Sunday, September 15, 2019

Agile என்பது என்ன?



ஒருவர் ஒரு சாஃப்ட்வேரை உருவாக்க விரும்பி ஒரு மென்பொருள் நிறுவனத்தை அணுகுகின்றார். அவர்கள் ஒரு வருடத்தில் அந்த சாஃப்ட்வேரை தயார் செய்து தருகின்றனர்.
ஆனால் அந்த ஒரு வருடத்தில் நிறைய டெக்னாலஜி மாறியிருக்கின்றது. அவர் அந்த மாற்றங்களை அதில் புகுத்த விரும்புகின்றார்.

ஆனால் அதை மாற்றுவது கடினம். ஏனென்று பார்ப்போம். நாம் சாஃப்ட்வேர் டெவெலப்மென்ட் பற்றி அறிவோம். அதில் வாட்டர் ஃபால் மெத்தடாலஜியை பயன்படுத்துகின்றோம்.
முதலில்  requirements and analysis. என்ன தேவை என்று அலசுகின்றோம். பிறகு டிசைன், அடுத்து கோடிங்க், அடுத்து டெஸ்டிங்க், அடுத்து டிப்லாய்மென்ட் கடைசியில் மெயிண்டனன்ஸ்.இதுவே நாம் பின்பற்றும் வழிமுறைகளாகும்.
அதில் டெஸ்டிங்க் நிலையில் இருக்கும் ஒரு சாபஃப்ட்வேரில் நாம் மாற்றங்கள் செய்வது கடினம்.முதலில் இருந்து மறுபடி தொடங்க வேண்டும்.
ஆனால் ஒருவர் சாஃப்ட்வேரில் ஒரு வருடம் காத்திருந்து மேலும் அதில் மாற்ற்ங்கள் செய்ய இயலவில்லையென்றால் அது தேவையில்லாத்தது.
எனவே 17 நபர்கள் ஒன்று கூடி அஜைல் என்றொரு கொள்கையை வகுத்தார்கள். இதில் 4 மதிப்புகளும் 12 கொள்கைகளும் உள்ளன
.அதை செய்தால் டூயிங்க்க் அஜைல்(doing agile) அதையே தொடர்ந்து நடைமுறைப்படுத்தினால் பீயிங்க் அஜைல்(being agile)
முதலில் மதிப்புகள்.
1.Individual and interactions.
செயல்பாடுகள் , டூல்ஸ் ஆகியவற்றின் மேல் கவனம் செலுத்துவதை விட தனிப்பட்ட நிரலாளர் உடன் கவனம் செலுத்துவது. ஒவ்வொருவருக்கும் கோடிங்க் திறமை வேறுபடும்.
2. வொர்க்கிங்க் சாஃப்ட்வேர்
நமக்கு வேலை செய்யுல் கருவி(உ.ம் மொபைல்) தேவைப்படுமே அன்றி அதில் எவ்வாறு பணிபுரிவது என்ற டாக்குமெண்டேசன் அல்ல.
3. கஸ்டமர் கொலாபரேசன்.
சாஃப்வேரின் ஒவ்வொரு நிலையும் கஸ்டமருக்கு என்ன தேவை என கலந்தாலோசித்து பணிபுரிதல்.
4.மாற்றங்களை செய்தல்.
என்னென்ன மாறுபாடுகள் தேவை அதை செய்தல்.
12 கொள்கைகள்
1.     வாடிக்கையாளருடன் தொடர்ச்சி யாக ஆலோசித்து அவரை திருப்தி படுத்துதல்.
2.     நாம் சாட்ஃப்வேரின் எந்த நிலையில் இருந்தாலும் மாற்றங்களை செய்து கொடுத்தல்.
3.     குறுகிய கால அடிப்படையில் ஒரு சாஃப்ட்வேரின் ஒவ்வொரு பகுதியாக வாடிக்கையாளருக்கு அளித்தல்.
4.     பிசினஸ் செய்பவர்களும் நிரலாள்ரும் ஒருங்கினைந்து பணி புரிதல்.
5.     ஊக்குவிக்கப்பட்ட நிரலாளர்களை பயன்படுத்தி அவரை பணிபுரிய வைத்தல்.
6.     வாடிக்கையாளருடன் போனில் பேசுவதை விட ஃபேஸ் டு ஃபேஸ் கம்யூனிகேசன்.
7.     நாம் பணிபுரியும் சாட்வேர் நம்முடைய முன்னேற்றங்களை அளவிடும் ஒன்று.
8.     அஜைல் செயல்பாட்டு டெவெலப்மெண்டை தக்கவைத்து கொள்தல்.
9.     தொழில் நுட்பத்திற்கும் டிசைனுக்கும் எக்ஸ்சலண்ட் ஆக பணிபுரிதல் மீது தொடர்ச்சியாக கவனம் செலுத்துதல்.
10.                        எளிமை.
11.                        சிறந்த ஆர்க்கிடெக்சர் , தேவைகள் மற்றும் திட்டங்கள் செல்ஃப் ஆர்க்கனைஸ்டு டீமிலிருந்து வெளிப்படுதல்.
12.                        குறிப்பிட்ட இடை வெளியில் ஒரு சாஃப்ட்வேரை இதை விட சிறப்பாக எவ்வாறு செயல்படலாம் என வெளியிட்டு செயல் படுதல்.
நன்றி.
முத்து கார்த்திகேயன்,மதுரை.
ads Udanz

No comments:

Post a Comment