Showing posts with label cloud computing. Show all posts
Showing posts with label cloud computing. Show all posts

Sunday, August 4, 2019

பிக் டேட்டாவும் கிளவுட் கம்ப்யூட்டிங்கும்.



பிக் டேட்டா ஆனது டேட்டா சேமிக்கவும் செயல்படுத்தவும் பயன்படுகின்றது. கிளவுட் கம்ப்யூட்டிங்க் ஆனது நம்பகக்கூடிய, அனுகக்கூடிய, பல்மடங்கு பெருகக்கூடிய செயல்பாடுகளை பிக்டேட்டாவுக்கு தருகின்றது. பிக் டேட்டாவும் கிளவுடும் ஒன்றுக்கொன்று பொருத்தமானது.பிக்டேட்டாவானது வெவ்வேறு தொழில்நுட்பத்திலிருந்து உருவாகிய (உதாரணத்திற்க்கு சென்சார்ஸ், ஸ்கேனர்ஸ், மொபைல் போன், இன்டெர்நெட், வீடியோ என்று பல்வேறு வ்கையானதிலிருந்து ) டேட்டாவை பிராசஸ் செய்கின்றது. பிக் டேட்டாவின் விரைவான வளர்ச்சியானது ஒரு பிரச்சனையாக உள்ளது. அதற்கு கிளவுட் தொழில் நுட்பமானது தீர்வு தருகின்றாது.
கிளவுட் கம்ப்யூடிங்க் ஆனது மிகப் பெரிய அளவு டேட்டாவை சேமிப்பதற்கு ஏற்றார்போல் விரிவடைகின்றது. அதே நேரத்தில் டேட்டாவை பிரித்து வெவ்வேறு இடங்களில் சேமிக்கின்றது. கிளவுட் கம்ப்யூட்டிங்க் ஆனது  பிக் டேட்டாவிற்க்கு ஏற்புடையதாக இருக்கின்றது.
பிக் டேட்டாவானது டேட்டாவை சேமிக்க நினைவகத்தை விரிவாக்கம் செய்யக்கூடிய தேவையை ஏற்படுத்திகின்றது. கிளவுட் தொழில்நுட்பமானது வெர்ச்சுவல் மெசின் மூலம் இதற்கு  வசதியை தருகின்றது.பிக் டேட்டாவை பயன்படுத்த கிளவுட் கம்ப்யூட்டிங்க் ஆனது தன் என்விரான்மெண்டை மாற்ற வேண்டிய தேவைய ஏற்படுத்திகின்றது.
பிக் டேட்டாவும் கிள்விட் கம்ப்யூட்டிங்கும் ஐடி தொழில் நுட்ப வளர்ச்சியில் முக்கியமான நிலைகள் ஆகும். தகவல் பிரைவசி மற்றும் செக்யூரிட்டி இவை இரண்டும் கிளவுட் கம்ப்யூடிட்டிங்கிற்கு அச்சுறுத்தல்களாக உள்ளன.கிளவுட் கம்ப்யூட்டிங்கின் ஓபன் என்விரான்மெண்டும் மட்டுப்படுத்தப்ப்ட்ட பயனர் கன்ட்ரோல்களும்
தான் இதற்கு காரணம்.
பிக் டேட்டாவை கிளவுட் கம்ப்யூடிங்கில் பயன்படுத்துவதால் நிறைய பயன்கள் உள்ளன.
மேம்படுத்தப்பட்ட் ஆய்வு
கிளவுட் கம்ப்யூடிங்கின் தொழில் நுட்ப வளர்ச்சியானது பிக் டேட்டா ஆய்விற்க்கு பயன் தருகின்றது. எனவே நிறுவனங்கள் கிளவுட் கம்ப்யூட்டிங்கை பிக் டேட்டாவிற்கு உபயோகிக்கின்றது. மேலும் கிளவுட் தொழில் நுட்பமானது வேவ்வேறு ரிசோர்ஸ்களில் இருந்து பெறப்பட்ட டேட்டாவை ஒன்றினைக்கின்றது.
எளிமையான கட்டமைப்பு:
பிக் டேட்டாவானது மிகப் பெரிய அளவில் டேட்டாவை சேமிப்பதால் வழக்கமான கட்டமைப்பு இதற்கு போதாது.பிக் டேட்டா ஆய்வு என்பது வழக்கமான கட்டமைப்பில் கடினமான பணியாகும். கிளவுட் கம்ப்யூட்ட்ங்க் ஆனது தேவைப்பட்டால் பெரியதாகக்கொடிய கட்டமைப்பைக் கொண்டிருப்பதால் பிக் டேட்டாவிற்க்கு ஏற்புடையதாய் உள்ளது.
விலை குறைவு.
பொதுவாக்வே கிளவுட் கம்ப்யூட்டிங்க் ஆனது விலை குறைவான ஒன்றாக விளங்குகின்றது. பிக் டேட்டா மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங்க் இரண்டுமே எண்டர் பிரைஸ் பயன்பாட்டிற்க்கு பயன் தருகின்றது.
பாதுகாப்பு.
பாதுகாப்பு மற்றும் பிரைவசி இரண்டும் முக்கியமான ஒன்றாய் இருக்கின்றது. ஏனெனில் கிளவுட் கம்ப்யூட்டிங்க் ஆனது ஓபன் என்விரான்மெண்ட்டாய் அமைகின்றது. உங்கள் பயன்பாட்டை கிளவிவுட்டில் ஹோஸ்ட் செய்யும் பொழுது   அதன் திறந்த நிலை சூழலும் ,மட்டுப்படுத்தப்பட்ட பயனர் கன்ட்ரோலும் அதன் பாதுகாப்பை முகியமான ஒன்றாய் மாற்றுகின்றது. இதற்கு தற்போது மீள் தன்மை கூடிய கட்டமைப்பு தீர்வு தருகின்றது
கிளவுட் கம்ப்யூட்டிங்கும் பிக் டேட்டாவும் ஒன்றினைந்த டிஸ்ட்ரிபியூட்டட் தொழில் நுட்பமாய் உள்ளது. பிக் டேட்டாவின் வளர்ச்சியும் அதன் தேவைகளும் கிளவுட் கம்யூட்டின் வளர்ச்சிக்கு காரணமாய் உள்ளன.பிக் டேட்டா பொருளையும் கிளவுட் கம்ப்யூட்ட்ங்க் அதன் கண்டைனரையும் பிரதிபலிக்கின்றது.கிளவுட் கம்ப்யூட்டிங்க், பிக் டேட்டா இரண்டுமே மிக விரைவான வளர்ச்சி கொண்டு வருகின்றது.
நன்றி
முத்து கார்த்திகேயன் ,மதுரை.


ads Udanz

Saturday, April 27, 2019

கிளவுட் கம்ப்யூட்டிங்க் அடிப்படைகள்-2.



கிளவுட் கம்ப்யூட்டிங்கில் நிறைய மாடல்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும்  ஒவ்வொரு  வகையான சர்வீஸ்களை தருகின்றன.
அவற்றின் வகைகள்.
·       IaaS
·       PaaS
·       SaaS
Infrastructure as a Service.
இது தான் இருப்பதிலேயே ஃப்லெக்சிபிள் மாடல் ஆகும். ஹார்டுவேரடு இன்ஃப்ரா ஸ்ட்ரக்சரை சர்வீசாக பெறுகின்றோம்.
ஹார்டுவேரை நாம் பணம் கொடுத்து வாங்க வேண்டாம்,பதிலாக  அவற்றை வாடகைக்கு பெறுகின்றோம்.
இதில் சரியாக ஃபங்க்சன் ஆவதற்கு கிளவுட் ப்ரவைடெர், கிளவுட் பயனர் இருவருமே பொறுப்பேற்க வேண்டும்.
எப்பொழுது நீங்கள் பணம் கொடுத்து ஹார்டு வேரை வாங்க முடியாதோ அப்பொழுது நீங்கள் இந்த சர்வீசை பயன்படுத்தலாம். ஹார்டுவேர்  வாங்குவதை விட இது குறைந்த விலையாகும். எவ்வளவு ஸ்டோரேஜ் தேவைப் படும் என்பதை நீங்கள் முன் கூட்டியே கணிக்க இயலாத போது நீங்கள் இந்த சர்வீசை பயன்படுத்தலாம்.
நீங்கள் விரைவாக வளர்ந்து வரும் கம்பனி என்றால் இதை பயன்படுத்தலாம், நீங்கள் எவ்வளவு பயன்படுத்துகின்றீர்களோ அதற்கு மட்டுமே பணம் செலுத்துகின்றீர்கள்.
Plarform as a service.
Paas ஆனது உங்கள் ப்ராஜெக்டை பில்ட் செய்து, டெஸ்ட் செய்து, டிப்லாய் செய்ய பயன்படுகின்றது.உதாரணத்திற்கு நீங்கள் ஒரு வெப் அப்ளிகேசனை டிபிலாய் செய்வதற்கு ஆபரேட்டிங்க் சிஸ்டம், சர்வர், os அப்டேட் முதலியவற்றை சொந்தமாக கொண்டிருக்க தேவையில்லை.
இதை பொறுத்தவரை பயனர் சர்வரையோ , இன்ஃப்ராஸ்ட்ரக்சரையோ மேனேஜ் செய்ய தேவையில்லை.
IAAS போலவே இதுவும் சர்வர், ஸ்டோரேஜ் மற்றும் நெட்வொர்கிங்கை தருகின்றது ஆனால் மேலும் மிடில் வேர் டெவெலப்மென்ட் டூல், பிஸினஸ் இன்டெலிஜென்ட் டூல்கள் , டேட்டா பேஸ் மேனேஜ்மென்ட் ஆகியவற்றையும் தருகின்றது.
இது பயன்படுத்த எளிதாகும்.
Software as a service.
சாஃப்ட்வேர் ஆனது மையமாக ஹோஸ்ட் செய்ய்ப்பட்டு பயனர்களுக்கு வாடகைக்கு வழங்கப்படுகின்றது. எல்லா கஸ்டமர்களும் பொதுவான ஒரே வெர்சனை பயன்படுத்துவார்கள். இதற்கு மாதந்திரமோ அல்லது ஒரு வருடத்திற்கு உண்டான தொகையை செலுத்த வேண்டியிருக்கும். .
உதாரணமாக Dropbox, Slack, GoToMeeting, Google Drive
ஆகியவற்றை கூறலாம்.
நன்றி
முத்து கார்த்திகேயன், மதுரை.
TO LEARN COURSES LIKE C,C++, JAVA, DOTNET, PYTHON, PHP, WEB DESIGNING, MS-OFFICE, TALLY CONTACT:96293 29142
 
ads Udanz

Friday, April 26, 2019

கிளவுட் கம்ப்யூட்டிங்க் அடிப்படைகள் பகுதி-1



            இந்த கட்டுரையில் கிளவுட் கம்ப்யூட்டிங்க் அடிப்படை குறித்து காண இருக்கின்றோம்.
செர்வர், சேமிப்பகம்,டேட்டாபேஸ், நெட்வொர்கிங்க், சாஃப்ட்வேர் முதலான கணினி சர்வீஸ்களை வழங்குவதே  கிளவுட் கம்ப்யூட்டிங்க் எனப்படுகின்றது.
அதாவது மற்றொரு நிறுவனத்தின் சேமிப்பகம்,சிபியு சைக்கிள்  போன்றவற்றை நமக்கு வாடகைக்கு வழங்குவதே கிளவுட் கம்ப்யூட்டிங் எனப்படும்.
அவ்வாறு நாம்  நம்முடைய சொந்த ரிசோர்ஸ்களை பயன்படுத்தி விட்டு அதற்கான வாடகையை வழங்குவோம்.
வெவ்வேறு  நிறுவனங்கள் நிறைய இந்த சர்வீஸ்களை வழங்குகின்றது. உதாரணம்:மைக்ரோசாஃப்ட், அமேசான்,கூகிள்,ஐபிஎம் கிளவுட் போன்ற நிறுவனங்கள் ஆகும்.

கிளவுட் கம்ப்யூட்டிங்க்  வகைகள்.

இது சம்பந்தப்பட்ட தேவைகள் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் மாறுபடுகின்றது. எனவே 3 வகையான கிளவுட் டிபிளாய்மெண்ட் மாடல்கள் உள்ளது.

பப்ளிக் கிளவுட்:

இதில் ஹார்ட்வேர், சாஃப்ட்வேர் எதுவுமே நாம் வைத்திருக்க தேவையில்லை.  அதை நாம் நேரடியாக  நாம்  மேனேஜ் செய்வதில்லை.
சிபியு, ஸ்டோரேஜ் எல்லாமே  கிளவுட் வழங்குகின்றது. மைக்ரோசாஃப்ட் அஷூர் பப்ளிக் கிளவுடிற்க்கு உதாரணம் ஆகும்
இந்த சர்வீஸ்களை நாம் வெப் அடிப்படையிலான அடிப்ப்டையில் மேனேஜ்  செய்கின்றோம்.

நண்மைகள்:

·         தனியாக சர்வர் வாங்க தேவையில்லை
·         எவ்வளவு பயன்படுத்துகின்றோமோ அதற்கு மட்டும் பணம் கட்டுகின்றோம்.
·         பெரிதாக தொழில்நுட்ப அறிவு தேவையில்லை.

தீமைகள்:

·         இதன் பெர்பார்மென்ஸ் இன்டெர்நெட் கனக்டிவிட்டியை சார்ந்தது,.
·         இதன் பிஸிக்கல் லெவல் கண்ட்ரோல் கிளவுட்  சர்வீஸ் வழங்குனர் கையில் உள்ளது.

பிரைவேட் கிளவுட்

டேட்டா பாதுகாப்பு, டேட்டா ப்ரைவசி தேவைப்படும் பொழுது நாம் பிரைவேட் கம்ப்யூட்டிங்கை பயன்படுத்துகின்றோம். எனினும் இதை பிரைவேட் ஆக வழங்குவதற்கு  நிறைய பணம் செலுத்த வேண்டும்.

ஒரு கம்பனியின் டேட்டாவை  பப்ளிக் ஆக வைக்க இயலாத பட்சத்தில் பிரைவேட் கிளவுட் பயன்படுகின்றது. எனவே இது  குறிப்பிட்ட நிறுவனம் மட்டுமே ஒரு சர்வீஸை பயன்படுத்திகின்றது.

நண்மைகள்:

·         டேட்டா பாதுகாப்பு ஏனெனில் குறிப்பிட்ட் நிறுவனம் மட்டுமே பயன்படுத்த முடியும்.
·         தகவல் மேல் நம் கட்டுபாடு உள்ளது.
·         சேமிப்பகம், நெட்வொர்க் காம்பண்ட்கள் ஆகியவை கஸ்டமைசபிள் ஆகும்.

தீமைகள்
·         முதலீட்டு செலவு
·         கூடுதல் தொழில் நுட்ப அறிவு தேவைப்படுகின்றது.

ஹைபிரிட் கிளவுட்

இது பப்ளிக் மற்றும் பிரைவேட் இரண்டையும் சேர்ந்தது ஆகும்.
நாம் வெப்சைட்டை பப்ளிக் கிளவுட்டில் வைத்துவிட்டு டேட்டாபேசை ப்ரைவேட் கிளவுட்டில் வைத்து விடலாம்.
நாம் நம்முடைய பழைய ஹார்டுவேரில் சில பயன்பாடுகளை இயக்க முடியாத பொழுது அவற்றை மட்டும் பப்ளிக் கம்ப்யூட்டிங்கில் பயன்படுத்தலாம்.
 நண்மைகள்:
·         பழைய ஹார்டுவேரோ அல்லது பழைய ஆபரேட்டிங்க் சிஸ்டமோ பயன்படுத்துவர்களுக்கு பயன்படுகின்றது.
·         எது பிரைவே ஆக இருக்க வேண்டும் ,எது பப்ளிக் ஆக இருக்க வேண்டுமென்பது நம்முடைய கட்டுப்பாட்டில் உள்ளது.
தீமைகள்.
·         அதிக பணச்செலவு
·         மேனேஜ்மெண்ட் சிக்கல்.
நன்றி.
முத்து  கார்த்திகேயன்,மதுரை.
 TO LEARN COURSES LIKE C,C++, JAVA, DOTNET, PYTHON, PHP, WEB DESIGNING, MS-OFFICE, TALLY CONTACT:96293 29142

ads Udanz