டளைகளை கேரக்டர் வடிவில் டைப் செய்து கம்யூட்டரிடம் தொடர்பு கொள்கின்றோம்.
இது நீளமானது ,மற்றும் சிக்கலானது.இந்த முறையில் கட்டளைகளை நாம் மனப்பாடமாக அறிந்திருக்க வேண்டியிருக்கின்றது.இதனால் இது யூசர் ஃப்ரெண்ட்லி கிடையாது.

C++ கிராப்பிகள் யூசர் அப்ளிகேசன்.

C++ ஒரு ஆப்ஜெக்ட் ஒரியண்டட் ப்ரோகிராமிங்க் மொழியாகும்.இதை பயன்படுத்தி கிராப்பிகள் யூசர் இன்டெர்ஃபேஸ் கொண்ட பயன்பாடுகளை உருவாக்கலாம். C++ பயன்படுத்தி பேங்கிங்க் சாஃப்ட்வேர், இன்வென்டரி கண்ட் ரோல்,பே ரோல் சிஸ்டம்ஸ் போன்றவற்றை உருவாக்கலாம்.

கிராப்பிகள் யூசர் இன்டெர்ஃபேஸ் அடிப்படையிலான பயன்பாடுகள்.

GUI என்பது கம்ப்யூட்டரிடம் டெக்ஸ்ட் உடன் மற்ற விசுவல் காம்பனண்ட்ஸ் சான்றாக டெக்ஸ்ட் பாக்ஸ், லேபல், பட்டன், லிஸ்ட் பாக்ஸ், காம்போ பாக்ஸ் ஆகியவைகள் மூலம் கம்ப்யூட்டரிடம் தொடர்பு கொள்ள வழிவகுக்கின்றது. இவை விண்டோஸ் மற்றும் லினக்ஸ் ஆப்பரேடிங்க் சிஸ்டத்தில் உருவாக்கப்படுகின்றது.

கம்ப்யூட்டர் எய்டட் டெசைனிங்க், / மேனுஃபேக்சரிங்க்.

OOPS பயன்படுத்தி கம்ப்யூட்டர்  எய்டட் டெசைனிங்க்,(CAD) கம்ப்யூட்டர் எய்டட் மேனுஃபேக்சரிங்க் (CAM) போன்ற சாஃப்வேர்களை உருவாக்கலாம்.

கேம்ஸ்

அட்வென்சர் கேம்ஸ், ஸ்போர்ட்ஸ் கேம்ஸ், ஸ்பேஸ் கேம்ஸ் போன்ற கம்ப்யூட்ட்டர் கேம்ஸ்களை OOP பயன்படுத்தி உருவாக்கலாம்.இதில் வரும் நில வழிகள், கட்டிடம்கள்,வாகனங்கள் ஆகியவை ரியல் வேர்ல்டு சார்ந்தவை மற்றும் ஆப்ஜெக்டுகளாகும்.
-தொடரும்




ads Udanz