Showing posts with label php in tamil. Show all posts
Showing posts with label php in tamil. Show all posts

Monday, January 25, 2021

PHP குக்கி

 


PHP குக்கி என்பது பிரவுசரில் சேமிக்கப்படும் சிறிய தகவல் ஆகும். இது பயனாளரை அறிந்து கொள்வதற்காக பயன்படுகின்றது.

குக்கி என்பது சர்வரில் உருவாக்கப்பட்டு பிரவுசரில் சேமிக்கப்படுகின்றது. அடுத்த தடவை பிரவுசரில் இருந்து கோரிக்கை அனுப்பும் பொழுது குக்கியும் சேர்ந்து அனுப்பப்படுகின்றது. எனவே அந்த குக்கியை வைத்து சர்வர் கோரிக்கை அனுப்புவர் பற்றி தெரிந்து கொள்கின்றது.


சுருக்கமாக குக்கி ஆனது சர்வரில் உருவாக்கப்பட்டு பிரவுசரில் சேவ் செய்யப்பட்டு அடுத்த தடவை கோரிக்கை அனுப்பும் பொழுது பிரவுசரில் இருந்து சர்வருக்கு அனுப்பப்படுகின்றது.

Php குக்கி ஆனது <html> டேக்கிற்கு முன்னாலேயே பயன்படுத்தப்படவேண்டும்.

PHP setcookie() ஃபங்க்சன்

PHP setcookie()  ஃபங்க்சன் ஆனது http response உடன் குக்கியை உருவாக்கப் பயன்படுகின்றது. ஒரு தடவை குக்கியை உருவாக்கிய பின் அதை $_COOKIE என்ற குலோபள் வேரியபிள் கொண்டு அனுகலாம்.

Syntax

  1. bool setcookie ( string $name [, string $value [, int $expire = 0 [, string $path   
  2. [, string $domain [, bool $secure = false [, bool $httponly = false ]]]]]] )  

சான்று.

  1. setcookie("CookieName""CookieValue");/* defining name and value only*/  
  2. setcookie("CookieName""CookieValue", time()+1*60*60);//using expiry in 1 hour(1*60*60 seconds or 3600 seconds)  
  3. setcookie("CookieName""CookieValue", time()+1*60*60, "/mypath/""mydomain.com", 1);

 

PHP $_COOKIE

 

$_COOKIE  எனப்படும் குளோபள் வேரியபிள் குக்கியை ஆக்சஸ் செய்யப்பயன் படுகின்றது.

சான்று

  1. $value=$_COOKIE["CookieName"];//returns cookie value  

PHP Cookie சான்று நிரல்

File: cookie1.php

<?php  

setcookie("user""KARTHIKEYAN");  

?>  

<html>  

<body>  

<?php  

if(!isset($_COOKIE["user"])) {  

    echo "Sorry, cookie is not found!";  

else {  

    echo "<br/>Cookie Value: " . $_COOKIE["user"];  

}  

?>  

</body>  

</html>  

Output:

Sorry, cookie is not found!

முதலில் குக்கி செட் ஆகாது ஆனால் பக்கதை ரிஃப்ரெஸ் செய்யும் பொழுது குக்கி செட் ஆகி விடும்.

Output:

Cookie Value: KARTHIKEYAN

PHP Delete Cookie

 Expiration தேதியை கடந்த காலத்தில் செட் செய்யும் பொழுது குக்கி டெலீட் ஆகின்றது

File: cookie1.php

  1. <?php  
  2. setcookie ("CookieName""", time() - 3600);// set the expiration date to one hour ago  
  3. ?>  

நன்றி

முத்து கார்த்திகேயன்,மதுரை.

contact: 91 96293 29142

ads Udanz

PHP செசன்(session)

 

 


PHP  செசன் என்பது ஒரு இணையப்பக்கத்திலிருந்து மற்றொரு இணையப்பக்கத்திற்கு தற்காலிகமாக தகவலை சேமிக்க உதவுகின்றது. அதாவது பயனர் அந்த இணையப்பக்கதிலிருந்து வெளியேரும் வரை தகவலை சேமிக்கின்றது.

இது பெரும் பாலும் இ-காமர்ஸ் இணைய தளங்களின் பொருளின் பெயர், விலை போன்ற தகவல்களை சேமிக்கப் பயன்படுகின்றது.

 PHP செசன் ஆனது ஒவ்வொரு பயனருக்கும்  தனித்தனி USER ID யை தருகின்றது.


PHP session_start() function

PHP session_start()  ஃபங்க்சன் ஆனது ஒரு செசனைத் தொடக்குவிக்கின்றது. ஏற்கனவே செசன் தொடக்கப்படிருந்தால் அதைத் தொடர்கின்றது. இல்லையெனில் புதிதாக தொடக்குவிக்கின்றது| Syntax

  1. bool session_start ( void )  

சான்று

  1. session_start();  

PHP $_SESSION

PHP $_SESSION ஆனது செசன் வேரியபிள்களின் அர்ரே ஆகும். இது செசன் வேரியபிள்களை மதிப்பிருத்தவும் பெறவும் பயன்படுகின்றது.

சான்று மதிப்பிருத்தல்

  1. $_SESSION["user"] = "Sachin";  

சான்று பெறுதல்

  1. echo $_SESSION["user"];  

PHP Session சான்று

File: session1.php

<?php  

session_start();  

?>  

<html>  

<body>  

<?php  

$_SESSION["user"] = "Sachin";  

echo "Session information are set successfully.<br/>";  

?>  

<a href="session2.php">Visit next page</a>  

</body>  

</html>  

File: session2.php

<?php  

session_start();  

?>  

<html>  

<body>  

<?php  

echo "User is: ".$_SESSION["user"];  

?>  

</body>  

</html>  

PHP Session Counter சான்று

File: sessioncounter.php

  1. <?php  
  2.    session_start();  
  3.   
  4.    if (!isset($_SESSION['counter'])) {  
  5.       $_SESSION['counter'] = 1;  
  6.    } else {  
  7.       $_SESSION['counter']++;  
  8.    }  
  9.    echo ("Page Views: ".$_SESSION['counter']);  
  10. ?>  

PHP செசனை அழித்தல்

PHP session_destroy() ஃபங்க்சன் ஆனது எல்லா செசன் வேரியபிள்களையும் அழிக்க பயன்படுகின்றது.

File: session3.php

<?php  

session_start();  

session_destroy();  

?>  

நன்றி

முத்து கார்த்திகேயன்,மதுரை.

 

ads Udanz

Saturday, November 12, 2011

php ஒரு அறிமுகம்.



Php  என்பது server side script  language ஆகும்.
இது ஒரு கட்டற்ற மென் பொருள் .
(open source software).
நிறைய database களை ஆதரித்தாலும் mysql  உடன்  அதிகம் பயன் படுத்தப் ப்டுகின்றது.
Php files  என்பது html மற்றும் script ஆகிய வற்றின் கலவையாகும்.
<HTML>
<HEAD>Sample PHP Script</HEAD>
<BODY>
The following prints "Hello, World":
<?php
    print "Hello, World";
?>
</BODY>
</HTML>
மேலே உள்ள நிரலில் <?php  மற்றும் ?> இடையே  உள்ள வ்ரிகள் php interprter ல் இயக்கப்ப்ட்டு plain html ஆக மாற்றப்ப்ட்டு பின் கீழ் வரும் படி உலாவியால் வெளியீடு செய்யப்ப்டுகின்றது.
The following prints "Hello, World":
Hello, World
Php மொழியானது பெரும் பாலும் c மொழியின் இலக்கிணத்தை ஒற்று வ்ருவதால் புதியவர்களால் எளிதாக கற்க முடியும்.


Comments(குறிப்பு வரிகள்)
Comments ஆனது ஒரு நிரலின் இயக்கம் பற்றி நிரலாளரால் எழுதப்படும் வரிகளாகும். இவை interpreter ல் இயக்கப்படாது.
Phpல் single line comment
// this is a comment
அல்லது
#this is also a comment
என்றோ எழுதப் படுகிறது.
Multi line comments:
/* this is a
Multi
Line comment  */
என்று /* மற்றும் */ இடையே எழுதப் படுகிறது.
மாறிகள்(variables)
Php ல் மாறிகள் weekly typed  மாறிகளாக உள்ளது.
அதாவது மாறிகள் உபயோகிக்கும் முன் அறிவிக்கப்படுவதில்லை. அவை assign செய்யப்படும் மதிப்புகளுக்கு ஏற்றாற் போல் மாறிக் கொள்கின்றது.
என்வே தான் அவை weekly typed  variables ஆக உள்ளது.
மாறிகளின் naming rules மற்ற மொழிகளைப் போலவே. எனிதும் இது $ குறியீட்டுடன்  ஆரம்பிக்கிறது. அதற்கு அடுத்து வருவது alphabet ஆகவோ அல்லது _(underscore) ஆகவோ இருக்கலாம்.மற்ற எழுத்துக்கள் alphabet அல்லதுnumeric அல்லது underscore ஆக இருக்கலாம் space வரக் கூடாது. . முற்றுப் புள்ளி வரக் கூடாது.
இரண்டு வார்த்தைகளாக வரும் பொழுது _ஆல் இணைக்கப்படலாம் அல்லது இரண்டாவது வார்த்தை capital letterல் ஆரம்பிக்கலாம்.
உதாரணம்:
$total_salary அல்லது $totalSalary.
--தொடரும்


ads Udanz