Introduction to DBMS. Oracle video 1st part
Showing posts with label RDBMS. Show all posts
Showing posts with label RDBMS. Show all posts
Tuesday, December 21, 2021
Sunday, July 21, 2019
RDBMS –என்பது என்ன? பகுதி-2
SQL மற்றும் ரிலேசனல் டேட்டாபேஸஸ்.
SQL என்பது Structured query language ஆகும். இது டேட்டாவை பெற,
அப்டேட் செய்ய, டெலீட் செய்ய பயன்படுகின்றது.sql query ஆனது sql ஸ்டேட்மென்ட்ஸ் எனவும்
sql கமாண்ட்ஸ் எனவும் அறியப்படுகின்றது.
Sqlஆனது DML கமாண்ட்ஸ் அதாவது Data manipulation commands என்பத
தருகின்றது. அதாவது இன்செர்ட், அப்டேட், டெலீட் ஆகியவையாகும்.
DDL COMMANDS(Data definition language) அதாவது ஒரு டேபிள் அல்லது
டேட்டா பேஸை உருவாக்க, அதில் மாற்றம் செய்ய பயன் படுகின்றது.
DCL COMMANDS(Data control language) என்பது டேடாவின் மீது பயனருக்கு
என்னென்ன அனுமதி தரலாம் என்பதற்கு பயன்படுகின்றது. உதாரணம் grand, revoke ஆகியவை.
DQL(Data query language) என்பது நாம் டேட்டாவை நாம் விரும்பிய
வண்ணம் ரிட்ரிவை செய்ய பயன்படுகின்றது. உதாரணம் select கமாண்ட்.
நூற்றுக்கும் மேற்பட்ட RDBMS இருக்கின்றன. அவற்றில் முக்கியமான
10 டேட்டா பேஸஸ் லிஸ்ட்.
- Oracle
- MySQL
- SQL Server
- PostgreSQL
- IBM DB2
- Microsoft Access
- SQLite
- MariaDB
- Informix
- Azure SQL
Oracle:
இது ஆரக்கிள் கார்ப்பரசனால் உருவாக்கப்பட்ட்து. இது மிகவும் பிரபலமான
டேட்டா பேஸ் ஆகும்.இது RDBMS ஆக மட்டுமல்லாமல் Cloud, document storage, graphDBMS
போன்றவையாகவும் பயன்படுகின்றது.ஆரக்கிள் தற்பொழுது டேட்டா ஆனது intelligent, self
managed ஆக இருக்கும் என்று அறிவித்துள்ளது.
ஒரு RDBMS ஆனது user defined types, inheritance,
polymorphism போன்ற oops கருத்துக்களை நடைமுறைப் படுத்தினால் அது object oriented
RDBMS என அறியப்படும். ஆரக்கிள் ஒரு object oriented RDBMS ஆகும்.
இதன் லேட்டஸ்ட் வெர்சன் 18C ஆகும்.
MYSQL
இது மிகவும் பிரபலமான ஓபன் சோர்ஸ் டேட்டாபேஸ் ஆகும்.
இது ஒரு டேட்டாபேஸ் ஆகும்.
இது ரிலேசனல் டேட்டா பேஸ் ஆகும்.
இது ஓபன் சோர்ஸ் ஆகும்.
இது விரைவானது மற்றும் நம்பகத் தன்மையுடையது ஆகும்.
இது கிளையண்ட்-சர்வர் அல்லது எம்பட்டட் சிஸ்டம் போன்றவற்றில்
பயன்படுகின்றது.
SQLSERVER,
இது மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தை சேர்ந்ததாகும். முதலில் 1989-ல்
உருவாக்கப் பட்டது. இது C,C++ மொழிகளால் எழுதப்பட்டது.
இதம் தற்போதைய வெர்சன் SQLSERVER 2019 ஆகும்.
இதுவும் ரிலேசனல் டேட்டாபேஸ் ஆகும்.
AZURE SQL DATABASE என்பது கிளவுட் அடிப்ப்டையிலான SQLSERVER
நடைமுறைப்படுத்தல் ஆகும்.
SQL DEVELOPER EDITION மற்றும் SQL ENTERPRISE EDITION இரண்டும்
ஒரே மாதிரி தான் எனினும் SQL DEVELOPER EDITION ஆனது ஒரே ஒரு Lisence கொண்டதாகும்.
PostgreSQL:
இது மிகவும் திறன் வாய்ந்த்தாகும்.
இது ஓபன் சோர்ஸ் ஆகும்.
இது ரிலேசனல் டேட்டா பேஸ் ஆகும்.
PostgreSQL ஆனது அதன் ஆர்க்கி டெக்சர், ரிலையபிளிட்டி, ரோபஸ்ட்
ஆகியவற்றிற்க்கு பேர் வாய்ந்ததாகும்.
IBMDB2.
இது linux, unix, windows முதலிய பிளாட்ஃபார்மில் இயங்குகின்றது.
இதன் முக்கிய அம்சங்கள்.
Ø இன் மெமரி
டெக்னாலஜி.
Ø அட்வான்ஸ்டு
மேனேஜ்மெண்ட்.
Ø டெவெலப்மெண்ட்
டூல்ஸ்
Ø ஸ்டோரேஜ்
ஆப்டிமைசேசன்.
Ø வொர்க்
லோட் மேனேஜ்மெண்ட்
ஆகியவையாகும்.
SQLite.
இது c language லைப்ரரி ஆகும்.
இது நிலையானது.
வெவ்வேறு பிளாட்ஃபார்ம்களுக்கு இடையே செயல் படக் கூடியது.பேக்வர்ட்
கம்பேசபிலிடி உடையது.
நன்றி
முத்து கார்த்திகேயன்,மதுரை
Thursday, July 18, 2019
RDBMS என்பது என்ன?-பகுதி-1
RDBMS
என்பது ரிலேசனல் டேட்டாபேஸ் மேனேஜ்மென்ட் சிஸ்டம் ஆகும். இது டேட்டாவை ரோக்கள்,காலம்
ஆக அட்டவனை வடிவில் தருகின்றது.
ஒரு டேபிள்
என்பது ஒரு என்டைட்டியை ரெப்ரசெண்ட் செய்கின்றது.டேபிள் என்பது ரோஸ் மற்றும் காலம்
ஆகியவற்றின் காம்பினேசன் ஆகும்.ஒவ்வொரு காலமும் ஒரு என்டைட்டியின் பண்பைக் குறிக்கின்றது.
இது ஃபீல்ட் எனவும் அறியப்படுகின்றது.ஒவ்வொரு ரோவும் ஒரு ரிகார்ட் எனப்படுகின்றது.
உதாரணமாக
ஒரு Student எண்டைட்டியில் id, name, age,mark என ஃபீல்டுகள் இருக்கலாம். இந்த ஒவ்வொரு
காலமும் ஸ்டூடண்ட் குறித்த பிராப்பர்ட்டியை தருகின்றது.ஒவ்வொரு ரோவும் ஒரு குறிப்பிட்ட
ஸ்டூடண்ட் பற்றிய தகவல்களைத் தருகின்றது.
ஒவ்வொரு
காலமும் ஒவ்வொரு டேட்டா டைப்பாக இருக்கும்.உதாரணத்திற்க்கு id ,age, mark ஆகியவை இன்டிஜெர்
ஆக இருக்கும். அதே நேரத்தில் name என்பது varchar ஆக இருக்கும்.
RDBMS
பற்றிய கருத்து 1970-ல் EF CODD என்பரால் அறிமுகப்படுத்தப்பட்டது.1974-ல் IBM நிறுவனம்
ஆனது RDBMS-ன் புரோட்டா டைப் ஆன R என்பதை அறிமுகப்படுத்தியது.
ஆரக்கிள்
டேட்டாபேஸ் முதல் கமர்சியல் டேட்டா பேஸ் ஆகும், இது 1974-ல் வெளியிடப்பட்டது.
ஒரு டேபிளின்
காலத்தில் உள்ள டேட்டா ஆனது அதே டேட்டா பேஸில் உள்ள மற்றொரு டேபிளில் உள்ள காலத்தை
சார்ந்து இருக்கலாம் அதாவது ரிலேசன் இருக்கலாம் . அதனால் தான் இது ரிலேசனல் டேட்டா
பேஸ் எனப்படுகின்றது.
பிரைமரி
கீ மற்றும் ஃபாரின் கீ
பிரைமரி
கீ ஆனது ஒவ்வொரு ரோவையும் யுனிக் ஆக இருக்க அனுமதிக்கின்றது. அதாவது ஒரு குறிப்பிட்ட
ஃபீல்டோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட ஃபீல்டுகளின் காம்பினேசனோ யுனிக் ஆக இருக்க வேண்டும்.
அந்த காலம் பிரைமரி கீ எனப்படுகின்றது.
ஒரு குறிப்பட்ட
கீ ஆனது மற்றொரு டேபிளில் உள்ள ப்ரைமரி கீயை சார்ந்திருக்கலாம். உதாரணத்திற்கு
tblPerson என்ற டேபிளின் gender id ஆனது tblgender என்ற டேபிளின் id யை சார்ந்திருக்கலாம்.
இந்த ஃபீல்ட் ஆனது ஃபாரின் கீ எனப்படுகின்றது.
RDBMS
நடவடிக்கைகள்
RDBMS
ஆனது கிரியேட், ரிட்ரைவ்,அப்டேட், டெலீட் போன்ற ஆபரேசன்களை அனுமதிக்கின்றது.
கிரியேட்
என்பது டேட்டாவை இன்செர்ட் செய்ய அனுமதிக்கின்றது.
ரிட்ரைவ்
ஆனது கொரி மூலம் டேபிளில் இருந்து நமக்கு வேண்டிய தகவல்களைத் தருகின்றது.
ஒரு குறிப்பிட்ட
அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட ரோக்களில் உள்ள டேட்டாவை மாற்றி அமைக்க அப்டேட் பயன்படுகின்றது.
ஒன்று
அல்லது அதற்கு மேற்பட்ட ரோக்களை அகற்ற டெலீட் பயன்படுகின்றது.
தொடரும்.
நன்றி
முத்து கார்த்திகேயன், மதுரை.
Subscribe to:
Posts (Atom)

