மேலே உள்ள
படத்தில் இரண்டு ஃப்ரேம்கள் உள்ளன. முதல் ஃப்ரேமில் ஒரு பட்டனும் ஒரு டேபிளும் உள்ளன.
இதில்
பட்டனை கிளிக் செய்தால் இரண்டாவது ஃப்ரேம் ஓபன் ஆக வேண்டும். அதில் உள்ள டெக்ஸ்ட்ஃபீல்டில்
டேட்டா எண்டர் செய்து ஆட் என்கின்ற பட்டனை கிளிக் செய்தால் டேட்டா முதல் ஃப்ரேமில்
உள்ள டேபிளில் சேர்ந்து கொள்ள வேண்டும்.
முதலில்
இரண்டு ஃப்ரேம்களையும் டிசைன் செய்திடவும்.
முதல்
ஃப்ரேமில் ஒரு பட்டன் வரைந்து கொள்ளவும். அடுத்து ஒரு டேபிள் அதற்கு கீழ் வரையவும்
டேபிளை
வலது கிளிக் செய்து டேபிள் கண்டண்ட்ஸ் என்பதை கிளிக் செய்யவும்.
அடுத்து
வரும் டயலாக் பாக்ஸில் காலம் என்ற டேப்பை கிளிக் செய்து மூன்று ஃபீல்டுகள்(
firstname, lastname, age ) உருவாக்கிக் கொள்ளவும்.
அடுத்து
டேபிளை வலது கிளிக் செய்து code organizer என்பதை கிளிக் செய்து அடுத்து வரும் லயலாக்
பாக்ஸில் static என்பதை கிளிக் செய்து கொள்ளவும்.
இரண்டாவது
ஃப்ரேமில் மூன்று லேபிள், மூன்று பெக்ஸ்ட்ஃபீல்ட்,
இரண்டாவது
ஃப்ரேமிம் பெயர் JFrame_TextFiled ஆகும்.
இப்பொழுது முதல் ஃபிரேமில் உள்ள பட்டனில் இரட்டை கிளிக் செய்து பின் வரும் நிரல் வரிகளை
சேர்த்துக் கொள்ளவும்.
private void
jButtonOpenActionPerformed(java.awt.event.ActionEvent evt) {
JFrame_TextFiled frameText = new JFrame_TextFiled();
frameText.setVisible(true);
frameText.pack();
frameText.setLocationRelativeTo(null);
frameText.setDefaultCloseOperation(JFrame.DISPOSE_ON_CLOSE);
}
அதன் கீழே
ஒரு static மெத்தட் ஒன்றை கீழ் கண்டவாறு எழுதவும்.
public static void AddRowToJTable(Object[] dataRow)
{
DefaultTableModel model = (DefaultTableModel)jTable1.getModel();
model.addRow(dataRow);
}
இதில் jTable1 என்பது டேபிளின்
வேரியபிள் பெயர் ஆகும்.
இரண்டாவது ஃப்ரேமில் உள்ள பட்டனை
டபிள் கிளிக் செய்து கீழ் வருமாரு நிரல் எழுதவும்.
private void
jButtonAddActionPerformed(java.awt.event.ActionEvent evt) {
JFRAME_JTABLE.AddRowToJTable(new Object[]{
jTextField1.getText(),
jTextField2.getText(),
jTextField3.getText(),
});
}
இதில் JFRAME_JTABLE என்பது முதல்
ஃப்ரேமின் பெயர்.
இப்பொழுது முதல் ஃப்ரேமை ரன்
செய்யவும். அதில் உள்ள பட்டனை கிளிக் செய்யவும். இரண்டாவது ஃப்ரேம் ஓபன் ஆகும் .
மூன்று டெக்ஸ்ட்ஃபீல்ட்களிலும் டேட்டா எண்டர் செய்து பட்டனை கிளிக் செய்யவும்.
இப்பொழுது முதல் ஃப்ரேமில் உள்ள டேபிளில் டேட்டா ஆட் ஆகும்.
நன்றி.
முத்து கார்த்திகேயன்,மதுரை.
TO LEARN COMPUTER COURSES IN MADURAI CONTACT :91 96293 29142
No comments:
Post a Comment